Friday, 20 Nov 2009
‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………
இலங்கையில் தமிழ் மக்களை கொன்றுகுவித்த ராஜபக்ஷே, திருப்பதி வந்து செல்கிறார். அதேநேரத்தில், மலையாளிகளை கொன்று குவித்து விட்டு, இவரால் கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல முடியுமா? சீக்கியர்களை கொன்றுவிட்டு, பொற்கோவிலுக்கு தான் செல்ல முடியுமா?
-வைகோ
அதைத்தாங்க நாங்களும் கேட்கிறோம். நீங்கள் எப்படி விட்டீர்கள்?
மத்திய, மாநில அரசுகள் தேசிய பெண்கள் கமிஷனின் கருத்துக்களை மட்டும் கேட்டுவிட்டு, ஆண்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி வருகிறது. இதனால், ஆண்கள் சமூக பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஆணகளின் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும்.
-தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன்
சபாஷ் சரியான போட்டி! பெண்கள், ஆண்களை ஒப்பிட்டு போட்டியிட்ட காலம் மாறி, பெண்களுடன் ஆண்கள் போட்டியிடும் காலம் வந்துவிட்டதைக் கண்டுதான் வருத்தமாக இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி வயது, அனுபவத்தில் மூத்தவர். எனவே, ‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் சிலரின் உளறல்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ என, என்னைப் பற்றி கூறிய கருத்திற்கு, நானும் அவர் போல் தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பில்லை.
- முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்.
நீங்கள் பேசுவதைப் பார்த்தால், உண்மையை உணர்ந்ததுபோல் தெரியவில்லையே.
































