இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
இங்கு தடைசெய்யப்பட்ட மிருகங்களின் உறுப்புகள் விற்பனையெல்லாம் இந்தோனேசியாவில் சாதாரணமாகக் கிடைக்கும் என்று நான் விவரித்தபோது வள்ளியப்பனுக்கு மிகுந்த வியப்பு.
“நாட்டுக்கு நாடு விதிகள் எப்படி மாறுபாடாக இருக்கின்றன பார்த்தீர்களா?” என்றார் வள்ளியப்பன்.
வள்ளியப்பன் விட்டுக் கொடுக்காமல் பேசினார். “நம் நாடு வன உயரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அருமையான விஷயம். அவற்றிற்கும் இந்த உலகில் வாழ உரிமை இருக்கின்றன. ஆடு, மாடு, கோழிகளை மனிதன் உற்பத்தி செய்கிறான். பிறகு உணவிற்காக இவற்றைப் பெருமளவில் கொல்லுகிறான் தவறில்லை. ஆனால் வன உயிரினங்கள் விஷயத்தில் அப்படி அல்ல. உற்பத்தி விகிதத்தைவிட அழிக்கும் விகிதம் அதிகமாக இருப்பதால் இத்தகைய உயிரினங்கள் உலகிலிருந்து மறைந்தே போகும். எனவே, மான் தோல், பாம்புத் தோல், புலித் தோல் என்று ஆசைப்பட்டு இதைத் தொழிலாகச் செய்பவர்களுக்குக் கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் விதிப்பது நன்மைக்குத்தான்” என்று ஆதரவாகவே பேசியபோது, அதில் உள்ள நியாத்தை என்னால் உணர முடிந்தது.
“இந்தோனேசிய மக்களைப் பற்றிச் சொல்லுங்கள் வள்ளியப்பன். என்னைப்போல் விரைவுப் பயணம் மேற்கொள்கிறவர்களால் இக்குறுகிய காலத்தில் மக்களைப் பற்றியோ அவர்களைப் பற்றிய தகவல்களையோ சரிவர அறிய முடியவில்லை. நீங்கள் இங்கு பல வருடங்கள் இருந்தவர் என்பதால் கேட்கிறேன்.”
“சொல்கிறேன். பொதுவாக முஸ்லிம் நாடுகள் குடும்பத் கட்டுப்பாட்டை மக்கள் மத்தியில் வலியுறுத்துவது இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் இந்தோனேசியா விதிவிலக்கான நாடு. ஆண்டிற்கு 15 சதவிகிதம் வீதம் உயர்ந்து கொண்டிருந்த இந்தோனேசிய மக்கள் தொகை இப்போது 1.25 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கணக்குப் போட்டுப் பாருங்கள். 24 கோடிப் பேர் கொண்ட இந்த நாட்டிற்கு இது சிறப்பான குறைப்பு என்பேன். உலகின் நான்காவது ஜனத்தொகை கொண்ட பெரிய நாடு இந்தோனேசியா.”
“ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“அவ்வளவாக வளமான நாடல்ல என்பதால் வருடத்திற்கு 36 இலட்சம் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததும் பயந்து விட்டது இந்தோனேசிய அரசு. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது பெரும்பாலானவர்கள் இதை ஏற்க மறுத்துவட்டார்கள. பார்த்தது அரசு. யார் முன் வருகிறீர்களோ அவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை, சலுகைகள் என்று ஆரம்பித்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. இங்கு இந்துக்களும் நிறைய வசிப்பதால் இவர்களின் ஆதரவு பெரிய பலமாகிவிட்டது அரசுக்கு. இன்னமும்கூட இரு குழந்தைகள் போதும் என்கிற பலமான பிரசாரம் நடக்கிறது. இதுபற்றி உங்களுக்கு ஏதும் தெரிய நேர்ந்ததா?”
“இல்லை… நீங்கள் சொல்லித்தான் தெரியும்.”
“ஜனத்தொகை நெருக்கத்தை இந்தோனேசிய அரசு கட்டுப்படுத்த எண்ணி ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வந்தது. நம் நாட்டிலெல்லாம் இது நடக்கவே நடக்காது.”
‘நெருக்கத்தை என்றா சொன்னீர்கள்? அல்லது பெருக்கத்தை என்கிறீர்களா?”
“நெருக்கத்தை என்றுதான் சொன்னேன். இந்தோனேசியாவிலேயே ஜாவாவில்தான் மக்கள் தொகை நெருக்கம் மிக அதிகம். இவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மிகச் சிரமமாக இருந்ததால், மக்களை வேறு இடத்தில் குடியமர்த்த முடிவு செய்தது.”
“மக்களின் ஆதரவு?”
