Tamilvanan » Blog Archive » Junior Kelvi Pathil

Junior Kelvi Pathil

mamata-banerjee-ragul-gandh.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.மலையாண்டி, திருமங்கலம்.

அதிக விடுமுறை எடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி?

பாராளுமன்றக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் காணநேரும் போது வெற்றிடமாய்க் காணப்படும் பல இருக்கைகள் நம் நெற்றியில் சுருக்க வரிகளை ஏற்படுத்துகின்றன. இவர்களையெல்லாம் கேள்வி கேட்க யாரும் இல்லையா? என்று வெறுப்புறும் நிலையில் சோனியா மட்டும் இவர்களைப் புடம்போட்டு எடுக்க முன்வந்திருப்பது நல்ல முன்னுதாரணம்? பாராளுமன்றம் போகாமலும், போனால் பார்வையாளர்கள் கேலரியில் உள்ளவர்களைப்போல் வேடிக்கை பார்ப்பதும் தாங்க முடியாத எரிச்சலுக்குரிய விஷயங்கள்.


எப்.வெங்கடேஷ், திருப்பதி.

தெலுங்கானா கோரிக்கையில் சந்திரசேகர் ராவ் வெற்றி பொறுவாரா?

ஒடுக்கப்படுவார்! ஒதுக்கப்படுவார்!


ஆர்.சுதர்சனம், கும்பகோணம்.

வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பல அறிவிப்புகள் பொய்க்கின்றனவே!

வானிலை அறிவிப்புகள் அமெரிக்காவில் மிகத் துல்லியமாக இருக்கின்றன. அந்த நவீனங்களும் தொழில்நுட்பத் திறமையும் இங்குகொண்டு வரப்படாத வரை ரமணன் வைகைப் புயல்தான்!


பி.பாபு, சென்னை-17.

சென்னையில் கொலைகள் பெருகிவிட்டதே?

ஒரு கொலைக்குப் பணம் கொடுத்தால் இன்னொரு கொலை இலவசம் என்று தாதாக்கள் முன் வந்திருப்பார்களோ? இரட்டைப் கொலைகள் பெருத்துப் போச்சு! ஆறாவது ஊதியக்குழு சம்பளம் கொடுத்தாலும் கொடுத்தார்கள். காவலர்களுக்கு இன்று வேலை பெருகிப்போச்சு!


எம்.குருமூர்த்தி, ஈரோடு.

இரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாமாமே?

தமிழுக்கு இரயிலிலும் டிக்கெட் கொடுத்துவிட்டார்கள். பாராளுமன்றத்தில்தான் அதற்கு கொடுக்கமாட்டேன்கிறார்கள். மம்தாவை வடக்கே புயலாகப் பார்க்கிறார்கள். நமக்கோ அவர் பூவாகத் தெரிகிறார். எனவே, மன்மோகனை கண்டு கொள்ளாமல் அந்த மம்தாவை மட்டும் இப்போது கண்டு கொள்வோம். அவருக்கு மட்டும் இப்போது வாழ்த்து சொல்லுவோம்.


டி.வேணுகோபால், தூத்துக்குடி.

அர்ச்சகர் தேவநாதன் மீது சாணியும், செருப்பும் வீசியது முறையா?

அவசியமில்லை. நீதிமன்றம் அவருக்கு உரிய தண்டனையை வழங்கும். பெண்கள் இதில் எதிர்பைத் தெரிவிக்கலாமே தவிர, தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை. அர்ச்சகர் தாம் செய்த தவறுகளை உணராமல் போனது கூடப் பரவாயில்லை. ஆனால் அவற்றை நியாயப்படுத்த வேறு செய்கிறாரே! மனிதருள் என்ன இரகம் இவர்?


எம்.ஏ.செல்வநாயகம், பாண்டிச்சேரி.

பொருளாதாரம் இந்தியாவைப் பாதிக்காது என்கிறாரே நம் மத்திய நிதியமைச்சர்?

கடிகாரத்தை உருவலாம். சட்டையை, கழுத்துச் சங்கிலியைக் கூட உருவலாம். ஆனால் இடுப்பு வேட்டியையே உருவும் விஷயத்தில் நிதியமைச்சர் இப்படிப் பேசியிருக்க வேண்டாம்!


எஸ்.சம்சுதீன், காஞ்சிபுரம்.

ஐ.டி. உலகம் இப்போது எப்படியிருக்கிறது?

இந்திய மனித சாட்டிலைட்டுகள் அமெரிக்காவை நோக்கி ஏவப்படுவது இப்போது கணிசமாய்க் குறைந்துள்ளது. காரணம், எல்லாம் கரன்சி எனும் தொழில்நுட்பக் கோளாறுதான்.


ஜி.சுகுமாரன், வேலப்பாடி.

குடும்பச் சண்டையென்று வந்தால் முதலில் பேச வேண்டியது கணவனா மனைவியா?

இதில் ‘டாஸ்’ போட என்ன இருக்கு? குற்ற உணர்வு உள்ளவர்களும், பெருந்தன்மையான உள்ளம் உள்ளவர்களும் முதலில் பேசலாம். ஆனால் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ எனும் நிபந்தனையில் மட்டும் பேசலாகாது.


