Goa : Movie review

Posted on Sunday 31 January 2010

கோவா : திரை விமர்சனம்

goa-movie.jpg

கோவா போவது இளைஞர்களின் கனவு. அப்படி கோவா போன மூன்று இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘கோவா’.

மதுரை பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் மூவரும் நண்பர்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி, வெளியூரு சென்று சினிமா பார்த்த குற்றத்திற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். மூன்று பேரும் மறுபடியும் ஊரை விட்டு ஓடுகிறார்கள்.

மதுரையில் நண்பர் ஒருவன் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதைப் பார்ப்பவர்கள், கோவா போய் தாங்களும் வெளிநாட்டுப் பெண்களைக் காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று குருட்டுக் கணக்கு போடுகிறார்கள். அதன்படி கோவாவுக்குச் செல்கின்றனர்.

ஜெய், பாடகி பியாவை விரும்புகிறார். வைபவ், சிநேகாவிடம் சரண்டர் ஆகிறார். பிரேம்ஜி, வெள்ளைக்காரப் பெண்ணிடம் மனத்தை பறிகொடுக்கிறார். மூன்று பேரும தங்கள் காதலை ஜெயித்தெடுத்தார்களா என்பது மீதிக் கதை.

ஒரு மது - நடன மேடையில் தோன்றி விட்டு காணாமல்போகும் சிநேகா மீண்டும் எப்போது வருவார், யாருடன் ஜோடி சேருவார் என எதிர்பார்க்க வைக்கிறார். உல்லாச கப்பலுக்கு சொந்தக்காரரான அவர், பிரசன்னாவை அடித்துத் துரத்திவிட்டு வைபவ்வை திருமணம் செய்துகொள்வதும், கோபம் வரும் போதெல்லாம் வைபவ்வை அடிப்பதும்… சிநேகாவுக்கு வித்தியாசமான ரோல்தான்.

ஊர் அம்மன் கோயிலில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை வைபவ் சிநேகாவிடம் கொடுப்பதும் பிறகு, அவற்றை மீட்க கப்பலுக்குள் நுழைந்து போராடுவதும் திகிலுடன் கலந்த திருப்பு முனைகள்.

ஜெய் - பியா, வைபவ் - சிநேகா ஜோடிகளை விட பிரேம்ஜி அமரன் - வெள்ளைக்காரப் பெண் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் விறுவிறுப்புடன் கதையை நகர்த்திய இயக்குநர் வெங்கட் பிரபு இடையில் கொஞ்சம் தடுமாறினாலும், கடைசியில் சுதாரித்துக்கொண்டு பிரமிப்பூட்டுகிறார். அவருக்குப் பக்கபலமாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனும் இருந்திருக்கிறார்கள்.

கோவா என்றாலே சரக்கு அடிப்பதும், சைட் அடிப்பதும்தானா என்று எழும் கேள்வியை அடக்காமல் இருக்க முடியவில்லை.

admin @ 11:01 pm
Filed under: Review
Nayantara has no ambition in life

Posted on Sunday 31 January 2010

பெயர், புகழுடன் இருக்க ஆசை. ஆனால் லட்சியம் இல்லை! : நயன்தாரா

nayantara1.jpg

னக்கு லட்சியமே கிடையாது என்று நயன்தாரா கூறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர மேலும் கூறியுள்ளதாவது:

“நான் திரையுலகிற்கு வந்தது டிசம்பர் 2003. திரைத்துறைக்கு வருபவர்கள் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். முன்னணி நடிகர் நடிகையாக வேண்டும் என்று எ ண்ணுவார்கள். எனக்கு அப்படி எந்த ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்துவிட்டு போய்விட த்தான் ஆசைப்பட்டேன். ஆனால், சினிமா என்னை இழுத்துவிட்டது. நானே எதிர்பார்க்காத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்து விட்டது. சினிமாவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பிட்டு கூறும்படி எந்த லட்சியமும் எனக்கில்லை. நல்ல படங்களில் நடிக்க வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறியிருப்பவர்,

தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு, “அது எப்போது, யாருடன் நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், சரியான நேரத்தில் நடக்கும். எப்போது நடந்தாலும் என் திருமணம் அம்மா அப்பா சம்மதத்துடன்தான் நடக்கும்” என்று பதில் அளித்திருக்கிறார்.

admin @ 10:21 pm
Filed under: kollywood
Aval Peyar Tamilarasi

Posted on Sunday 31 January 2010

காதலியைத் தேடும் காதலன்
aval-peyar-tamilarasi.jpg

மோசர் பேர் நிறுவனத் தயாரிப்பான ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஜெய், நந்தகி, தியானா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து மீரா கதிரவன் கூறுகையில், “காதலியைத் தேடி செல்லும் வாலிபனின் கதை இது. மூன்று வித பருவங்களில் ஜெய் வருகிறார். திருநெல்வேலி பகுதியில் கதை நடக்கிறது. இந்த படத்து கதாபாத்திரங்கள் படு யாதர்த்தமானவைகளாக இருக்கும். நம்முடைய உறவினர்கள் போல, நம்முடன் பயணிப்பவர்கள் போல, நண்பர்கள் போல. மனதைத் தொடுகிற அல்லது பாதிக்கிற வாழ்க்கை படத்தில் இருக்கும்” என்றார்.

