» Diabetes .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 20 Nov 2009

Diabetes

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

நின்று கொல்லும் நீரிழிவும்
கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

தொடர்ச்சி…

மனஉறுதி
நல்ல உடல் மற்றும மன நலம் காக்கும் தூய சிந்தனையோடு நல்ல பழக்கங்களை மேற்கொள்வதை முடிவானதாக்க மன உறுதி வேண்டும். அகலக்கால் வைப்பதைவிட ‘ஒரு நேரத்தில் ஒரு அடி’ என்று காலை எடுத்து வையுங்கள். நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற முடியும்.

உண்மையிலேயே பயன் பெற விரும்பினால், நான் இன்னது செய்யப்போகிறேன் என்று திட்டவட்டமாகத் தீர்மானித்துச் செயல்படுங்கள். ‘எது மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைப்போலவே ‘எதற்காக மாற வேண்டும்’ என்பதும் முக்கியம். அனாவசியச் செலவுகளை குறைத்துச் சேமிக்கப் போகிறேன் என்று பொதுப்படையாகத் தீர்மானிப்பதை விட சேமித்து வீடு வாங்குவேன் என்பது சிறந்த தீர்மானம். நான் தவறான உடலை பாதிக்கக்கூடிய தீய பழக்கங்களை விட்டு விடப்போகிறேன் என்ற சபதம் எடுக்கும் ஒருவர், தனக்காக, தன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் தீர்மானித்திருந்தால் அவருடைய முயற்சி வெற்றியடையும் வாய்ப்பு அதிகம். காரணம், அவருடைய சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய விவேகம் தான். அதைப்போன்றே ஒரு வேண்டாத பழக்கத்தை விடுவதைக் காட்டிலும் ஒரு விரும்பத்தக்க பழக்கத்தை மேற்கொள்வது சுலபம். வாக்கிங் போவதற்கே நேரம் கிடைக்கவில்லை என்கிறவர் ஆபிஸோ அல்லது தான் தொழில் புரியும் நிறவனத்திலிருந்தோ கொஞ்ச தூரம் நடந்து வருதலும் அதைப்போன்றே விடுமுறை நாட்களில் காலையோ அல்லது மாலையோ ஆலயம், பூங்கா, மால் போன்ற பெரிய அங்காடி வளாகத்தைச் சுற்றி நடந்தாலோ போதும். இது ஆரோக்கியத்திற்கு, முக்கியமாக மன உளைச்சல், இருதய சம்பந்தமான பிரச்னை, கொலஸ்டரால், கொழுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு, தூய காற்றை சுவாசிப்பதால் அனைத்து வகைகளிலும் பயன் தரும். வாழ்க்கையில் நலமுடன் இருந்து, சிறந்த நிலையைப் பெற முடியும். பலரும், மெச்சத்தக்க வகையில் விளங்க வேண்டும். பேரும் புகழும் பெற்ற, பிறருக்கு உதவி புரிந்து தர்ம சிந்தனையும் பக்தியுணர்வும் மேலிட தன்நம்பிக்கையுடன் வாழ முற்பட வேண்டும். ஆனால் ஒரு சிலரே அத்தகைய நிலையை அடைகிறார்கள். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. நம்முடைய நல்வாழ்வு, நம்முடைய வளமான எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல், சக்தி, உயர்ந்த எண்ணங்களுடன் கூடிய தன்னம்பிக்கை அனைத்தும் நம்மிடத்திலேயே இருக்கிறது. பிறரைச் சார்ந்து நிற்பதால் பயன் விளையாது என்பதை உணர வேண்டும். சிறப்பாக நலமாய் வாழ வேண்டுமா? அதற்கு அடிப்படையாக அமைவது பின்வரும் வழிமுறைகள் தான்.

அவையாவன :