பா.ரமேஷ், ஆம்பூர்.

லைஃ இன்சூரன்ஸ் என்பது அவசியமா?

அவசியமோ அவசியம்! அதுதான் ஆபத்து நேரங்களில் நமக்கு ஒரு கர்ண கவச குண்டலம்.


எஸ்.ராமதாஸ், முகப்பேர்.

கைதியை காவல் துறைக் காவலிலும் ஓடஓட வெட்டும் பயங்கரம் ஏன் நிகழ்கிறது?

சட்டங்களின் தாமதங்கள்; நீதித்துறையின் மெத்தனங்கள்; நீதித்துறையின் முறைகேடுகள்; சட்டங்களின் ஓட்டைகள் இவற்றால் சமூகம் சலிப்படைந்து கிடப்பதையே இத்தகு சம்வங்கள் காட்டுகின்றன!


ஏ.ராமசாமி, பொழிச்சலூர்.

ப.சிதம்பரத்திற்காகப் பரிந்து பேசும் கருணாநிதி பற்றி…?

அவர்கள் அப்படிச் செய்யவில்லையா, இவர்கள் இப்படிச் செய்யவில்லையா என்கிற அதே கருணாநிதிப்பாணி தொடர்கிறதே தவிர, ப.சிதம்பரத்திற்காக வாங்கப்படும் வக்காலத்து வாக்கு மூலம் மிகப் பலவீனமாக இருக்கிறது.


எம்.முருகன், தாம்பரம்.

பா.ம.க. விலகலால் அ.தி.மு.க.வில் ஏதும் சலனமில்லையே?

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்த விலகல் ஒரு மழை நேர வானவில்! மழை நேர வானவில் அந்த நேரத்திற்கு மட்டுமே ரசனையாய் இருக்கும். அப்புறம் வானத்தில் அதனால் ஒரு கீறலும் இருக்காது.


வி.ராஜாராம், பம்மல்.

தமிழகக் காங்கிரசில் பத்து இலட்சம் உறுப்பினர்கள் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள் என்கிறாரே ராகுல் காந்தி?

ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் உறுப்பினர் பட்டியலை அதன் தலைப்பு மாற்றிக் கொடுத்துவிட்டார்களா? சாட்சாத், அதன் பின்புலம் ஏதோ ஒரு ஜெராக்ஸ் இயந்திரத்திற்கே வெளிச்சம்! கலைகளுக்குப் பெயர் போனது தமிழகம் என்பது ராகுல் காந்திக்கு தெரியாது.


எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.

எப்படி இருக்கிறார் ஸ்டாலின்?

கத்தரிக்கோலும் கையுமாய் மிக பிசியாக இருக்கிறார்.


என்.நாகப்பன், சென்னை-70.

கட்சி மாறிகளின் விழா சில கட்சிகளில் எளிமையாகவும், சில கட்சிகளில் அமர்க்களமாகவும் படுகிறதே ஏன்?

சைவ உணவுக்காரர்கள் வெறும் தேங்காய் பழங்களோடும், அசைவ உணவுக்காரர்கள் ஆடு, கோழிகளோடும் செல்வதில்லையா? அது போல்தான் இதுவும் அவரவர் வசதி.


டி.இமானுவேல், நாகர்கோவில்.

முன் கோபக்காரன், பின் கோபக்காரன் இவர்களில் யாரோட கை கோர்க்கலாம்?

இருவரும் வேண்டாம். முன் கோபக்காரனால் கிளைக்கு ஆபத்து. பின் கோபக்காரனால் வேருக்கு ஆபத்து; இப்போதைக்கு எனக்குத் தெரிந்தது இதுதான். அதாவது இவர்களுடன் கை கோர்த்தால் உங்களோடு நான் கை கோர்க்கமாட்டேன் என்பது.


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டிலிருந்து விலகப் போகிறாராமே?

உலகப் பந்து வீச்சாளர்களின் தலைமைப் பீடத்தில் ஒரு தமிழர் அமர முடியும் என்று நிரூபித்த அற்புதப் போராளி. தமிழகத்தின் மருமகன். இவர் கண்ணியத்திற்குப் பங்கமின்றி விலகுவது நல்லது. இவர் இருக்கும்போதே இலங்கையின் மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் ஒளிவிட ஆரம்பித்துவிட்டார்கள். வயது (37) கூடிவிட்டது. முன்போல் வீசமுடியவில்லை. கோடுகளைத் தாண்டி இவர் வீசிய பந்துகள் பறக்கும்போது இவர் முகம் போகும் போக்கைக் காண மனம் பொறுக்கவில்லை. சரியான நேரத்தில் ஏற்பட்டுள்ள நல்ல சிந்தனை.


ஜே.விக்டர், மாதவரம்.

ஒரு கட்சியின் கிளைச் செயலாளராக இருக்கவும் சிலர் ஆசைப்படுகிறார்களே? கிளைச் செயலாளரில் அப்படி என்ன இருக்கு?

பசியெடுத்தவனுக்குப் பழையது கூடப் பாயசம்தான். இதையெல்லாம் கேட்டுக்கிட்டு?

04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title

Tags: , , , , , , , , ,

Leave a Reply