admin @ 9:18 pm
Filed under: kollywood
AR Rahman wins 2 Grammys for Slumdog Millionaire

Posted on Sunday 31 January 2010

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்
tia-carrere-presents-ar-rahman-with-the-best-song-award-at-the-grammy-awards.jpg

ந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பாடல் மற்றும் சவுண்ட் ட்ராக் ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் தரப்பட்டன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறு மாலை (இன்று காலை) நடைபெற்ற 52ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் குல்சார் எழுதி, சுக்விந்தர் பாடிய ‘ஜெய் ஹோ’ பாடல் சிறந்த திரைப்படப் பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசை சேர்ப்பிற்கான விருதும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

விருதுகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேடையில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “இந்தியாவுக்கு மீண்டும் முன்னிலை கிடைத்துள்ளது. அதிசயிக்கத்தக்க வகையில் இரண்டு கிராமி விருதுகளை பெற்றிருக்கிறோம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்திருக்கிறார். அவர்உங்களை
ஆசீர்வதிக்கவும் செய்வார்” என்றார்.

admin @ 8:41 pm
Filed under: kollywood
Theeradha Vilaiyattu Pillai

Posted on Sunday 31 January 2010

theeradha-vilaiyattu-pillai.jpg

Artist: Vishal, Neetu Chandra, Sarah, Tanushree Dutta
Direction: Thiru
Production: Vikram Krishna
Banner: G.K Film Corporation
Music: Yuvan Shankar Raja

admin @ 2:08 am
Filed under: trailer
Cheating In China Marathon : Runners Caught

Posted on Saturday 30 January 2010

ஓடாமல் ஓடிய ஒட்டக்காரர்கள் : சீனாவில் 30 பேர் சான்றிதழ் பறிப்பு
china-marathon.jpg

சீனாவில் சமீபத்தில் நடந்த நீண்டதூர ஓட்டப் போட்டியில் வெற்றிக்கோட்டை முதலில் தொட்ட 100 பேரில் 30 பேருக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்ததால், அவர்களுக்கு தரப்பட்ட சான்றிதழ் திரும்ப பெறப்பட்டுள்ளது.

சீனாவில் ஆண்டுதோறும் ஷியாமென் சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டி’ நடந்து வருகிறது. இவ்வருட போட்டி சமீபத்தில் நடந்து. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஓட்ட தூரமான 26 கிலோ மீட்டரை நூற்றுக்கணக்கானவர்கள் கடந்தனர். ஆனாலும் முதல் 100 பேர் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நாயகர்கள். இவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஓட்டப் போட்டியை விடியோவில் பார்த்தபோதுதான் பலரும் தகிடுதத்தம் செய்து வெற்றி பெற்றது தெரியவந்தது. விடியோ காட்சியில் ஓரிடத்தில் இருந்தவர் அடுத்ததடுத்த சில, பல கிலோ மீட்டர் தூரங்களில் காணாமல் போயிருந்தார். அப்படி காணாமல் போனவர்கள் குறிப்பிட்ட தூரத்தை காரில் கடந்துவிட்டு பிறகு சாலையில் இறங்கி ஓடி முடித்தது தெரிய வந்துள்ளது. இப்படி ஏமாற்றி, தகிடுதத்தம் செய்ததாக 30 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தகுதி இழப்பு அடைவதாக போட்டியை நடத்திய ஃப்யூஜியன் நகர விளையாட்டு அமைப்பு கூறியுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலோர் மாணவர்கள். இவர்களில் பலர் தான் இப்படி ஏமாற்றியுள்ளனர். காரணம், சீன பல்கலைக்கழகங்களில் சேர நடக்கவிருக்கும் ‘கவோகாவோ’ என்ற நுழைவுத் தேர்வுதான். இந்த நுழைவுத் தேர்வு கடுமையாக இருக்கும். ஷியாமென் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 26 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 34 நிமிடங்களில் கடந்து, வெற்றி பெற்று வருபவர்களுக்கு, இந்த நுழைவுத் தேர்வில் கூடுதலாக 2 மதிப்பெண்கள் தரப்படுமாம்.

இந்த 2 மதிப்பெண்களைப் பெறத்தான் மாணவர்கள் ஓடி ஓடி ஏமாற்றியிருக்கிறார்கள். தங்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

admin @ 2:19 am
Filed under: news
Men who tried to defrost car, only succeeds in burning it up

Posted on Saturday 30 January 2010

பனியைக் கரைக்க முயன்று காரே எரிந்த பரிதாபம்!
frosen-car.jpg

ஜெர்மனி ஹில்டிஷேய்ம் நகரைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் பனியில் உறைந்திருந்த காரை மீட்டெடுக்க செய்த முயற்சியில், கார் எரிந்து நாசமானது.

