Friday, 11 Dec 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம்
கண்டங்கத்திரி (SOLANUM JACQUINI)
சித்த மருத்துவம்
இது செடி வர்க்கத்தைச் சேர்ந்தது. எல்லா இடங்களிலும் கிடைக்கும். முக்கியமாக கிழக்கு, மேற்கு கரையோரங்களில் ஏராளமாய் வளரும். இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவுகின்றன. கார்ப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டு, கோழை அகற்றும், சிறுநீர் பெருக்கும், வாய்வு அகற்றும் குணங்கள் உள்ளன. இதன் விதையால் பேதியாகும். மேலும் இவற்றால் காசம், சுவாசம், க்ஷயம், அக்கினிமந்தம், தீச்சுரம், ஜன்னி வாதம், 7 வகைத் தோஷங்கள், வாதநோய் போகும்.
காய் : சந்தேக நோய் தீரும், சீதபேதியை ஏற்படுத்தும். பசியைத் தாண்டும்.
பழம் : இது இருமல், இரைப்பு, இளைப்பு நோய், பல்லரணை, புடை, நமைச்சல் ஆகியவற்றைப் போக்கும். பசியை உண்டாக்கும்.
சமூலம் : உடலின் நீரேற்றம், மூக்கில் நீர்பாய்தல், ஈளை, இரைப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.
இலை : இதன் இலைச்சாற்றில் அல்லது குடிநீரிட்டு எண்ணெய் கலந்து காய்ச்சி பூசிவர, தலைவலி, கீல் வாதம், அக்குள் நாற்றம் ஆகியவை நீக்கும்.
இலை ரசத்தில், ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூச, வெகுசீக்கிரத்தில் குணமாகும்.
பூ : இதனை வாதுமை நெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பூசி வந்தால் மலவாசல் முளையைப் போக்கும்.
பழம் : இதன் பழத்தைக் குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவு 4-க்கு 1 பங்கு ஜெய்த்தூண் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, கடுகு திரள வடித்துக் கொண்டு, வெண்குட்டத்தின் மீது பூசி வந்தால் வெண்மை மறைந்து உடல் நிறமடையும்.
* இதே அளவு போல சுரைவித்தெண்ணையில் சேர்த்துக் காய்ச்சிக் காதுக்குள் விட்டால் காதுவலி தீரும்.
விதை : இதன் விதைகளை எரித்து, அதிலிருந்து எழும் புகையைப் பிடிக்க பல்வலி நீங்கும். புழுக்கள் மடியும்.
வேர் : இதன் வேரை முறைப்படி கஷாயமிட்டு, அதில் திப்பிலி சூரணமும், தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல். நீர்த்தோஷம் முதலியன குணமாகும்.
வேர்க்குடிநீர் : கண்டங்கத்திரிவேர், கண்டு பரங்கி, முத்தக்காசு (கோரைக் கிழங்கு), சுக்கு, சிறு வழுதலை வேர் முதலியவற்றை ஒரே அளவில் எடுத்து, 2 நாழி தண்ணீர் விட்டு, 8-ல் 1 பங்காய் வற்றக்காய்ச்சி குடித்தால் வாதஜுரம் நில்லாது நீங்கி விடும்.
யுனானி மருத்துவம்
முள் கத்கரிக்காயின் மருத்துவ குணங்கள்
தோற்றம் : இது நிலத்தில் பரந்து காணப்படும். கிளை மற்றும் இலைகள் மீது மஞ்சள் நிற முட்கள் இருக்கும். பூக்கள் ஊதா நிறத்தில் அழகாக இருக்கும். இப்பூக்களிலுள்ள மஞ்சள் நிற மகரந்தங்கள் இருக்கும். இதன் பழம் பேரிக்காய் போன்று உருண்டையாக இருக்கும்.
காய் பருவத்தில் பச்சையாகவும், முற்றிய பின் மஞ்சளாகவும் மாறும். இதைக் “காட்டுக் கத்திரி” என்று அழைப்பார்கள். இதன் செடி கத்தரிச்செடியைப் போன்றே இருக்கும். இது இந்தியா மற்றும் அரேபியா நாடுகளில் வளருகின்றது.
இயல்பு : உஷ்ணம் - வறட்சி (மூன்றாம் நிலை)
முக்கிய குணங்கள் : பேதியை உண்டாக்கும்; இரத்தத்தைச் சுத்தம் செய்யும்; வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கும்; சளியை வெளியேற்றும்; ஜுரத்தைத் தணிக்கும்; காக்கை வலிப்பு மற்றும் ஹிஸ்டீரியா என்னும் மன நோய்க்குப் பயன்படும்.
பயன்படுத்தும் முறை : பேதியை உண்டாக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்கின்ற காரணத்தால் இது தொழு நோய், மேக நோய் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குப் பயன்படுகிறது. இதன் இலைகள் வயிற்றில் உள்ள கிருமிகளைச் சாகடிக்கிறது.
