Tamilvanan » Blog Archive » Aishwarya Rai gives dubbing voice in Tamil for ‘Ravan’

Aishwarya Rai gives dubbing voice in Tamil for ‘Ravan’

ராவண் படத்திற்காக தமிழைக் கொஞ்ச தயாராகும் ஐஸ்வர்யா ராய்

ravan.jpg

ராவண் (அசோகவனம்?) படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாகவும், தமிழ்ப் பதிப்பில் விக்ரம் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இரு பதிப்பிலும் கதாநாயகியாக  ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

ராவண் படத்தின் தமிழ்ப் பதிப்பில், தன்னுடைய சொந்தக்குரலில் பின்னணிக் குரல் தர ஐஸ்வர்யா ராய் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் ஏற்கனவே மூன்று (இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) படங்களில் நடித்திருப்பதாலும், மேலும் இரண்டு  படங்களில் நடித்துக்கொண்டிருப்பதாலும் தமிழைக் கொஞ்சி கொஞ்சி பேசுவதில் தேறிவிட்டார் ஐஸ்வர்யா ராய். இயக்குநர் மணிரத்னம் கேட்டுக்கொண்டதால் பின்னணிக் குரல் தர ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொண்டாலும், கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்படலாமாம். ஐஸ்வர்யா ராய்க்கு சந்தியா அல்லது ஐஸ்வர்யா தனுஷ் இருவரில் ஒருவர் பின்னணிக் குரல் தரக்கூடும் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

Related Posts Title

Tags: ,

Leave a Reply