» Gooseberry .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 4 Dec 2009

Gooseberry

gooseberry.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

நெல்லிக்காய்

இயற்கை அளித்துள்ள பல்வேறு காய், கனி வகைகளில் மிகவும் அற்புத மருத்துவக் குணமுடைய நெல்லிக்காயைப் பற்றி அறிந்துகொள்வோம். உங்களுக்கு எல்லாம் நன்கு தெரியும் ஆத்திச்சூடி தந்த ஒளவையார் பற்றி.

அவ்வையார் அவர்கள் கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார் என்பது. அந்த அளவிற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடிய நெல்லிக்காய், பல இடங்களிலும் பல கடைகளில் கிடைப்பதால், நீங்கள் அனைவரும் அவசியம் அதை வாங்கி பல விதமாக உணவு வகைகளாகவோ அல்லது வேறு விதமாகவோ பயன்படுத்தினால் நிச்சயம் நீண்ட ஆயுளையும், சிறந்த ஆரோக்கியத்தையும் பெற முடியும் என்பது உறுதி.

உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்தறிகு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய், நார்த்தங்காய், தேசிக்காய், சுண்டக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக்கூடிய உணவு வகைகளாகும்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களை கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய். இரு வகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியை தருபவையாகும். கோடை காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திற்கும் சஞ்சீவி போன்றதாகும். எனவே நெல்லிக்காயை எந்தவிதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது என்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

சிறு வயதில் நெல்லிக்காய் பறிக்க தோப்புக்குச் செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் திண்பண்ட கடைகளில் கமர்கட், கச்சான், பஞ்சுமிட்டாய், மாங்காய் பத்து, இலந்தப்பழம், முந்திரிப்பழம் மற்றும் அரி நெல்லிக்காய், பொறி கடலை ஆகியவற்றை இளம் சிறார்கள் ஆவலுடன் வாங்கி உண்டு மகிழ்வது நமது நாட்டில் வாடிக்கை தானே! அதுவும் நெல்லிக்காய் சீசனில், நம் வீட்டுப் பெண்மணிகள் இவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஊறுகாய், சட்னி, பச்சடி போன்றவற்றையும் வடகம் தயாரிப்பதும் வழக்கம் தானே!.

நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயை பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையை குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்றே அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும் என்பதே எனது பணியாக தொடர்கிறேன்.

இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம்கொண்டவை, நாம அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும்,அவற்றின் பயன்களையும் முக்கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவ பயன்களையும் எளிதாய் புரிந்து அறிந்து ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற குறிக்கோளை அடைவதற்கே.அதிலும் நமக்கு தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கினற உணவுப் பொருட்களைப் பற்றியே எனது இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ முறைகளால் பல தரப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தும், ஆலோசனைகள் வழங்கியும் சேவை புரிவதின் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Related Posts Title


Leave a Reply