வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
வியட்நாமில் எனக்குத் துணையாக இருந்து எல்லாவிதமான உதவிகைளயும் செய்ய முன்வந்த சிவராம் உடனே இந்தியாவுக்குத் திரும்ப இருக்கிறார் என்கிற செய்தி எனக்கு மிகவும் ஏமாற்றம் தந்த செய்தியாகும்.
“இதை அவரிடம் நான் சொன்னபோது அதனாலென்ன? உங்கள் மீது நல்லன்பு கொண்ட பலர் என் நட்பு வட்டத்திலேயே இருக்கிறார்கள். நீங்கள் வருகிறீர்கள் என்று சொன்னதுமே அவர்கள் மிக ஆர்வமாக ஆகிவிட்டார்கள். சொல்லப்போனால் உங்களை உபசரிக்க அங்கு போட்டியே நடக்கிறது”
“அப்படியா? என்னால் நம்ம முடியவில்லை”
“போய்ப் பார்த்தால்தான் நம்புவீர்கள். நான் அங்கு இல்லாத குறையே தெரியாதபடி பார்த்துக் கொள்வார்கள்.
“ஆனாலும்…”
“எனக்கேகூட மன்ககுறையாகத்தான் இருக்கிறது என்ன செய்வது? கடமை அழைக்கிறது.”
“கடமை முக்கியம். பாருங்கள். அறிமுகங்களை வைத்து நான் சமாளித்துக் கொள்கிறேன்.” வியட்நாம் என்னுடைய இலக்கு என்றாலும் அப்படியே பக்கத்து நாடுகளையும் பார்த்துவிட வேண்டும். வியட்நாம் லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சூழப்பெற்று இருக்கிறது.
தாய்லாந்து பார்த்தாயிற்று. எனவே இவ்வளவு தூரம் போகும்போது லாவோஸ், கம்போடியாவை விடக்கூடாது.
“இங்கும் அறிமுகங்கள் கிடைக்குமா?”
“ஒன்றும் பிரச்னையில்லை” என்றார்.
“அடேயப்பா!” என்று வியந்து என் உணர்வை வெளிப்படுத்தினேன். இப்படியா நாட்டுக்கு நாடு ஒருவரால் அறிமுகங்கள் தர முடியும்? நான் வியட்நாமை அடைய முதலில் ஹாங்காங் செல்லவேண்டியிருந்தது. ஹாங்காங்கிலிருந்து ஹனாய் நகருக்கு எனக்கு விமானம் பிறகு ஹனாயிலிருந்து சியாம் ரியாப் எனப்படும் கம்போடிய நகருக்கு அடுத்து விமானம்.
ஹாங்காங்கிலிருந்து வியட்நாம் மிகச் சரியாக மதியம் 2.55க்கு புறப்பட்டு விட்டது. 3.55க்கு ஹனாயைச் சரியாக அடைந்துவிட்டது. இதைப் படிப்பவர்கள் ஓ! ஹாங்காங்கிற்கும் வயட்நாமுக்கும் ஒரு மணி நேரம் தானோ என்று நினைப்பார்கள்.
ஆனால் ஹாங்காங்கிற்கும் வியட்நாமுக்கும் இடையே கடிகாரப்படி ஒரு மணி நேர வித்தியாசம் உண்டு. ஆமாம் ஹாங்காங்கில் 2.55 என்றால் வியட்நாமில் 1.55தான். நான் 3.55க்கு ஹனாயை அடைந்தால் 2 மணி நேரப் பயணம் என்பதே உண்மை.
மிகச் சரியாக ஒரு மணி நேரத்தில் அடுத்த விமானம் பிடிக்க வேண்டும். இந்த விமானம் ஹனாயிலிருந்து சியாம் ரியாப்புக்குச் செல்வது ஏதோ உடனே அடுத்த விமானத்தில் உட்கார வைத்துவிடுவார்கள் என்று பார்த்தால் படுத்தினார்கள்.
பன்றிக் காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா? வேறு சளித்தொல்லை ஏதும் இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி கேட்டுக் குடையும் பெரிய தாள் ஒன்றைக் கொடுத்து பூர்த்தி செய்து தரச் சொன்னார்கள்.
இவ்வளவு பயணிகளும் பூர்த்தி செய்து கொடுத்து, மறுபடி பாதுகாப்புச் சோதனை நடத்தி விமனாத்தைப் பிடிக்க உதவுவார்களா அல்லது கோட்டைவிட வேண்டியதுதானா? வியட்நாம் ஏர்லைன்ஸ் வேறு சரியான நேரத்தைக் கடைப்பிடிக்கும் நிறுவனம் என்று எனக்குச் சொல்லித் தரப்பட்டிருந்தது.
சியாம் ரியாப் விமானத்தைப் பிடிக்கவிட்டால் அதில் இரு பிரச்னைகள் ஏற்படும்.
சியாம்ரியாப்பில் எனக்கெனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அறை வாடகை (5000 ரூ) காலி!
அடுத்து, இந்த விமானத்தைக் கோட்டைவிட்டால் அடுத்த விமானம் இரு தினங்களுக்குப் பிறகுதான். பேருந்து அல்லது இரயில் பிடித்துப் போகக் கூடிய தூரமும் அல்ல! 1200 கி.மீ. தூரம்!
இந்த இரு தினங்கள் ஹனாயில் தங்க 15,000 ரூபாய் தேவைப்படும். இந்த எதிர்பாராத செலவுகளைச் செய்யும் நிலையில் என் நிதிநிலைமை இல்லை. வந்த இடத்தில் கையேந்தி நிற்கவேண்டியதுதானா?
