Friday, 27 Nov 2009
சோதனையான காலகட்டமா?
ஒரு பொறியியல் கல்லூரி நிறுவனரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் உங்கள் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ஏன் இரத்து செய்யக்கூடாது என்று டெல்லியிலிருந்து நோட்டீசு வந்திருப்பதாகச் சொல்லிப் பெரிதாகக் கவலைப்பட்டார்.
ஊருலகத்தில் இவர் செல்வத்தில் புரளுகிறார். இவருக்கு என்ன குறைகள் இருக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோக, வேறு சில கவலைகளையும் பகிர்ந்துகொண்டார்.
பின்னால் இவர் பட்டியலிட்ட கவலைகள் முதல் கவலையின் தாக்கத்தினால்தான் பெரிதாகத் தெரிகின்றனவே தவிர, அவை மட்டும் தனித்தனியே வேறு ஒரு காலகட்டத்தில் வந்திருந்தால் ஊதித் தன்ளியிருப்பார் என்று எனக்குப் பட்டது. மனம் தாக்குறும்போது, அது பலவீனப்பட்டுப் போகும்போது சாதாரண சேதங்கள்கூட மலைப்பான விஷயங்களாகிவிடுகின்றன என்பது தெரிகிறது.
யானைக்கு நோய் வந்தால் சிற்றினங்கள்கூட அதன்மீது ஏறிக் குதிக்குமாம். அந்தக் கதைதான் இதுவும்.
என் அனுபவத்தில் சோதனைகள் தனித்து வருவதே இல்லை. கைகோர்த்துக்கொண்டு ஒன்றின் தொடர்ச்சியாகப் பிறவோ, ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாமலோ வருகின்றன.
இந்நிலையில் எது இதில் மூலாதாரப் பிரச்னை. எது இதில் பூதாகரப் பிரச்னை என்பதைக் கண்டுபிடித்து அந்த எதிரியை முதலில் கட்டுப்படுத்தினால் அல்லது வீழ்த்தினால் மற்றவற்றைத் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.
முக்கிய எதிரியை நிராயுதபாணியாக ஆக்கி வலுவிழக்கச் செய்துவிட்டால் மற்ற எதிரிகளை வீழ்த்துவது பெரிய விஷயமல்ல. காரணம், அதையே சமாளித்துவிட்டேன்; மற்ற பொடிசுகள் நமமுன் எம்மாத்திரம் என்கிற தன்னம்பிக்கை நமக்குள் வந்துவிடும்.
அவசரம், அவசியம் கருதி, தீர்க்க வேண்டிய போரிடவேண்டிய, வென்று வெளிவர வேண்டிய பிரச்னைகளின் வரிசை மாறுபடலாம். இதில் தவறேதும் இல்லை.
தொடர் சோதனைகள் நம்மைப் புடம்போடவல்லவை. அறுக்கப்படும் வைரமும் செதுக்கப்படும் மரமும் நன்மைக்கே.
சூழ்நிலைகளைவிட நான் வல்லவன் இதனையும் இதற்கு மேலும் வந்தாலும் நான் சமாளிப்பேன் என்கிற உணர்வு ஒன்று இருந்தால் போதும்! அடுத்த சோதனையை மட்டுமல்ல. அடுக்கான சோதனைகளைக்கூடத் துணிவுடன் சந்திக்கும் மனப்பக்குவம் வந்துவிடும்!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































March 8th, 2010 at 11:46 pm
சூழ்நிலைகளைவிட நான் வல்லவன் இதனையும் இதற்கு மேலும் வந்தாலும் நான் சமாளிப்பேன் என்கிற உணர்வு ஒன்று இருந்தால் போதும்