» Onion .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 11 Dec 2009

Onion

onion.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

வெங்காயம்

சாதாரணமாக ஒருவரைப் பற்றி நகைச்சுவையாக கூறும்போது இவருக்குச் ‘சாப்பிடத்தான் தெரியும்’ என்று சொல்லுகிறோம். இதிலிருந்து நாம் அனைவரும் சாப்பிடுவது என்பதை எவ்வளவு எளிதாகக் கருதுகிறோம் என்பது புரிகிறது. உண்மையில் சாப்பிடுவது என்பது அவ்வளவு எளிதன்று. அதிலும் உணவின் தரம், ஆற்றல், அளவறிந்து சாப்பிடுவது ஒரு தனிக்கலையாகும். இந்தக் கலையில் வல்லமை பெற்றவர்கள் நோய் நொடியின்றி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துள்ளார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு நாளையும் துன்ப நாளாக ஆக்கிக் கொண்டு, பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி, வாழுகின்ற பல ஆண்டுகளை தள்ளி, இறக்காமல் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவன் உடல் நலமின்றி இருப்பதற்கே அவனது உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். ஓரளவுக்கு உணவினால் ஒருவரின் குணமும் மாறுவதோடு நலமுடன் வாழ முடியும் என்பதற்காகவே பச்சைக் காய்கறிகள், கனிவகைகள், ஜூஸ் போன்ற விதத்திலும், பொடி வகையாகவும் நமது முன்னோர்கள் காட்டிய வழிகளை அன்றாடம் பின்பற்றுவது சாலச் சிறந்ததாகும். எனவேதான் இந்நூலில் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை பற்றிய மருத்துவ விவரங்கள் இடம் பெற்றுள்ளது. உலகில் வாழும் அனைவருக்கும் முக்கியமானதான வெங்காயம் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.

வெங்காயம் இந்நாளில் தவிர்க்க இயலாத உணவுப் பண்டமாக நமது வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கிறது. வெங்காயம் இல்லை என்றால் சமையலும் இல்லை, உணவும் இல்லை என்ற அளவிற்கு நமது அன்றாட உணவுக்கு உறுதுணையாகத் திகழ்கிறது.

வெங்காயம் இல்லாமல் சிற்றுண்டியோ, சாம்பார் வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவோ முடியாது. முக்கியமாக அனைத்து உணவு வகைகளுக்கும் மணமூட்டுவதற்கும் வெங்காயம் அவசியம் தேவை. சில வகை உணவுகளுக்கு ருசி சேர்ப்பதே வெங்காயம் தான். வெங்காய காரக் குழம்பிற்கும், வெங்காய சாம்பாரின் ருசியறியாதவர்கள் யாரும் உண்டோ? அதுபோன்றே வெங்காய தோசை, சட்னி, தயிர் பச்சடி, பகோடா என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக இன்றி அற்புதமான மருத்துவ குணம் படைத்த இயற்கையின் படைப்பாகும். ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை உணரப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்றுப் பேரறிஞர்கள் காட்டியுள்ளார்கள். எகிப்து நாடுதான் வெங்காயத்தின் தாயகம். உலகிலேயே முதன்முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் இதனை சரியாகவும் அதிகமாகவும் பயன்படுத்தியுள்ளனர். பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும், வெங்காயத்தின் மீது சத்தியபிரமாணம் எடுத்துக் கொள்வார்களாம். வெங்காயத்தின் மருத்துவ குணங்களை ரோமானிய மக்கள் அறிந்திருந்து, ரோம நாட்டுப் பேரறிஞர் பின்னி என்பவர் இது 27 நோய்களைக் குணப்படுத்தும் அருமருந்தென குறிப்பிட்டுள்ளார். அந்நாளில் கிரேக்கர்கள் தேள் - பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கும், ரணங்களுக்கும் சிகிச்சை அளிக்க வெங்காயத்தையே பயன்படுத்தியுள்ளனர். பழங்கால ஐரோப்பிய மக்கள் காய்ச்சல் போன்ற நோய்கள் வராதபடி பாதுகாக்க முன் பாதுகாப்பு நடவடிக்கையாக வெங்காயத்தை வாசற்படியில் கட்டி வைப்பார்களாம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டு மருத்துவ சித்தர்கள் வெங்காயத்துக்கு நச்சுக் கிருமிகளைக் கொன்றழிக்கும் ஆற்றல் உண்டு என்பதை உணர்ந்து எழுதி வைத்துள்ளனர்.