பற்களில் உள்ள கிருமிகளைக் கொல்ல இதன் இலையை ஹுக்காவில் வைத்துப் புகைபிடிப்பார்கள். இதனால் பற்களின் வலி குறைகின்றது. காக்கை வலிப்பு மற்றும் ஹிஸ்டீரியா போன்ற நோய்க்கு இதன் இலைச்சாற்றை மூக்கினுள் சொட்டு மருந்தாக விடுவார்கள். சளியை வெளியேற்றும் தன்மையால் இருமல் மற்றும் ஆஸ்துமா நோய்க்குப் பல முறையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சளியால் உண்டாகும் ஜுரங்களுக்கு இதைத் தனியாகவோ அல்லது பிற மருந்துகளுடனோ கலந்து கஷாயமாக்கிக் குடிக்கச் செய்வார்கள்.
அளவு : 5 கிராம் முதல் 7 கிராம் வரை பயன்படுத்தலாம்
தோற்றம் : இது ஒரு கொடியின் மூலிகையாகும். இதன் கிளைகள் மீது முட்கள் இருக்கும். இதன் இலைகள் புளியமா இலைகளைப் போன்று மெல்லியதாக இருக்கும். இதன் காயினுள் பாக்கு போன்று சிறிய விதைகள் இருக்கும்.
இது நீல நிறத்தில் காணப்படும். இவ்விதையைப் பார்த்தால் வெண்மை நிற சதைப்பகுதி காணப்படும். இச் சதைப்பகுதி கருன்ஜா விதை சதை என்ற பெயரால் மருந்துகளில் கலந்து பயன்படுத்தப்படுகிறது. சுவையில் இது கசப்பாக இருக்கும்.
இயல்பு : உஷ்ணம் - வறட்சி.
முக்கிய குணங்கள்
இது காயத்தை ஆற்றுகிறது. வாயுத்தொல்லையை அகற்றுகிறது. வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கிறது. உடல் மற்றும் இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது.
பயன்படுத்தும் முறை
ஜுரங்களையும், விஷக் காய்ச்சலையும் தணிக்கிறது. துர்நாற்றத்தை அகற்றுகிறது. காயங்களை ஆற்றுகிறது. இது ஈரத்தன்மையை உறிஞ்சும் தன்மை உடையதால் நீர்க் கோர்வை நோய்க்கு பயன்படுத்துவார்கள்.
விரை வீக்கத்தை கட்டுப்படுத்த இதைச் சூரணம் செய்து ஆமணக்கு இலைகளின் மீது தூவி, வீக்கமான இடத்தில் வைத்து கட்டுவார்கள். இதைத் தவிர சொறி மற்றும் சிரங்கிற்கும் பயன்படுத்துவார்கள்.
குடல்வலி மற்றும் வாயுத் தொல்லையை அகற்ற கருன்ஜா சதையைப் பாதி அளவில் எடுத்து 7 எண்ணிக்கை இலவங்கத்துடன் அரைத்து அதை சாப்பிடச் செய்வார்கள். குளிர்காய்ச்சல் மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்க்கு இதன் இலையை சிறிது மிளகுடன் நீர்விட்டரைத்து வடிகட்டிக் குடிப்பார்கள். ஜுரங்களைக் கட்டுப்படுத்த கருன்ஜாவின் சதை, பலாஸ் பார்போ, பலாஸ் பாப்டா மற்றும் இதன் துளிர்கள் ஆகிய அனைத்தையும் சம அளவில் எடுத்து இடித்து வடிகட்டி உருண்டைகளாக்கி மாத்திரைகளாகப் பயன்படுத்துவார்கள். மேலும் அடிக்கடி உண்டாகும் தாகம் மற்றும் ஆஸ்துமாவிற்குப் பயன்படுத்துவார்கள். சில மருத்துவர்கள் இதன் விதைகளை நெருப்பில் வறுத்து அதன் மேல்தோலை நீக்கி உள்ளிருக்கும் சதையை எடுத்துக் கொடிய நிலையில் இருக்கும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த பயன்படுத்துவார்கள். இவ்விதையில் உள்ள சதையை நல்லெண்ணெயில் வறுத்து, துர்நாற்றம் வீசும் காயங்கள் மீதும், புண்களின் மீதும் மற்றும் சொறி, சிரங்கின் மீதும் பூசுவார்கள்.
முக்கியப் பயன்கள்
குடலில் உண்டாகும் வாயுத்தொல்லையை அகற்றும்.
அளவு : 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை பயன்படுத்தவும்.
தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இதனுடன் மிளகு கலந்து பயன்படுத்தலாம்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சமாக கண்டங்கத்திரி வணங்கப்படுகிறது.
கண்டங்கத்திரி “சோலானம் ஜாக்குயினி” (SOLANUM JACQUINII) என்னும் அறிவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இது ‘சோலானாசியே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு
2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































