இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
இந்தோனேசியர்களுக்கு இந்தியாவில் மிகப் பிடித்த விஷயம் பாலிவுட் படங்கள் தானாம். வள்ளியப்பன் சொன்னார்.
இந்தோனேசியர்கள் இந்தியர்களைப்போலவே திரைப்படம் பிரியர்களாம். “இந்தோனேசியாவில் இந்திப் பாடல்களைப் பலர் முணுமுணுக்கக் கேட்கலாம். அவர்கள் அப்படிப் பாடுவதை வைத்து அவர்கள் இந்தி தெரிந்தவர்கள் என்கிற முடிவிற்கு வந்து விடாதீர்கள். நம் இசை அவர்களுக்கு மிகப் பிடிக்கும். அமீர்கான், சல்மான்கான் ஆகியோர் இங்கு மிகப் பிரபலம். உள்ளூர் உள்நாட்டு நடிகர்களுக்கு இணையாக இவர்களை நெஞ்சில் உயரிய இடத்தில் வைத்திருக்கிறார்கள்” என்றார் வள்ளியப்பன்.
கல்லூரிகளின் பகுதிகளில் நுழைந்தால் இந்தி நாயகர்களின் படங்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாமாம்.
இந்தியா, நேபாளத்திற்கு அடுத்தபடி பாலித் தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதால் இவர்கள் மத்தியில் இந்தியத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பாம்.
இந்தோனேசியாவில் பரவியுள்ள இந்துக்கள்தாம் இந்தி நடிகர்கள் மீதான பற்று இந்தோனேசியாவில் வளரக் காரணமாக இருந்தார்களாம்.
ஆனாலும் சீனர்களைப் போல இந்தியர்களால் ஒரு சக்தி வாய்ந்த இனமாக மாறமுடியவில்லை.
காரணம், சீனர்கள் கடின உழைப்பாளிகள் என்பதோடு, தொடர்ந்து வருடக்கணக்கில் ஒரு வேலையில் தேங்கிப் போகாமல் எப்படா சுயமாகத் தொழில் தொடங்குவோம் என்றே வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பார்களாம்.
இந்தியர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை விரும்புகிறார்கள். சீனர்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயங்குவது இல்லை.
பணயம் வைப்பது என்றால் வீட்டை விற்று, பணம் திரட்டி, வங்கியில் கடன் வாங்கி பெரும் முதலீட்டைத் திரட்டி ஒரு தொழிலில் போடுவார்களாம். ஒரு வேளை தோற்றுவிட்டால் கையைக் கழுவிவிட்டு, வேலை செய்வதில் மும்முரமாக இறங்கிவிடுவது உண்டாம். நம்மவர்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இதற்கு ஆபத்து வராமல் இருந்தாலே போதும் என்று கருதுகிறார்கள்.
இந்தோனேசிய மக்களுள் 84 சதவிகிதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தோனேசிய அரசு இதற்கு நன்கு வழிவகை செய்திருக்கிறது.
பக்கோடா செய்ய கடலை மாவைப் பிசைந்து எண்ணெயில் அப்படியே சிதறும்படி கைகளை உதறுகிறார்களே, அப்படி, இந்துமாக் கடலில் உதறப்பட்டதுபோல் சிதறிக் கிடக்கின்றன இந்தோனேசியத் தீவுகள்.
இவை மட்டும் இப்படி ஏகப்பட்ட தீவுகளாகச் சிதறிக் கிடக்காமல் ஒரே நிலப்பகுதிகளாக அமைந்திருந்தால் சாதித்திருப்பார்கள் சாதித்து. மக்கள் தொகைப் பெருக்கமும் நில அமைப்பும் சாதகமாக இல்லாததாலேயே இந்த நிலை. இல்லாவிட்டால் 90 சதவிகிதக் கல்வி நிலையைத் தாண்டிக் கடந்திருப்பார்கள்.
புத்தமதம் இந்தியாவிலிருந்து வந்த மதம் என்பதால், இங்கு உள்ள புத்த மதத்தினர் இந்தியர்களைச் சற்று மரியாதையோடு நடத்துகிறார்கள். இவர்களோடு பிரியமாகவும் பழகுகிறார்கள்.
ஆரம்பக் கல்விக்கு இங்கு பஞ்சமில்லை என்றாலும், உயர்கல்வி கற்க இங்கு கல்வி வளம் சிறப்பாக இல்லை. இப்போது பரவாயில்லை என்றாலும் வெளிநாடுகளையே அதிகம் நம்ப வேண்டிய நிலை.
பிரீ கேஜி, கிண்டர் கார்டன் வகுப்பு ஆகியவை இந்நாட்டில் இல்லை. 6 வயது வரை ஹாயாகத திரிய விட்டு விட்டு பிறகு பிள்ளைகளைப் பிடித்துப் போட ஆரம்பிக்கிறார்கள்.
இங்கு உள்ள பல கல்வி அமைப்புகளை மத அமைப்புகளே நடத்துகின்றன என்பது வியப்பான செய்தி. ஆமாம், பல கல்வி நிறுவனங்களை மசூதிகளும், மாதா கோயில்களுமே நடத்துகின்றன.
