Friday, 27 Nov 2009
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
வளமான வாழ்விற்கு உணவே மருந்து
தண்ணீர்
‘நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கம்
வானின்று அமையாது ஒழுக்கு’
என்னும் குறளின் வாக்கிற்கேற்ப இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாக கருதப்பட்டு உயிரினங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக துணை நிற்கின்றன என்பதை அனைவரும் நன்கு அறிவோம். வையகம் முழுவதும் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் கடல் நீரால் சூழப்பட்டு உப்புத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கேற்ப, நமது அன்றாட உணவிற்கு அத்தியாவசியமான தேவை உப்புதானே! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் உப்பு தேவையான அளவில் சேர்க்காவிட்டால் உணவருந்த முடியுமா?
அதிலும் சாதாரணமாக தாகம் எனும் நாவரட்சி ஏற்படும்போதோ அல்லது மயக்கம், விக்கல், களைப்பு போன்றவற்றிற்குத் தண்ணீர் உடனடி, நிவாரணமாக உயிர் காக்கும் அருமருந்தாகும்.
பொதுவாக நீரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், அயோடின், போன்றவை இயற்கையிலேயே நிறைந்திருப்பதால், பல்வேறு வகைகளில் நமக்கு பயன்தருபவையாகும். முக்கியமாக ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், உடற் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வாழவும் வைக்கின்றது. எனினும் விஞ்ஞான யுகத்தில் வாழ்கின்ற இன்றைய நாகரிக உலகில், தண்ணீர் எவ்வாறெல்லாம் மாசுபடுத்தப்பட்டு எண்ணற்ற தொற்று நோய்களுக்கும், விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்களுக்கும் காரணமாக உள்ளது என்பதை விவரிக்க வேண்டுமாகில், அதற்கென ஒரு தனி கட்டுரை தான் எழுத வேண்டும். அந்த அளவிற்கு தொழிற்புரட்சி, சுற்றுப்புற சுகாதார சீர்கேடுகள், இயற்கையை மாசுபடுத்தி, ஓசோன் எனும் வாயு மண்டலத்தையும் ஓட்டையாக்கி இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகிக் கொண்டு வருகிறோம்.
எதிர்கால சந்ததியினர் நல்ல காற்றும், நல்ல தண்ணீரும் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி மூலம் கூறியிருக்கின்றனர். பொதுவாக கழிவுப் பொருட்களின் தாக்கம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், மழைக்காலங்களில் நீர் ஓட்டத்தினால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள், தூசுகள் போன்றவைதான் பல்வேறு இடங்களில் தேங்கி, தொற்று நோய்க் கிருமிகளான பேக்டிரியா, வைரஸ் மற்றும் பல்வேறு நோய்க் கிருமிகள் வளரவும் பெருகவும் வழி வகுக்கின்றன. எனவே குடிநீர் என்றவுடன் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகும்.
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் சுத்தமான தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவ குறிப்பு கூறுகின்றது. பொதுவாக அனைவரும் பெரும் கேன்களிலும், பாட்டில்களிலும் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே அன்றாடம் உபயோகிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள பைப் லைன்களில் துரு போன்ற அசுத்தம் அல்லது ஓட்டை ஏற்பட்டு வேறு நோய் தரக்கூடிய பொருட்கள் கலக்க வாய்ப்புகள் இருக்கின்றபடியால், குடிநீரைப் பொறுத்தவரையில் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.
இயற்கை தரும் மழைநீர் என்பது மிகவும் சுத்தமானது. ஆனால் அதை சேமித்து பாதுகாக்கும் நீர்த்தொட்டிகள் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மாசுத்தன்மை உண்டாகி, அதை தெரியாமல் பயன்படுத்தும்போது பல்வேறு கொடிய நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. அந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேலே எழும்பி மேகங்களாக மாறி, அதில் குளிர்ந்த காற்று பட்டவுடன் மழையாகவும், பனியாகவும் பெய்து பூமிக்கு நீர் வளமும் சேர்த்து, அந்த உப்புத் தண்ணீரை நன்னீராக மாற்றி நமக்கெல்லாம் குடிப்பதற்கான தண்ணீரை வழங்குகின்றது. இது இயற்கை நமக்கு செய்துவரும் அற்புத உதவியாகும். ஆகவே நாம் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது, நாம் குடிக்கும் நீரை ஓரளவிற்கு சுட வைத்து, ஆற வைத்து வடிகட்டி அருந்தினால், எந்தவித நோயும் ஏற்படாது.
வெறும் வயிற்றில் காலைப்பொழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தண்ணீரும் அதுபோன்றே காலை உணவு, மதிய உணவு, இரவு விருந்து மற்றும் படுக்கப் போகும் முன் இரண்டு டம்ளர் நீர் அவசியம் பருகுவதை பழக்கமாய் வைத்திருந்தால் நல்ல ஆரோக்கியம், நல்ல நித்திரை, பசி, ஜீரணம், தெம்பு சுறுசுறுப்பு மற்றும் உடல் பலம் ஆகியவை சீராக அமைவதோடு மற்றும் பல்வேறு பழங்களான மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, கன்டலோப், வெள்ளரி, போன்றவற்றிலும், அதைப்போன்றே காய்கறி மற்றம் கீரை வகைகளிலும் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. இவற்றை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அடிக்கடி உணவாகப் பயன்படுத்தி தேக ஆரோக்கியத்திற்கு கூடுதல் பயன்பெற முடியும்.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள் ஒழுங்காய் இருக்கவும், மலச்சிக்கலை தவிர்க்கவும், ஒரு சில உஷ்ணத்தின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அடிக்கடி நீர் அருந்துவது என்பது இன்றியமையாததாகும். நமது ஊரில் செப்புக் குடங்கள், வெள்ளிக் குடங்கள் மற்றும் பானைகளில் சுத்தமான நீரை நிரப்பி அன்றாடம் பயன்படுத்துவதை நாம் அறிந்ததே. அதன் பயன் என்பது உலோகப் பொருளான இவற்றால் நமக்கு தேவையான தாமிர, வெள்ளி ஆகியவற்றின் சக்தியை அளிப்பதோடு உடலை குளிர்ச்சியாகப் பாதுகாக்கவும் துணை புரிகின்றன. தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்காதே என்ற முன்னோர்கள் பழமொழிக்கேற்ப, தண்ணீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து, அதன் மருத்துவ குணத்தினால் ஏற்படும் பயன்கள் கருதி, கூடுமானவரை நீரை சுட வைத்து, வடிகட்டி, ஆற வைத்து பயன்படுத்தி, வாழ்க்கை வாழ்வதற்கே என்றளவில் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்க.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































