Friday, 8 Jan 2010
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
தக்காளி
உலகில் அனைவருக்கும் நன்கு அறியப்பட்டதும் அன்றாடம் நமது உணவுத் தயாரிப்பின் முக்கிய இடம்பெறும் ஒரு சிறந்த காய்கறி வகையைச் சேர்ந்த டொமேட்டோ எனப்படும் தக்காளியைப் பற்றிப் பார்ப்போமா?
பொதுவாகவே நம்மவரால் தக்காளிப்பழம் என்றுதான் கூறப்பட்டாலும், பச்சை தக்காளியும் பாவிப்பது என்பது நமது வீட்டில் சகஜம்தானே! உலகில் அனைத்து நாட்டினரும் தங்களது உணவில் பயன்படுத்தும் பல்வேறு காய்கறிகளில் தக்காளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தென் அமெரிக்காவில் முதன் முதல் பயிரிடப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும், ஆப்ரிக்கா, இந்தியா, சைனா என உலகின் அனைத்து பாகங்களிலும் இன்று தக்காளி பாவிக்காத நாடுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு, அனைவரும் தக்காளியை எண்ணற்ற முறைகளில் தங்கள் உணவு வகைகளில் பயன்படுத்துவதை நாம் காணக்கூடியதே. கிட்டத்தட்ட நூறு வகையான தக்காளி, கலர் கலராகவும், சிறிதாகவும், பெரிதாகவும் தான் எத்தனை வகைகள், அப்பப்பா, அன்றாடம் விற்பனைக் கடைகளில் அவற்றை பார்க்கும்போதே, பச்சையாகக் கூட சாப்பிடத் தோன்றும். அந்த அளவிற்கு அதன் நிறம், அமைப்பு மற்றும் அதன் தாக்கம் ஆகியவை நம்க்குள் ஏற்பட்டுள்ள சுவையினால் தானே! உருளைக்கிழங்கிற்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள தக்காளியின் சிறப்புகள் பலதரப்பட்டவையாகும். மலிவான விலையில் பல்வேறு சத்துகள் நிறைந்த பழம் தக்காளி. உடலுக்கு நல்ல பலத்தையும், இரத்த விருத்தியும் முக்கியமாகக் குளிர்ச்சியையும் அளிக்கவல்லது.
தக்காளியில் வைட்டமின் ஏ, பி, பி2 மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்தும் தவிர சுண்ணாம்பு சத்தும் உள்ளது. உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. அதனால் இப்பழத்தை ஒரு டானிக் போல அன்றாடம் எந்த வகையிலாவது சாப்பிட்டு வந்தால் களைப்பையும் நா வறட்சியையும் போக்கி நல்ல பலனளிக்கும். உடல் வளர்ச்சியை அளிப்பதோடு தோலையும் மிருதுப்படுத்தி மினுமினுப்பை அளித்து உடல அழகை பராமரிக்க வைக்கும். அதுபோன்றே நரம்புத் அழகை பராமரிக்க வைக்கும். அதுபோன்றே நரம்புத் தளர்ச்சியைப் போக்கி தேகத்தில் பலம் பெற வைப்பதோடு மூளையின் ஆற்றலை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது. கண் பார்வையில் தெளிவு ஏற்படுத்தி, கண் தொடர்பான பல்வேறு நோய்களைத் தடுக்கும், குணப்படுத்தும் குணம் தக்காளிக்கு உண்டு. பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலத்தை அளித்து வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தக்காளிப் பழத்தை அதிக அளவில் தினசரி சாப்பிட்டு வந்தால் தாய்க்கும், குழந்தை வளர்ச்சிக்கும் கருவிற்கும் சிறந்த தேக ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பித்த உடம்புவாகு உள்ளவர்களும், வாத நோயால் வருந்துபவர்களும், ஆஸ்த்துமா நோயாளிகளும் தக்காளிப் பழத்தை அளவுடன் சாப்பிட வேண்டும், இல்லையேல் நோயின் தொல்லை அதிகரிக்கும். அதுபோன்றே உடல் பெருத்தவர்கள், மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயிற்றில் அமிலத்தன்மை கூடுதலாக உடையவர்கள் ஆகியோர் தக்காளியை அதிகம் பாவிக்கக்கூடாது என்று கூறப்பட்டாலும் இயற்கை இரசாயன ஆராய்ச்சி இவற்றை ஆதாரமற்றவை எனக் கூறுகிறது.
முக்கியமாக டாக்சின் எனப்படும் நச்சுப்பொருளை அகற்றி, சிறுநீரகங்களின் செயல்பாடுகளைத் தூண்டி சீராக வைத்திருக்க உதவுகிறது. உடலில் உற்பத்தியாகும் சர்க்கரையையும, அல்கலின் எனும் உப்புச் சேர்க்கையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. முக்கியமாக நமது உடலுக்கு தேவையான விட்டமின்களான ஏ மற்றும் சி ஆகியவற்றை அதிக அளவில் தருபவை தக்காளிப் பழங்கள். இரவில் பார்வை மங்குதலின் குறையைப் போக்கக்கூடியது. லிகோபின் என்ற காம்பவுண்ட் சத்து தக்காளியில் இருப்பதால் ஒரு சில புற்றுநோய்களைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. மேலும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் தக்காளி சிறந்த நிவாரணியாகும்.
தினசரி காலை வேளையில் எந்தவித காலை உணவும் அருந்தாமல் இரண்டு டம்ளர் தக்காளி ஜூஸ் பருகிவந்தால் உடல் எடை எளிதாகக் குறைவதோடு, புத்துணர்ச்சியும் அழகும் கூடும்.
நமது குடும்பங்களில் அன்றாடம் சமையலில் தக்காளியை பலவிதமாக உபயோகப்படுத்திச் சமைக்கின்றோம். அவற்றில் தக்காளி சாம்பார், ரசம், கூட்டு, பச்சடி, ஊறுகாய் ஆகியவை மிகவும் பிரபலமாகும். மேலும் தக்காளி ஜாம், ஜூஸ் மற்றும் எசன்ஸ் என்பவையும் டானிக் வகையறாக்களும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சிலருக்கு தக்காளியை உபயோகிப்பதால் சளி, இருமல் தொல்லை போன்ற அலர்ஜி ஏற்படுவதாகக் கூறுவதுண்டு. எனினும் மருத்துவரை ஆலோசித்து அதற்கேற்றாற் போல் உபயோகப்படுத்துவது நன்மையை பயக்கும். முக்கியமாக சிறுவர்களுக்கு தக்காளியை பலவிதமான உணவுத் தயாரிப்பாகக் கொடுத்து வந்தால், பசியையும், ஜீரண சக்தியையும் கொடுத்து தேக வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமைவதோடு, விரும்பிச் சாப்பிடுவார்கள். பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு தக்காளிச் சட்னி, கூட்டு ஆகியவை சிறந்ததாகும். அதுபோன்றே தக்காளி சூப், தக்காளி கிச்சடி, சாதம் ஆகியவையும்.
இப்படியாக தக்காளியின் உபயோகம் என்பது உணவிற்கு கூடுதல் சுவையும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உபயோகப்படுத்துவதின் மூலம் பல்வேறு நோய்களைத் தவிர்க்கவும் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி, அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான ஒரு இயற்கைப் படைப்பாக விளங்குகிறது.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