கடும் உறைபனி நிலவும் சீதோஷ்ண நிலையில், அவருடைய வீட்டுவாசல் முன் நிற்க வைத்த கார் பனியில் உறைந்து விட்டது. பனியை உருக்கி காரை மீட்டெடுக்க வசதியாக காருக்கு அருகில் ஹீட்டர் ஒன்றை வைத்தார் அவர். அப்படி வைத்தவர் ஏதோ வேலையாக வீட்டுக்குள் சென்றுவிட்டார். சற்றுநேரத்திற்கெல்லாம் ‘டமால்’ என இரண்டு முறை வெடிச்சத்தம் கேட்டது. பதறி அடித்து வெளியே வந்தவர் கண்களில் கார் எரிந்துகொண்டிருந்தது தெரிந்தது.

தீயணைப்புத் துறை வந்து சேர்வதற்குள் கார் முழுக்க எரிந்து நாசமானது. அப்போது எழுந்த தீ பட்டு அவருடைய வீட்டுச் சுவரும் கரிப் பூசிக்கொண்டது. காரில் உறைந்திருந்த பனிக்கட்டிகளை கரைக்க முயன்று கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் மதிப்பிலான சேதத்தை அடைந்திருக்கிறார் இந்த தாத்தா.

admin @ 1:49 am
Filed under: news
Appavi Trailer

Posted on Saturday 30 January 2010

appavi.jpg

Direction: R.Raghuraj
Producer: V.L.Dhandapani
Music: Joshua Sridhar

admin @ 1:44 am
Filed under: trailer
I do glamour in song sequence only, Navneeth Kaur

Posted on Friday 29 January 2010

பாட்டில் மட்டும் கவர்ச்சி : நவ்னீத் அறிவிப்பு

navneeth-kaur.jpg

பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருப்பதாக நவ்னீத் கவுர் கூறியுள்ளார்..

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்னீத் கவுர். பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சி என்கிற கொள்கை குறித்து அவர் வாய் திறக்கையில்,

“அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் வரும் பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். குடும்பபாங்கான வேடங்களில தோன்றி, பாடல்காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக நடிப்பதை என்னுடைய கொள்கையாக வைத்துள்ளேன். தமிழில் முதல் படமான அரசாங்கம் படத்தில் பாடலிலும் குடும்பபாங்காகத்தான் நடித்திருந்தேன். இனி அதுபோல நடிக்க மாட்டேன். ரசிகர்களின் விருப்பத்திற்காக குடும்பபாங்கும் கவர்ச்சியும் கலந்து நடிக்கப்போகிறேன்” என்று கூறியுள்ள நவ்னீத் கவுருக்கு அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசின் மனைவியாக வேடம். இதில், நகைச்சுவையிலும் கலக்கி இருப்பதாகக் கூறும் அவர் தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

admin @ 11:33 pm
Filed under: kollywood
I will set a trend, says composer Thaman

Posted on Friday 29 January 2010

எனக்கொரு புதுப்பாதை கிடைக்கும் : இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை

thaman-s.jpg

குத்துப்பாட்டு இன்றைய தேவை என்கிறார் நடிகர் தமன், ஸாரி இசையமைப்பாளர் தமன். பாய்ஸ் படத்தில் நடித்த தமன் இப்போது பரபரப்பான இசையமைப்பாளர். தமிழில் அய்யனார், முன்தினம் பார்த்தேனே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் பிருந்தாவனம், ரவி தேஜா நடிக்கும் படம் என்று பரபரக்கின்றார் தமன்.

இசையில் மூழ்கி விட்டால் அதை தாண்டி வெளியில் வர முடியாது என்று பேட்டியளித்திருக்கும் தமன் அதனால் தான் நடிகர் தமன் காணாமல் போய்விட்டார் என்கிறார். இசையில் புதுமையை ப் புகுத்த எண்ணும் தமன், அதற்கான முன்னோடிகளாக இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மானை கருதுகிறார். இவர்களுடைய இசையைக் கேட்டுதான் இசையமைப்பாளர் ஆனதாகக் கூறும் தமன், தனக்கென்று புதுப்பாதை அமையும். அதற்கேற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வேண்டும் என்கிறார்.

குத்துப்பாட்டா மெலடியா.. எது உங்க சாய்ஸ் என்ற கேள்விக்கு பதிலளித்த தமன், “ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இசையமைப்பதுதான் எங்கள் வேலை. இன்றைக்கு எல்லாவிதமான பாடல்களும் தேவையாக இருக்கிறது. சில படங்களில் வெவ்வேறு விதமான பாடல்கள் அமையாவிட்டாலும் ஒரு குத்துப்பாட்டாவது நிச்சயம் வேண்டும் என்று நினைக்கிறேன். ஆயிரம் மெலடிக்கள் நெஞ்சுக்குள் நின்றாலும் நம்மை அறியாமலேயே ஆட வைப்பது குத்துப்பாட்டுதானே” என்கிறார்.

முன்னணி இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜ் வாயால் தனக்குப் பிடித்த இசையமைப்பாளர் என்று ஷொட்டு வாங்கியிருக்கும் தமன் தனி ஆல்பம் செய்யும் முனைப்பிலும் இருக்கிறார்.

admin @ 11:10 pm
Filed under: kollywood