“எதிர்ப்பும் ஆட்சேபமுமாய் இருந்தபோதும் 32 இலட்சம் பேரை அழகாக நகர்த்தி, மக்களின் அடர்த்தியைக் குறைத்து விட்டது. நம் ஊரில் நடக்குமா?”
“ஒருக்காலும் நடக்காது. என் ஜனநாயக உரிமையை எப்படிப் பறிக்கலாம் என்று வழக்குப் போட்டு நிறுத்தி விடுவார்கள்.”
“இங்கு அது நடக்காது.”
“மக்கள் எப்படிப்பட்டவர்கள்?”
“மொத்தத்தில் மிக நல்லவர்கள். 360 மொழிகள். மாறுபட்ட கலாசாரங்கள். ஏராளப் பழங்குடிகள். ஆனாலும் நாம் அனைவரும் ஒருவரே என்று மிக ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.”
“இந்தோனேசிய மக்கள் எங்கிருந்து குடியேறியவர்கள்?”
“சீனாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் குடியேறிய மக்களின் வழித்தோன்றல்கள் இவர்கள். கொஞ்சப்பேர் மெலோனேசியர்கள்.”
“மெலோனேசியர்களா? கேள்விப்பட்டதே இல்லையே?”
“எனக்கும் இவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. மானிடவியலாளர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“தமிழகத்தின் மதுரையில் டாக்டர் பிச்சப்பன் என்பவர் இருக்கிறார். கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“ஆமாம். உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மானிடவியலாளர். நேஷனல் ஜியாகிரபிக் சேனல் அமைப்புக்கூட இவரது ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி ஆர்வம் காட்டுவதாகச் சொல்லுவார்கள்.”
“ஆமாம். அவரேதான். இவர் ஒரு மனிதனின் எச்சிலை எடுத்து, ஆராயந்து இவன் எந்தப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்தவன், எந்த மண்ணில் பிறந்தவன் என்று பூர்வீக ஜாதகங்களையெல்லாம் எடுத்து விடுவார்.”
“எச்சிலை எடுத்தா?”
“ஆமாம்”
“இரத்தத்தை எடுத்து என்று சொல்லுங்கள்.”
“இல்லை. நன்றாகத் தெரியும். உமிழ் நீரில் அவ்வளவு வரலாறும் இருக்கிறதாம்.”
“ஆச்சரியமாக இருக்கிறது.”
“திருமண உறவுமுறைகள் எப்படி?”
“ஆண்கள் மனைவியின் அனுமதியுடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்.”
“இரண்டு என்பது அப்படியே நீளுமா?”
“பெரும்பாலும் இல்லை. இரண்டு பெண்டாட்டிக்காரர்களை இந்தோனேசியாவில் அதிகம் பார்க்கலாம். ஆனால் மூன்று பெண்டாட்டிக்காரர் நான்கு பெண்டாட்டிகாரர்களை அதிகம் காண முடியாது. உங்களுக்கு ஒரு வியப்பான செய்தி சொல்லவா?”
“சொல்லுங்கள்.”
“உலகில் இந்தியா, நேபாளத்திற்கு அடுத்து, இந்தோனேசியாவில்தான் இந்துக்கள் அதிகம். இத்தனைக்கும் இது ஒரு முஸ்லிம் நாடு”.
“இந்தோனேசியர்களை நல்ல உழைப்பாளிகள் என்று என்னால் சொல்ல முடியவில்லை.”
“உண்மை. இந்தோனேசிய மக்களுள் 3 சதவிகிதம் பேர் சீனர்கள். இவர்கள் கையில்தான் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே அடங்கியுள்ளது. இவர்களை எதிர்த்துக்கொள்ளும் ஆற்றல் இந்தோனேசிய அரசிற்குக்கூட இல்லை.”
“இவர்களை ஏன் எதிர்த்துக் கொள்ளவேண்டும்?”
“சும்மா ஒரு பேச்சிற்குச் சொன்னேன். நம்மூர் போல இல்லை. எல்.கே.ஜி, யு.கே.ஜி, பிரி.கே.ஜி.யெல்லாம் இங்கு இல்லை.”
“பின்னே?”
“ஆறு வயதிற்குள் பள்ளிப் பக்கம் எட்டியே பார்க்கக் கூடாது. கல்வி கற்க வேண்டும் என்பது இங்கே வற்புறுத்தப்படாதபோதும் 84 சதவிகிதம் பேர் இந்தோனேசியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
“ஆச்சரியம்தான்!”
“இந்தோனேசிய மக்களுக்கு நம் நாட்டில் பிடித்த விஷயம் என்று ஒன்று உண்டு. அது என்ன சொல்லுங்கள் பார்ப்போம்.”
“தெரியவில்லை.”
“யோசிச்சுப் பாருங்க.” சொன்னார். உண்மையில் வியப்பாக இருந்தது எனக்கு.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































