Friday, 8 Jan 2010
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
காஞ்சிபுரம் திருக்கச்சிநெறிக் காரைக்காடு
திருக்காலீசுவரன் கோவில் தலவிருட்சம்
காரைச் செடி
(PARKINSONIA ACULEATA L.)
CANTHIUM PARVIFLORUM, LAM.; RUBIACEAE
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :
அன்றாலின் கீழிலிருந்தங்
கறம்புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற்
கோளரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரம்மூன்றும்
ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி
நெறிக்காரைக் காட்டாரே
தமிழகத்தில் புஞ்சை நிலங்களில் ஆடு, மாடு நிலத்துக்கு உள்ளே நுழையாதபடி வேலி அமைக்க தமிழக விவசாயிகள் காரைச் செடியை நடுவார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதை அதிக அளவில் காண முடிகிறது.
திருக்கச்சிநெறிக் காரைக் காடு காரைத் திருநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது.
காரைச்செடி முட்கள் நிறைந்த செடியாகும். இதில் பட்டாணி அளவிற்கு சிறிய பழங்கள் இருக்கும். இதை மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இது சாதாரணமாக 200 மில்லி மழை கொண்ட வறட்சியான பகுதிக்கென்றே இயற்கை அன்னையால் உருவாக்கப்பட்ட மரம், கடுமையான கோடை காலத்தில் மஞ்சள் வண்ணப் பூக்களை விரித்து அழகு சோக்கும். சின்னஞ் சிறுவர்களுக்கு ருசிக்க புரதம் நிறைந்த பருப்பைத் தரும். கால்நடைகளுக்கு தீவனமாகப் பயனாகிறது.
பார்க்கின்சோனியா அக்குலியேட்டா (PARKINSONIA ACULEATA L.) என்ற அறிவியல் பெயர் கொண்டு “சிசால்பினியேசி” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இனமாகும். இதனை யுனானியில் விலாயத்தி பபூல் (சீமை கருலேன்) என்பர்.
தமிழகத்தில் வறண்ட பகுதிகளில் வளருகிறது. பக்கிங்காம் கால்வாய்க் கரைகளிலும் காணப்படுகிறது.
இது ஒரு குறுமரமாகும். 3லிருந்து 5 மீட்டர் உயரம் வரை வளரும். வருடம் முழுவதும் சிறுபூக்கள் இருந்தாலும் அக்டோபர், மார்ச் மாதங்களில் அதிக அளவில் பூக்களைப் பார்க்கலாம்.
முள் நிறைந்த குத்துச் செடியாக காரை வளர்கிறது. இதன் காய்கள் பச்சையாகவும், பழுக்கப் பழுக்க மஞ்சள், கறுப்பு நிறத்தில் மாறுகிறது. காரை 2 வகைகளில் உண்டு. 1. குத்துக்காரை, 2 பெருங்காரை. இச்செடியின் இலைகளும், பழங்களும் மருத்துவக்குணம் கொண்டது. சுவையில் துவர்ப்பும், இனிப்பும் உடையது. இதன் தன்மை உஷ்ணத்தை அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை
பழத்தை உடைத்து விதையை நீக்கி, உலர்த்தி வைத்துக் கொள்ளவும், இரவில் 1 டம்ளர் தண்ணீரில் 7 கிராம் பழங்களை ஊறவைத்து தினசரி 2 வேளை குடித்து வரலாம். இது நரம்புகளையும், தசை நார்களையும், தசைகளையும் சுருங்க வைக்கச் செய்யும் தன்மை கொண்டது.
இலைகள் வியர்வை உண்டாக்குகிறது. கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.
விஞ்ஞானிகள் காரைச் செடியை ஆராய்ந்து பார்த்து கீழ்காணும் சத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
காய்ந்த நிலையில் இலைகளில் உள்ள சத்துக்கள்
மொத்தப் புரதம் : 7.5%
கொழுப்பு : 1.8%
மாவுப்பொருள் : 44.8%
நார்ப்பொருள் : 29.0%
உலோக உப்புக்கள் : 16.9 %
பாஸ்பரஸ் : 0.17%
கால்சியம் : 4.16% என அறியப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
* மண் அரிப்பைத் தடுக்கிறது. வண்டல் நிலங்களில் வளர்ந்து காற்று மூலமாக ஏற்படும் மணல் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.
* சுண்ணாம்பு மிகுதியாக உள்ள பகுதிகளிலும் வளர்ந்து வருவாய் பெற்றுத் தரும் மரம்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
தொண்டை நாட்டில் காஞ்சி நகருக்கருகில் உள்ள திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்னும் திருக்கோவிலின் தலவிருட்சமாக காரை வணங்கப்படுகிறது.
காரைச் செடி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சி நெறிக் காரைக்காடு எனும் ஊரில் உள்ள திருக்காலீசுவரன் கோவிலின் தலவிருட்சமாக அமைந்துள்ளது. இக்கோவிலின் குளத்தைச் சுற்றி காரைச் செடிகள் புதர்போல் படர்ந்திருப்பதால் இந்த ஊருக்கு காரைக்காடு என்னும் பெயர் வந்தது. இந்தக் கோவிலில் காரைத் திருநாதேஸ்வரர், சத்தியவிரத நாதர், காமாட்சியம்மை சுவாமிகள் உள்ளன. இங்கு காரைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/12/31 மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகர் கோயில் தலவிருட்சம் கல்அத்தி
2009/12/25 ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்
2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்
2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