எண்ணங்கள் பலவாறாக ஓட, என் மன ஓட்டங்களை உணராதவர்களாக மருத்துவ பாரங்களை சாவகாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹனாய் விமான நிலைய மருத்துவப் பணியாளர்கள்.
சரி, எல்லோருக்கும் உள்ளதுதானே தனக்கும்! அதாவது என்னைப் போலவே என் சகபயணிகளும் விமானத்தைக் கோட்டைவிட வேண்டியதுதான்! என்று
நான் அடைந்த சமாதானம் தவறு.
“This is the final call” என்று ஆரம்பித்து சியாம் ரியாப் விமானத்திற்கான கடைசி அறிவிப்பும் வந்து விட்டது. ஒரு வழியாக என் உடல் நலன் குறித்த தாளைப் பார்த்துத் திருப்தி அடைந்த அதிகாரி மேலும் கீழுமாகத் தலையை ஆட்டினார். நீங்கள் போகலாம் என்று பொருள்.
கடந்து போனால் மறுபடியும் ஒரு சோதனை. என் கைப்பையை ஸ்கேனிங் இயந்திரத்தில் உள்ளே செலுத்தியபோது பெல்ட் ஓடுகிற ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி வரச் செய்தார்.
“ஐயோ! என்று நான் நெற்றியில் அடித்துக் கொள்ளாத குறைதான்.
விமானத்தைப் பிடிக்க இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையிலா இப்படி இந்த மனிதர் நேரத்தை விழுங்க வேண்டும்? இதைவிட உச்சமாக “உங்கள் கைப்பையில் ஆட்சேபகரமான பொருள் ஒன்று உள்ளது. நாங்கள் பார்க்க வேண்டும் பிரியுங்கள் உங்கள் பையை” என்றாரே பார்க்கலாம்!
“அடப் பாவி மனுஷா” என்று என்னையும் அறியாமல் என் வாய் வார்த்தைகளை உதிர்க்க.
“வாட்?” என்றார் அந்த அதிகாரி கோபமாக!
தமிழ் தெரியாத இந்த ஆசாமிக்கு என்னதான் புரிந்தது? ஆனால் என் ஆட்சேபம் நான் உதிர்ந்த வார்த்தைகளின் தொனியிலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்.
“நத்திங்” என்றேன் சிறு பல் கடிப்பு நறநறப்புடன்.
உள்ளே இருந்து அவர்கள் எடுத்த ஆட்சேபகரமான பொருள் என்ன தெரியுமா? பெட்டிகளைக் கட்டிப்போட இரயிலில் பயன்படுத்துவோமே சங்கிலி, அதுதான்.
“இதை ஏன் எடுத்துப் போகிறீர்கள் கைப் பையில்? என்பீர்கள்!
சில நேரங்களில் விமான நிலையங்களில் விமானங்களுக்காகக் காத்திருக்கும்போது சிறு தூக்கம் போட நேரும் அல்லது கழிவறைக்குச் செல்ல நேரும். இத்தகைய நேரங்களில் நம் உடைமையைச் சங்கிலி போட்டுப் பூட்டிவிட்டால் நிம்மதி.
இதை எவருமே ஆட்சேபித்தது இல்லை. இந்த ஹனாய்காரர்களுக்கு மட்டும் என்ன வந்தது?
இதைப் பயன்படுத்தி விமானப் பணிப்பெண்களை, விமானிகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிடுவேனாம்!
‘யோவ் படுத்தாதீங்கய்யா! விமானத்திற்கு இன்னும் சில நிமிடங்கள்தானய்யா இருக்கின்றன!”
இவர்களால் முடிவுக்கு வரமுடியவில்லை என்று அந்தச் சங்கிலியை எடுத்துக் கொண்டு மேலதிகாரியைக் காணப் புறப்பட்டுவிட்டார் அந்தப் பாதுகாப்பு ஊழியர்!
நெஞ்சு படக்படக் என்று அடித்துக்கொள்ள, ஒவ்வொரு விநாடியும் எனக்குத் தவிப்பும் அவதியுமாக நகர, சங்கிலியை எடுத்துப் போனவரின் தலை தெரிந்தது.
அந்த வியட்நாமியர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இது ஆட்சேபத்திற்குரிய பொருளா, அனுமதிக்கக்கூடிய பொருளா? ஒன்றையும் இவரது முகக்குறிப்பில் காணோம். சங்கிலியைப் பையில் போட்டு பையைக் கொடுத்திருக்கலாம் அல்லவா? செய்யவில்லை. ஏதோ நீளமாக விவாதித்தார் தன் சகப் பாதுகாப்பு ஊழியரிடம்!
ஐயோ! இப்படியும் இருக்கிறார்களே மனிதர்கள் நம் அவசரம் புரியாமால்.
சங்கிலியைப் பையில் போட்டார் இரண்டாவது ஊழியர் ஒன்றும் சொல்லாமல் கையில் கொடுத்தார்.
விமான நேரம் 4.55 கடிகாரம் காட்டிய நேரமோ 4.53 விமானக்கதவு நிச்சயம் சாத்தப்பட்டிருக்கும் இந் நேரம்! எதற்கும் முயற்சி செய்வோம். விமானத்தை நோக்கிய பாதையில் ஒடினேன் பாருங்கள்!
என் வாழ்நாளில் இப்படி ஓர் ஓட்டம் ஓடியதாக நினைவே இல்லை. ஒரு யானையால் துரத்தப்பட்டவனைப் போல் ஓடினேன்! நான் விமானத்தைப் பிடித்தேனா?
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































