Friday, 27 Nov 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம்
சிவன்கோயில் தலவிருட்சம்
கம்பு(PENNISETUM TYPEHOIDEUM)
சித்த மருத்துவம்
கம்பு - இது தானிய வகையைச் சேர்ந்தது. இனிப்புச் சுவையை உடையது. உடலுக்கு உரமாக்கும் செய்கை கொண்டது.
கம்பு : கம்புமாவுக்கூழ் உடலைத் தூய்மையாக்கும்.
கம்பு அரிசி : இது சொறி, சிரங்கு இவற்றை உண்டாக்கும். உடற்கொதிப்பை அகற்றி குளிர்ச்சியைத் தரும். உடலுக்கு பலத்தை ஊட்டும்.
கம்பஞ்சாதம் : இதனால் இருமல், இரைப்பு, சிரங்கு முதலியவை பெருகும். உடல் பெரிதாகும். உடலிலுள்ள இரத்தம் வற்றி அதன் நிறம் மாறும்.
கம்பங்கூழ் : கம்பரிசிக் கூழில் சிறிது பசுவின் தயிராவது, மோராவது கூட்டி காலைதோறும் குடித்து வந்தால் குலை எரிவு சாந்தமாகும். கம்பைச் சமைத்து எருமைத் தயிர்விட்டுப் பிசைந்து முளை மூலத்துக்குக் கட்டிவர குணம் உண்டாகும்.
யுனானி மருத்துவ குணங்கள்
தோற்றம் : இது ஒரு தானியமாகும். இதில் ரொட்டி தயார் செய்து சாப்பிடுவார்கள்.
இயல்பு : உஷ்ணம் - வறட்சி (இரண்டாம் நிலை)
பண்புகளும் பயன்களும் : கம்பை ரொட்டியாகச் சமைத்துச் சாப்பிட பயன்படும். தண்ணீர் தாகத்தை ஏற்படுத்தும். இதை ஒரு பொட்டலத்தில் கட்டி வாணலியில் வைத்து சூடு செய்து, வயிற்று வீக்கம், வயிற்று வலி போக்க வெது வெதுப்பான சூட்டில் ஒத்தடம் கொடுப்பார்கள்.
தீய விளைவுகள் : உணவை மெதுவாக ஜீரணிக்கச் செய்யும்.
தணிக்கும் முறை : எண்ணெய் பொருட்கள் மற்றும் பால் கலந்து பயன்படுத்த வேண்டும்.
தீர்க்கும் நோய்கள் : வயிற்று வலி, வயிற்று வீக்கம்.
சிறப்புக் குறிகள் : வாயு மற்றும் வீக்கங்களைக் கரைக்கிறது.
அளவு : ஜீரணிக்கும் அளவு
அனுபானங்கள் : இதற்கு மாற்றாக சாகுன் பயன்படுத்தலாம்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
வள்ளிமலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன் கோயில் தலவிருட்சமாக கம்பு வணங்கப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்
2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்
2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்
2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)
2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்
2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை
2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி
2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை
2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை
2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்
2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்
2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்
2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்
2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்
2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை
2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்
2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்
2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































