» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 18 Dec 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம்
கற்பகப் புல்
(SACCHARUM SPONTANEUM L.THATCH GRASS)

தனது பக்தனுக்கு மலர்க் கூடையைப் பாதுகாப்பாக எடுத்து வர, நதியின் வெள்ள வேகத்தைக் கட்டுப்படுத்தி வழிகாட்டியதால் துறைகாட்டும் வள்ளல் எனப் பெயர் உண்டானதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. இக்கோயிலில் தெய்வத்துடன் சேர்த்து நாணலையும் தலவிருட்சமாக வணங்குகின்றனர்.

சித்த மருத்துவம்

நாணல் என்பதற்கு வேறு பெயர்களாக அச்சபரம், அஞ்சனி, வருவை, கோசுங்கம், குசம், குமில், குற்பகம், நாடல், நாணற்புல், நான்முகப்புல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தாவரவியல் பெயராக SACCHARUM SPONTANEUM L எனும் பெயர் கொண்டது. GRAMINAE எனும் தாவரக் குடும்ப வகையைச் சேர்ந்தது. இதன் வேர், அடித்தண்டு ஆகியவை மருத்துவப் பயன்களுக்கு உதவுகின்றன. இது புல் இனத்தைச் சேர்ந்தது. ஆறு, குளம், குட்டை என நீர்நிலை ஓரங்களில் நெடுக்கமாய் உயர்ந்து வளர்ந்து, காற்றினால் ஆடி அசைவது பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும்.

இதில் பெருநாணல், சிறு நாணல் என இரண்டு வகை உண்டு. இனிப்புச் சுவையாக இருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும், பித்தமடக்கும், சிறுநீர் பெருக்கும். பால் பெருக்கும் செயல்கள் இதற்குண்டு.

அடித்தண்டு (கரும்பு)
இதன் சாற்றினால், வெறிநோய், வாந்தி, சுவை அறியாமை, வயிறு சம்மந்தப்பட்ட நோய், இரைப்பு, பாண்டு நோய்கள் நீங்குகிறது. குண்டான உடலை இளைக்கவும் வைக்கும். இதன் சாற்றை தக்க அளவோடு கொடுக்க வேண்டும். நாணல் சாற்றை குடிநீர் செய்து சாப்பிட்டு வந்தால் சூடு சம்மந்தமான நோய்கள் தீருகிறது.

பொதுவாக சிறுநீரகக் கற்களைக் கரைக்க இப்புல்லின் வேரை கஷாயமிட்டுக் குடிப்பார்கள். பொதுவாக சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைக் குணப்படுத்தவும், இரத்தப்போக்கு, பேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் தருவார்கள்.

சிலர் ஆண்மைசக்தி அதிகரிக்கவும், காச நோயைக் குணப்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் முழுச் செடியையும் உலர வைத்த பின் கஷாயமிட்டுக் குடிப்பார்கள்.

சங்க இலக்கியம்

‘நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி’ என்பது புறநானூற்றில் வரும் பாடல் குறிப்பு. இந்த அடிக்கு நரந்தையையும், நறிய புல்லையும் என்று வேறு பிரித்து உரை கூறுவராயினும், ‘பரத்து இலங்கு அருவியொரு நரந்தம் கனவும்’ என்ற பதிற்றுப்பத்து அடியில் காணப்படும் நரந்தம் என்பதற்கு ‘நரந்தம்புல்’ என்று உரை கூறுவர். இப்புல் நறுமணம் உடையது. இதிலிருந்து ஒருவகையான நறுமணநீர் வடித்தெடுக்கப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயராக நரந்தம் எனவும் வேறு பெயர்களாக கற்பூரப்புல், வாசனைப்புல் எனவும் குறிக்கப்படுகிறது. இதனை விலங்குகள் அதிலும் கவரிமான் விரும்பித் தின்னும். இப்புல்லின் ஒருவகை நறுமண எண்ணெய் உள்ளது. அதனால் இப்புல் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருவிளநகர் துறைகாட்டும் வள்ளலார் வேயுறு தோளியம்மை சிவன் கோயில் தலவிருட்சமாக நாணல் வணங்கப்படுகிறது.

இக்கோயில் மாயவரம் திருக்கடையூர் வழியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் வேடுவ வடிவில் திருஞான சம்பந்தருக்குக் காட்சி கொடுத்த இடம் எனும் வரலாறும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோயில் சோழர் காலத்து திருக்கோயிலாகும். 5 நிலை கொண்ட ராஜ கோபுரத்துடன் வேலைப்பாடு மிக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


One Response to “Disease relief plants - Akbar Kausar”

  1. raman

    akbar kavuzarin sanmaarga thondu onguka… vazhga akbar
    Lenavin thamizh thondirku paaraatukkal

Leave a Reply