வெங்காயம் அற்புதமான ஊட்டச்சத்துள்ளதாகவும், உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் தாது உப்புகள் கணிசமான அளவில் நிரம்பப் பெற்றது. முக்கியமாக வைட்டமின் சி சத்து அதிகம் பெற்றதோடு, கொழுப்பு சத்து மிக மிகக் குறைவு என்பதால் உடல் பருமனை குறைக்க தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

இரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும், எளிதான ஜீரணத்திற்கும் இது மிகவும் பயனுள்ளதாகும். பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தை சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பை சீராக வைத்திருக்கவும். சாதாரண தலைவலி, கட்டிகள் உடைய, இருமலுக்கு, மூளையின் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும், குழந்தைகளுக்கு கணைச்சூடு நோய் காரணமாக பேதி ஏற்படும்போதும், பல்வலி, ஈறு வலி போன்றவற்றிற்கும், நீரிழிவு மற்றும் மூலம், மலச்சிக்கல், கல்லடைப்பு, தாது விருத்திக்கு, தொண்டைப்புண், நரம்பு தளர்ச்சி, கண்கள் பாதுகாக்க என எண்ணற்ற மருத்துவப் பலன்கள் கொண்ட வெங்காயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். வெங்காயச் சாற்றுடன் சமஅளவு காடி சேர்த்து சாப்பிட காமாலை நோய் அகலும். தீடிரென்று மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டவர்களுக்கு வெங்காய சாற்றின் நெடியை முகரச் செய்ய வேண்டும்.

நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுவோர் வெங்காயத்தை வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளை வெங்காயத்தை சாறு பிழிந்து, சமன் அளவு தேன் சேர்த்து கண்களுக்கு மையிடுவது போன்று தீட்டி வந்தால் கண்களில் தோன்றக்கூடிய இலேசான குறைபாடுகள் அகலும். பார்வையில் தெளிவு ஏற்படும்.

சரும நோய்களான படை, தேமல் போன்றவற்றிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் வெங்காயச்சாற்றை தினமும் தொடர்ந்து பூசி வர குணம் பெறலாம்.

சிலருக்கு வெங்காயம் சேர்த்தாலே அலர்ஜி என்பார்கள. காரணம் அதன் மணம். எனினும் அதன் ருசியையும், மணத்தையும் பெற, இதை உபயோகப்படுத்தினால் தானே நமது உணவு பூரணத்துவம் பெறுகிறது. முக்கியமாக உடல் உஷ்ணத்தைக் குறைத்து, ஜீரண சக்தியை வெங்காயம் அளிப்பதால்தான் அனைத்து வகை உணவு வகைகளிலும் இது இடம் பெறுகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் என பல விதங்களில் பல சைஸ்களில் கிடைக்கும் இதனை நம் குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் பல்வேறு உணவு வகைகளாக தயாரித்து நமக்கு சுவையான உணவுகளை வழங்குவது என்பது ருசிக்காக மட்டுமின்றி உடல் நலம் காக்கவும், நோயின்றி வாழ்வதற்கும் தான் என்பது தான் அதன் சிறப்பு.

எனவே வெங்காயத்தை மருத்துவ ரீதியாக பயன்படுத்தவும், பல்வேறு நோய்க்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றாலும், நமது அன்றாட உணவு வகைகளில் வெங்காயத்தை அவசியமாக பயன்படுத்த வேண்டும். சில சமயங்களில் அமாவாசை போன்ற தினங்களில் பலர் வெங்காயத்தை அன்றைய உணவில் சேர்க்கமாட்டார்கள்.

உணவே மருந்து என்ற அடிப்படையில் இயற்கை நமக்கு அளித்துள்ள இத்தகைய பொருட்களைக் முறையாக நமது அன்றாட உணவில் சேர்த்து உடல் நலம் காக்க முற்படுங்கள்.

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Related Posts Title


Leave a Reply