பசித்துப் புசி - மனதை ஒருமுகப்படுத்தி எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ முற்படுதல் - நல்ல ஆரோக்கியத்திற்கு உபவாசம் (எகாதசி தினங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வது என்பது - தமிழர்களின் கலாச்சார மரபு) கோபத்தை கட்டுபடுத்துவது - இயற்கை உணவு வகைகளான பச்சைக் காய்கறிகள், பழ வகைகள், மூலிகை ஜூஸ், சோயா பால், தயிர், மோர் ஆகியவற்றோடு வேக வைத்த உணவு வகைகள் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுபவை - யோகா, தியானம் நடைப்பயிற்சி, ஆலய வழிபாடு - இரவு நிம்மதியான நித்திரை - குடும்ப இயற்கை மருத்துவரை அடிக்கடி கலந்து ஆலோசித்து நோய் வருமுன் காப்பதற்கும், வந்தபின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளில் கவனமாக இருத்தல் என் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய கால கட்டத்தில் வியாதி இல்லாத மனிதனே இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் வியாதி அதுவா வரலை, நாமாகவே வரவழைச்சுட்டு அப்புறம் நாமே உடம்பு சரியில்லை என புலம்புகிறோம். உதாரணத்துக்குப் பெண்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே அனைத்து வீடுகளிலும் அவர்களுக்கு பிசிகல் வொர்க் ரொம்பக் குறைச்சல். காரணம், இந்தக் காலச் சூழ்நிலை, விஞ்ஞான நாகரிக முன்னேற்றம், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் சந்தைப்படுத்தப்படும் விதம், தாயகத்தில் வாழும்போது அன்றாடம் நமது வீட்டில் உள்ள பெண்களின் அன்றாட வேலைகளே ஓய்வின்றி இருக்கும். காலையில் இருந்து மாலை வரை, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கி சுத்தம் செய்து, மெழுகி கோலம் போட்டு, காலை-மதியம்-இரவு உணவு தயாரித்தல், நெல் குத்தறது, மாவு அரைப்பது என்று இருந்தார்கள். இன்று நவீன இயந்திரங்கள் இவற்றைச் செய்கின்றன. ஆனா உடம்பு ஒரே உடம்புதானே? வேலை செய்யாம ஒரு மெஷினை நிறுத்தி வையுங்க. துருப்பிடிச்சுப் போகாதா? அதைப்போலத்தான் மனித உடம்பும், மூளையால் வேலை செய்ய ஆரம்பிச்சு உடம்பு வேலையைக் குறைச்சுட்டோம். எத்தனையோ நவீன தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொண்டிருக்கும் நாம நம் உடம்பைப் பற்றிய அந்த அடிப்படை விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையா? தெரியுது, ஆனால் அலட்சியப் படுத்துகிறோம். டயட்டில் இருக்கேன். சாப்பாட்டைக் குறைத்து விட்டேன். ஆனாலும் உடம்பு பெருத்து விட்டதே என்பதெல்லாம் சரியில்லை. அது தேவையில்லை. நன்றாக பசி இல்லாமல் வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். முப்பது வயதிற்கு மேல் ஆண்களாயினும், பெண்களாயினும் நிறைய காய்கறிகளை சாப்பிடலாம். அப்படியென்றால் எண்ணெயில் போட்டு வதக்கிய பொறியல் அல்ல. வேகவைத்த காய்கறிகள், பாசிப்பயிறு சேர்ந்த கூட்டு, காரட், வெள்ளரி, பச்சை வெங்காயம், அனைத்து கீரை வகைகள், சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அழகுக்காக லோஷன், கிரிம், பேஸ்ட் என வேஸ்டாக அலைவதை விட்டு, இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கறிகளோடு டு இன் ஒன்னாக வேலை செய்யும். இவை உடம்பை பெருக்க வைப்பதில்லை. அழகிய தோற்றத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அனைத்து உடல் அங்கங்களும் பொலிவும் திடமும் தந்து சிறந்த தோற்றத்தை அளிக்கும். நாம் தினமும் குளிப்பது, சாப்பிடுவது என்பதையெல்லாம் வாழ்க்கையில் ஒரு கட்டாய அங்கமாக வைத்திருக்கிறோம். இல்லையா? அதுபோலவே இந்த காய்கறிகளை, முக்கியமாக அனைத்து கீரை வகைகளையும் பழங்களையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதையும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஓரளவு நாம் விரும்பும் மற்ற அசைவ உணவுகளையும் சாப்பிடலாம். இப்படி உணவே மருந்தானால் நோயற்ற வாழ்வு என்பது எளிதாகும்.

ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி நல்ல நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இதுவே சித்தர்களின் கோட்பாடாகும். இந்த அடிப்படையில் தான் சித்தர்கள் வியாதி வராமல் தடுக்கவும், வந்தபின் தீர்க்கவும் இயற்கை மருத்துவ வழி வகைகளை கண்டுபிடித்து நமக்கெல்லாம் தந்திருக்கின்றார்கள். எனவே இயற்கை மருத்துவ சிகிச்சை என்பது அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ள அற்புதமான வரமாக நமக்கு இறைவன் அளித்திருக்கிறார்.

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Most Commented Posts


Leave a Reply