» Japan makes novelty bras! .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Monday, 16 Nov 2009

Japan makes novelty bras!

கல்யாணத்துக்கு அழைப்பு விடுக்கும் ப்ரா! : ஜப்பான் செய்துவரும் ப்ரா புரட்சி

marriage-hunting-bra.jpg

ப்பான் நிறுவனமான டிரிம்ப் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள புதிய பிரா ஜப்பான் தாய்மார்களை அலற வைத்திருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்களை திருமணத்துக்கு தயார் என்று அறிவிக்கும் வகையில் அணியும் பிரா இது. ‘திருமணம் நாடி’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராவில் டைமர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பீப் ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கும். அதற்கு சற்று மேலாக திருமண மோதிரம் வைக்கும் துளை உள்ளது. டைமரின் சத்தத்தை நிறுத்தவேண்டுமானால், இந்த துளையில் மோதிரத்தை வைக்கவேண்டும். இந்த பிராவின் இடது புறம் பேனா பாக்கெட்டும், வலது ஓரத்தில் ஸ்டாம் ப் சீல் வைக்கும் பாக்கெட்டும் உள்ளன. இவையிரண்டும் திருமணத்தின் போது தேவையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் திருமண ஆசையை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும், திருமணத்திற்கு தாங்கள் தயார் என்று  ஆண்களுக்கு சமிக்ஞை தரவும் உதவும் இந்த பிரா விற்பனைக்கு வந்திருந்தால் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருக்கும்.

நல்லவேளை… அறிவுப்பூர்வமான  கண்டுபிடிப்பு இது. ஆனால், விற்பனைக்கு அல்ல என அறிவித்துவிட்டது டிரிம்ப் இண்டர்நேஷனல் நிறுவனம்.

இதுமட்டுமல்ல …ஜப்பான்  பல ‘ப்ரா புரட்சி’களை அவ்வப்போது செய்து வருகிறது.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

chopstick-bra.jpg

அன்னக்கிண்ண ப்ரா.. சாப் ஸ்டிக் வைக்க பக்கத்தில் ஓர் அறை உண்டு.

photovoltaic-powered-bra.jpg

போட்டோ வோல்டிக் ப்ரா இது. இதில் உள்ள சோலார் பேனல் மூலம் மின்சாரத்தை உருவாக்கி பல்புகளை எரியவிடலாம்.

jury-system-bra.jpg

தராசு பிரா. பெண் நீதிபதிகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டதாம்.

make-the-putt-bra.jpg

இதன்  பெயர் மேக் தி புட் பிரா. கோல்ஃப் ஆடும்போது போட்டுக்கொள்வது. கோல்ஃப் பந்தை துளைக்குள் தள்ளும்போதெல்லாம் ‘நைஸ் ஷாட்’ என்று பாராட்டுமாம் இந்த ப்ரா. கீழே அணியும் ஸ்கர்ட்டில் ‘பி க்கொயட்’ -அமைதி காக்கவும் என்று அச்சிடப்பட்டிருக்கும்.

the-eco-globe-bra.jpg

இது இயற்கைக்கு ஊறு விளைவிக்காத ப்ரா. மக்காச்சோளம் மற்றும் அம்பாரி தானியங்களில் இருந்து எடுக்கப்பட்ட இழைகளால் தயாரிக்கப்பட்டது. மண்ணில் இருந்து வந்ததை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்தாலும் மறுபடியும் மண்ணோடு  மண்ணாகிவிடும்.

warmbiz-bra.jpg

உடம்புக்கு கம்பளி போல இது. இதை அணிவதன் மூலம் குளிரில் இருந்து தப்பிக்கலாம். ஹீட்டர் பயன்பாடும் குறையும்.

no-more-plastic-bags-bra.jpg

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு ‘டாட்டா’  காட்டச் சொல்லும் பிரா. பழைய உள்ளாடையில் உருவான காய்கறி பை.

voter-turnout-lift-up-bra.jpg

தேர்தல் நேர ப்ரா. 2007 இல் ஜப்பானில் தேர்தல் நடந்தபோது அறிமுகமான ப்ரா இது. ப்ராவின் கப்புகள் ஓட்டுப்பெட்டியைப் போலவும், கீழே உள்ள ஸ்கர்ட் ஓட்டுச்சீட்டுகள் போலவும் இருப்பதைப் பார்க்கலாம்.

Related Posts Title


Leave a Reply