Friday, 18 Dec 2009
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
பூண்டின் மருத்துவப் பயன்
பூண்டு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றின் மணமும் குணமும் நமது வீட்டில் உள்ள பெண்டிர் சமையலில் சாதாரணமாகவே கமகமக்கும் என்பது அவர்கள் செய்யும் ரசமோ அல்லது மசாலா கலந்த உணவுத் தயாரிப்பின் மூலம் நமது நாசியை அதன் மணம் வந்தடையும்போது, எப்படா சாப்பிட உட்காருவோம் என்றிருக்கும், அத்தகைய சரக்கான வெள்ளைப் பூண்டு அல்லது உள்ளிப்பூண்டு ஆகியவற்றை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.
நீண்ட ஆயுளைப் பெற விரும்புவோர், ஏதாவது ஒரு விதத்தில் பூண்டை தங்கள் உணவோடு அன்றாடம் சேர்த்துக் கொண்டால் போதும். வடமொழியில் லசூன் என்றும் ஆங்கிலத்தில் கார்லிக் என்றும் அதுபோன்றே பல்லின மக்கள் வாழும் இக்கனடீய மண்ணில் அந்த அந்த நாட்டின் மக்களின் மொழிக்கேற்ப பூண்டு என்பது தனிப்பெயரோடு, தங்களது உணவில் பிரதான இடம் பெற்று சுவையூட்டவும் உடல்நலம் காக்கவும் உதவுகிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
வெள்ளைப் பூண்டை ஆதாரமாக வைத்து அற்புதமான அலோபதி மருந்துகளைத் தயாரித்து மிகவும் கடுமையான பல்வேறு நோய்களிலிருந்து தீர்வு காண வைத்துள்ளனர். பொதுவாகவே மலைப்பாங்கான பிரதேசங்களில் தான் பூண்டு நன்கு விளையும். வெள்ளைப் பூண்டு நமக்கு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒரு வகை மிகப் பெரிதாகவும், மற்றொரு வகை சிறிதாகவும் அமைந்திருக்கும். பெரும்பாலும் மலைப்பாங்கான இடங்களில் பயிரிடப்படும் பூண்டுகள் உருவத்தில் மிகப் பெரிதாக இருப்பதால் அதனை மலைப்பூண்டு என அழைப்பது வழக்கம். சமவெளிப் பகுதியில் பயிரிடப்படுபவை உருவத்தில் சிறியனவாக உள்ளதால் அதனை நாட்டுப்பூண்டு என்று கூறுவர். வெங்காயம் போன்றே வெள்ளைப்பூண்டு பழங்கால எகிப்து நாட்டில் மக்களால் விரும்பி உபயோகப்படுத்துப் பட்டிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணத்தினை முழுமையாகப் பெற வேண்டுமாயின் வெங்காயத்தைப் போலவே அதனைப் பயன்படுத்தினால் போதும்.
நமது வீடுகளில் பொதுவாகவே வற்றல் குழம்பு, புளிக்குழம்பு, காரக்குழம்பு ஆகியவற்றில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. பூண்டுக்கு முதன்மை இடம் கொடுத்து தயாரிக்கப்படுவதே பூண்டுக்குழம்பு என்பது நாம் அறிந்தது தானே.
தனியான சுவையும், மணமும் பலவகையான உடல் கோளாறுகளையும் பிணிகளையும் அகற்றும் தன்மை பூண்டிற்கு இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளது. உணவில் தாராளமாகவே பூண்டை இடம்பெறச் செய்யும்போது குடலில் சேரும் வாயு அகலும். உடல் வலியைப் போக்கும்.இரைப்பையில் அமிலச் சுரப்பை மட்டுப்படுத்தும். கபத்தைக் குறைக்கும். சிறுநீர் தாராளமாக வெளியேற உதவும். ஜீரண ரசங்களைப் பெருக்கி ஜீரண சக்தியை மேம்படையச் செய்யும்.
ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற பிணிகளை அகற்றும். இருதய இயக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக, வலிமை தரக்கூடியதாக, பிரஷரை கட்டுப்படுத்தவும் பூண்டு பிரதான இடம் பெறுவதோடு முக்கியமாக வாயுத் தொல்லைகளுக்கும் வலியையும், களைப்பையும் போக்குவதற்கும் மிகவும் சிறந்த உணவுப் பொருளாகும். அதுபோன்றே நோய் அணுகாமல் தற்காப்பு செய்து கொள்ள பூண்டு அவசியம் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதம், யுனானி மற்றம் சீன இயற்கை மூலிகை வைத்திய சிகிச்சையில் பூண்டிற்கு பிரதான இடம் உண்டு.
பாட்டி வைத்தியம் என்று சொல்லக்கூடிய வீட்டு வைத்தியத்திற்கு பூண்டு மிகவும் சாதாரணமாகப் பயன்படும். அவசர மருத்துவத் தேவைக்கு பூண்டை மிகவும் எளிதாக உபயோகப்படுத்துவதின் மூலம் சிறு சிறு உபாதைகளுக்கு நிவாரணம் பெற முடியும்.
