» Tamanna willbe next Simran, says Shankar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Tuesday, 24 Nov 2009

Tamanna willbe next Simran, says Shankar

அடுத்த சிம்ரன் தமன்னா! : இயக்குநர் ஷங்கர்

paiya.jpg

லி
ங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்துள்ள பையா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர் பேசுகையில், ‘தமிழ் ப் படஉலகில் சிம்ரன் இடத்தை தமன்னா பிடிப்பார்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

“ஒரு படத்தின் பாடல்கள், படம் வெளி வந்து சில காலம் வரைதான் கேட்க இனிமையாக இருக்கும். ஆனால், யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும். நிறையப் படங்களில் பாடல்கள் எழுதிவரும் நா.முத்துக்குமார், எந்திரன் படத்திற்காக நிறைய கவிதைகள் எழுதித் தந்திருக்கிறார். அவற்றை படத்தில் அங்கங்கே பயன்படுத்தியிருக்கிறேன். கார்த்தி, பருத்தி வீரன் படத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தவர். தமன்னா ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி வருகிறார். சிம்ரன் இடத்தை அவர் பிடிப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை”  என்றார் ஷங்கர்

Related Posts Title


Leave a Reply