Friday, 25 Dec 2009
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
இஞ்சியின் மகத்துவம்
இறைவனின் படைப்பில் இயற்கையின் மூலம் எண்ணற்ற மூலிகைகளும் காய்கனிகளும் கீரை வகைகளும் மற்றும் தானிய வகைகளும் பெரும் மருத்துவ குணங்களுடன் மனிதகுலத்திற்கு உடல் நலம் காக்க பேருதவி புரிகின்றன. அவ்வகையில் இஞ்சிக்கு உள்ள சிறப்பு என்பது பல்வேறு வகையில் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது. சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி மற்றும் அலோபதி சிகிச்சை முறையில் கூட இஞ்சியை பயன்படுத்தி எண்ணற்ற நோய்களிலிருந்து சுகமடையச் செய்துள்ளார்கள். பொதுவாகவே அனைத்து இல்லங்களிலும் இஞ்சி சமையலுக்கு பயன்படுத்துவது காணக்கூடியதே. இஞ்சிக்கு உள்ள மருத்துவ குணமே பித்தத்தைப் போக்குவதற்கும், தலைசுற்றல், மயக்கம், அஜீரணம் மற்றும் தீராத தலை வலி போன்ற உபாதைகளை போக்கும் தன்மை இந்த இஞ்சிக்கு உண்டு. சாதாரணமாக குருத்து இஞ்சி அல்லது முற்றின இஞ்சியை ஊறுகாயாகவோ, இஞ்சி மரப்பாகவோ பயன்படுத்துவதோடு பல்வேறு சிற்றுண்டிகளான வெண்பொங்கல், லெமன் ரைஸ், பிரியாணி மற்றும் தயிர் சாதம் போன்றவை தயாரிக்கும்போது இஞ்சியையும் பயன்படுத்துவார்கள். பல்வேறு மருத்துவ குணம்கொண்ட இஞ்சியின் சிறப்பினை கீழ்க்காணும் வகையில் அறிந்து பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலன்பெற முடியும்.
பொதுவாகவே இஞ்சித் துண்டை ஈரப்பதமுள்ள நிலத்தில் புதைத்து பயிரிடலாம். வெகு விரைவில் துளிரிட்டு விடும். அதுவும் மார்கழி தை மாதம் குளிர் சீதோஷணத்தில் வளரும் குருத்திஞ்சியை தைப்பொங்கலன்று பொங்கல் பானையில் மஞ்சள் செடி மற்றும் இஞ்சிச் செடியையும் இணைத்துக்கட்டி பொங்கல் திருவிழாவை கொண்டாடுவது தமிழர்களின் கலாச்சாரமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வரட்டு இருமல், தொண்டைப்புண் ஆகியவற்றிற்கு இஞ்சி சொரசம் தயாரித்துக் கொடுப்பது என்பது அனைத்து கிராமங்களில் இன்றும் பெரியோர் வழக்கம். இஞ்சி காய்ந்தால் சுக்கு எனப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சப்ரமண்ய சுவாமிக்கு நிகர் கடவுள் இல்லை என்பது சான்றோர் வாக்கு. அதை மெயப்பிப்பதுபோல் பண்டைய காலத்திலேயே சுக்கு மிளகு திப்பிலி ஆகிய கலவையில் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு நோய் தீர்க்கும் அரும் மருந்துகளாக பயன்படுத்தியுள்ளனர். அதுபோன்றே இஞ்சி மரப்பா எனும் சிறு வில்லைகள் சாதாரணமாக பேருந்துகளில் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறுகளுக்கு கை கண்ட நிவாரணியாகும். அதுபோன்றே சுக்கு கஷாயம் அல்லது சுக்கு காப்பி ஆகியவை தலைவலி மற்றும் வயிற்றுப்பிணிகளுக்கும் சிறந்த பலனைத் தருவதாகும்.
இவ்விதமாக ‘உணவே மருந்து’ மருந்தே உணவு என்பதுதான் இயற்கை மருத்துவத்தின் தத்துவம். காற்று, நீர், மண் ஆகியவற்றின் மூலம் தான் ஒருவரது உடலில் புகும் நோய்க்கிருமிகள் பல்வேறு நோய்கள் தோன்றக் காரணமாகும்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கும், மருத்துவச் செலவைக் குறைப்பதற்கும் இயற்கை உணவு இன்றியமையாதது. திருமுருக கிருபானந்த வாரியார் கூறியதுபோல் நோயின்றி வாழ்வது அறிவுடைமை. நோயின்றி வாழ்வதற்குத துணை புரிவது இயற்கை உணவே. அவ்வகையில் இயற்கையில் விளையும் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட நமது குடும்பங்களில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைப் பற்றிய பயன்களைக் காண்போம்.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