மதம் சார்ந்த கல்வி என்பதால் ஒழுக்கமே கல்வியைவிட அதிகம் வலியுறுத்தப்படுகிறது என்றார்கள். மகிழ்ச்சி என்றேன்.
இந்தோனேசியர்களின் பூர்வீகம் சீனா, இந்தியாதான் என்றாலும் கொபு என்ற பிரிவினர் இலங்கையிலிருந்து குடியேறியவர்களாம்.
இந்தோனேசியா ஒரு காலத்தில் பூர்விகக் குடிகளைத் தவிர பிறர் எவரும் இல்லாத தீவாக இருந்திருக்கிறது. பிறகு, காலப்போக்கில் அண்டை நாடுகளான இந்தியா, இலங்கையிலிருந்தும் சற்றுத் தொலைவில் உள்ள சீனாவிலிருந்தும் மக்கள் குடியேறி இன்று ஒரு கலப்படமான சமூகமாக வாழ்கிறது. ஆனாலும் மிக ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
சில தீவிரமதவாதிகள் மட்டும் வெகு நாள் வரை கிறிஸ்துவர்களுக்கு எதிராக நிறையக் கலவரம் செய்தார்கள். இந்தக் கோபம் சற்றே திரும்பி சுற்றுலாத் தலங்கள் மீதும் திரும்பியதால் இங்கெல்லாம் குண்டுகள் வெடித்தன. இதனால் பிறநாட்டுப் பயணிகள் பலர் இறந்து போனார்கள்.
இந்தக் குண்டு வெடிப்புக் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனாலும் ஓரளவு வெளடிநாட்டினர் வரத்தான் செய்கிறார்கள். இவர்கள் மத்தியில் குண்டுவெடிப்புக் குறித்த சிறு அச்சம் நிலவுவதையும் மறுப்பதற்கில்லை.
ஜகார்தா நகரம் பல இந்திய நகரங்களைப் போலவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. சாலைகளை விரிவுபடுத்தும் எண்ணம் இவர்களிடம் இல்லை போலும். காரணம் சாலைகளுக்கு மிக அருகில் மிக உயரமான கட்டடங்கள் பெருத்துவிட்டன.
சாலைப்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ‘த்ரீ இன் ஒன்’ என்கிற விதி கொண்டு வரப்பட்டது. இதன்படி எந்த ஒரு நான்கு சக்கர வாகனத்திலும் மூவருக்குக் குறையாமல் பயணம் செய்ய வேண்டும். மூவராக வந்தோம், வழியில் ஒருவர் இறங்கிக் கொண்டார் என்கிற கதையெல்லாம் இங்கு நடக்காது.
பெரும்பாலும் இங்கு நம் நாட்டு பஜாஜ் ஆட்டோக்களைப் பார்க்க முடிகிறது. 1940களிலேயே இவை அறிமுகமாகி சக்கைப் போடு போட்டன. 1991 வரை அதாவது 50 வருடங்கள் வரை நம் நாட்டு ஆட்டோக்கள் வெளுத்துக் கட்டின. இப்போது நிறைய மாற்று வாகனங்களைத் தேடிக் கெர்ண்டிருக்கிறார்கள்.
1971 வரை இங்கே மனித இழுவை ரிக்ஷாக்கள் அதிகமாக வலம வந்தனவாம். அதுவும் 1,60,000 ரிக்ஷாக்களாம். இவற்றால் வாகனங்களின் சராசரி வேகம் குறைகிறது என்று அடியோடு தடை செய்து விட்டார்கள். பிறகு இதைத் தளர்த்தினார்கள். 1998 இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் இந்தோனேசியாவையும் தாக்கவே புது வாகனங்களை வாங்க முடியாமலும், உயர் இரக வாகனங்களில் பயணம் செய்ய முடியாமலும் மக்கள் தவித்த வேளையில், சரிசரி, நாங்கள் வேறு திசையில் திரும்பிக் கொள்கிறோம்; நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரிக்ஷாக்கள்மீது அரசு கருணை காட்டியதாம்.
சி.பி.டி என்று ஓர் இடம் (சென்ட்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட்) இங்கு இருக்கிற உலகமகாப் போக்குவரத்து நெரிசலைக் காண நேர்ந்த போது, ‘அடேங்கப்பா, நம்மூரே தேவலை போலிருக்கிறதே’ என எண்ணினேன்.
ஆனால் ஒரு விஷயம் பாராட்டப் படவேண்டும். நெரிசலிலும் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். விதிகளை மீறுவது இல்லை. ‘வீட்ல சொல்லிவிட்டு வந்திட்டியா? உனக்கு மட்டும் கண்ணு என்ன பின்னாலயா இருக்கு? என்னய்யா அப்படி ஒரு அவசரம் உனக்கு? அறிவிருக்கா? எங்களையெல்லாம் பார்த்தா மனுஷனாத் தெரியலை!’ என்று எவரும் (அவர்கள் பாஷையில்தான்) பேசிக் கொள்வதாகவே தெரியவில்லை.
இந்தக் கண்ணியம் என்னை இந்த மண்ணில் மிகவும் கவர்ந்த ஒன்று.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