வெறும் பூண்டை ஒரு பல் எடுத்து மென்று தின்றாலே அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பூண்டை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிடுவதின் மூலம் பல்வேறு நோய்களைத் தீர்க்க முடியும். நள்ளிரவு போன்ற அகால நேரத்தில் ஏற்படும் உடல் நலக் குறைவினை மருத்துவர் உதவியின்றி அகற்றிக் கொள்ள முடியும். ஆகவே பூண்டைப் பயன்படுத்தி மிகவும் சுலபமான நடைமுறைகளின் மூலம் நோய்களை அகற்றிக் கொள்ளும் சில நடைமுறைகளை இனி பார்ப்போம்.
பூண்டை மருந்தாகப் பக்குவப்படுத்துவதற்கு பல வழி முறைகள் உண்டு. ஒவ்வொரு பிணிக்கும் ஒவ்வொரு மாதிரியான பக்குவ முறைகள் உண்டு என்பதால் இயற்கை மருத்துவரின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். முக்கியமாக பூண்டை உபயோகித்து தயாரிக்கப்படும் எந்தவித மருந்துகளுக்கும் ஒரு சில நாட்டு மருத்துவப் பொருட்களான திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, அதிமதுரம், கோஷ்டம், தாளிசபத்திரி, அக்காரகாரம் ஆகிய இந்த சரக்குகள் வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், லவங்கம் ஆகிய சரக்குகள் வகைக்கு 5 கிராம் மற்றும் சாதிக்காய் 2 கிராம் என்ற அளவில் சேர்த்து தயாரித்து பொடியாகவோ கஷாயமாகவோ பயன்படுத்தலாம்.
இதை தயாரிக்க 150 கிராம் அளவுக்கு தேர்ந்த வெள்ளப் பூண்டை பயன்படுத்த வேண்டும். வெள்ளைப் பூண்டை தவிர்த்து மற்ற சரக்குகளை நன்றாக இடித்துத் தூளாக்கி, சலித்து வைத்துத்தான் மருந்து தயாரிக்க வேண்டும். கனடாவில் இதற்கு சாத்தியமில்லை என்பதால் இங்கு பூண்டை பிரதானமாக வைத்து சீன இயற்கை மருந்து வகைகளும் அதைப் போன்றே இந்திய மற்றும் ஜெர்மன் மருந்து வகைகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் இவ்வகையான மருந்துகளை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
முக்கியமாக பூண்டை உபயோகித்து சீதபேதியிலிருந்து நிவாரணம் பெறவும், நெடுநாளைய புண்கள் ஆறுவதற்கும், சரும நோய், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், ஒற்றை தலைவலி, வயிற்றுப் பொறுமல், தொண்டைப் புண் நீங்கவும், பிரசவத்திற்குப் பின் தாய்பால் பெருகவும், காதுகளில் ஏற்படும் ஒரு சில பிணிகளுக்கு நிவாரணம் பெறவும் என பல்வேறு வகைகளில் பூண்டை பயன்படுத்தி சிறந்த பலனைப் பெறலாம். முக்கியமாக இரத்தம் அழுத்தம் குறைய, பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். காய்ந்த பால் அடுப்பிலிருக்கும் போதே திடமான 2 பூண்டு பற்களைத் தோலுரித்து துண்டு துண்டாக நறுக்கி அதில் போட வேண்டும். பிறகு சர்க்கரைச் சேர்த்து தொடர்ந்து சர்ப்பிட இரத்த அழுத்த நோயாளிகள் படிப்படியாக குணமடைவார்கள்.
பொதுவாகவே பூண்டை உபயோகிப்போரின் வாய் மணம் என்பது கொஞ்சம் அசுத்தமாய் இருக்கும் என்பதால், பெரும்பாலும் பிறருக்கு அம்மணம் பிடிக்காது, என்றாலும் பூண்டை உபயோகப்படுத்தி உண்ட உணவின் மணமும் தொடரும் என்பதால் வாய் துர்நாற்றம் ஏற்படாத வண்ணம், மணம் வீசும் வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் போன்றவற்றையோ அல்லது கம் என்று அழைக்கப்படும் சுவிங்கத்தையோ உபயோகிக்க இந்த பிரச்னை எற்படாது.
பூண்டு உண்மையிலேயே இயற்கை தந்துள்ள ஒரு உன்னத உணவுப் பொருள் என்பதால், முக்கியமாக இருதயத்திற்கு நல்ல வலுவைத் தருவதாலும், வாயுத் தொல்லைகள், உடலில் ஏற்படும் அசதி மற்றும் வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிப்பதாலும், பூண்டை, வாரம் ஒரு தடவை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் பல்வேறு நோய்களினின்று வருமுன் காப்பாக தடுத்துக் கொள்வதற்கும் அதைப் போன்றே ஒருசில திடீர் சுகவீனங்களுக்கு நிவாரணம் பெறவும் முடியும்.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































