இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
இந்தோனேசிய மக்கள் மிக சாதுவானவர்கள். நான் இங்கு இருந்தவரை எவருமே என்னிடம் கோபமாகப் பேசியதோ நடந்து கொண்டதோ இல்லை.
இன்னும் சொல்லப்போனால், கோபமாக ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டதைக்கூட நான் பார்க்கவில்லை. கேள்விப்படவும் இல்லை.
ஆனால் இந்தோனேசிய உணவு இருக்கிறதே இது மகாக் காரம். இதைச் சாப்பிட்டால் தரைக்கும் உச்சித்தளத்திற்கும் ஒரேடியடியாகக் குதிக்க வேண்டியதுதான்.
ஆந்திராக்காரர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை இந்த உணவு சரிப்பட்டு வரலாம்.
நான் இயல்பாகவே காரத்தை விரும்பாதவன். எவரேனும் உணவருந்த அழைத்தால் ‘காரம், எண்ணெய் குறைவாக இருக்கட்டும்,’ என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாகச் சொல்லிவிடுவது உண்டு.
ஓட்டல்களில் சில்லி பரோட்டா சொன்னால்கூட லெஸ் ஸ்பைசி (குறைவான காரம்) என்றுதான் ஆர்டர் கொடுப்பது வழக்கம். இந்தியாவில் இப்படி விழிப்பாக இருந்த நான், இந்தோனேசியாவில் ஏன் விழிப்பாக இல்லை. எதையும் அசலாகப் பார்த்துவிடுவதுதான் என்கிற நப்பாசை போலும்.
இந்தோனேசியாவில் நாசி என்றால் அரிசி என்று பொருள். ஆனால், அரிசியை நாசி அருகே கொண்டுபோகவே யோசனையாக இருக்கிறது. ஆமாம் ஒரு மாதிரியான வாடை வருகிறது. இந்த வாடையை எனக்கு விளக்கத் தெரியவில்லை. வெகுநாள் கோடவுனில் அடைத்து வைத்து மக்கிப் போவதற்குச் சற்று முன்பு எடுத்துச் சமைத்தால் வருமே ஒரு வாசம், அந்த வாசத்திற்கு ஒருபடி கீழே உள்ள வாசம். இதைச் சகித்துக் கொள்ளத் தனி மனநிலை தேவை என்பேன்.
இந்தோனேசியாவில்தான் அரிசிச் சாப்பாடு கிடைக்கிறதே என நம்பி வர முடியாது. நாசியைப் பிடித்துக்கொண்டு நாசியை உள்ளே இறக்க வேண்டியதுதான்.
இந்தோனேசியாவில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் குறைவாம். காரணம், இவர்களது உணவுப் பழக்கம்தான்.
காப்பியைப் பால் இல்லாமலும், சர்க்கரை கலக்காமலும் அருந்துகின்றனர். ஆமாங்க! வெறும் டிக்காஷனை அப்படியே குடித்துவிட்டு இனிது இனிது இந்தோனேசிய காப்பி இனிது என்கிறார்கள்.
நாமோ இருப்பதிலேயே கெட்டியான பாலைத் தேர்ந்தெடுத்து, அதிகமாய்ச் சர்க்கரை இட்டு அடிக்கடி குடித்து கொலஸ்ட்ரால், சர்க்கரை ஆகியவற்றின் கிடங்குகளாக வலம் வருகிறோம்.
இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் என்றாலும் வியட்நாமியர்களின் உணவுப் பழக்கங்கள் இந்தோனேசியர்களைவிடச் சிறந்தவை என்பதாலும் ஆசியாவில் கிட்டத்தட்ட சமகோட்டில் வாழ்பவர்கள் என்பதாலும் நான் எழுத இருக்கும் வியட்நாமியத் தொடரில் இதுபற்றி மீண்டும் அலச இருக்கிறேன்.
ஓட்டல் அறைக்கு நான் திரும்பிய ஒரு வேளையில் ‘சார், உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது’ என்றார் ஓட்டல் வரவேற்பாளர்.
எனக்கா? இங்கா? நான் இங்கு தங்கியிருப்பது ஓரிருவருக்குகூடத் தெரியாதே! யாராக இருக்கும்?
பெயரைப் பார்த்தால் வாளியப்பன் இந்தியாவிலிருந்து என்று இருந்தது!
‘தொலைபேசியை எடுத்தவர் யார்? வாளியப்பன் என்று எனக்கு எவரையும் தெரியாது.”
“எடுத்தவர் பணி முடிந்து இல்லம் சென்றுவிட்டார்.”
“தொலைபேசி எண் தரவில்லையா அந்த வாளியப்பன்?”
“தந்திருந்தால் குறித்திருப்பார்” தன் சக ஊழியரை விட்டுக்கொடுக்காமல் பேசினார் அந்த வரவேற்பாளர்.
“இருக்காது. இவ்வளவு தூரம் என்னைத் தேடிப் பிடித்துப் பேசுகிறவர் எண் தராமல் இருக்கமாட்டார். உங்கள் சக ஊழியருக்குத் தொலைபேசி இருக்கிறதா?”
“இல்லை.”
ஒன்று, இது மிக நல்ல செய்தி அல்லது கெட்ட செய்தி. அரட்டை அடிக்கவோ கதை பேசவோ இந்தோனேசியாவிற்கு ஒரு போதும் எவரும் பேசியிருக்கமாட்டார்கள். என்னவாக இருக்கும். அடி வயிற்றைப் பிசைவது போல் இருந்து எனக்கு.
வள்ளியப்பனைத்தான் வாளியப்பன் என்று புரியாமல் எழுதி வைத்திருக்கிறாரோ அந்த வரவேற்பாளர்? இருக்கும். வேறு எந்தப் பெயரும் வாளியப்பனோடு நெருங்கி வரவில்லை.
சரி, வள்ளியப்பன் என்றால் எந்த வள்ளியப்பன்? என் வட்டத்தில் பல வள்ளியப்பன்கள் உண்டு. யாராக இருப்பார்கள்?
பேசாமல் வீட்டிற்குப் பேசிவிடுவோமா? வீட்டிற்குப் பேசி ஓட்டல் விபரங்களைப் பெற்றுத்தான் இந்த ஓட்டலில் நான் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்.
கடிகாரத்தைப் பார்த்தேன் ஊகும். பேச முடியாது. நேரம் கடந்து நள்ளிரவாகிவிட்டது. காலையில் பார்த்துக்கொள்ளலாம்.
படுத்தால் வாளியப்பன்தான், நினைவில் நிறைய வலம் வந்தார். சே! யாரிந்த மனுஷன்? வீட்டைக் கலக்கி விபரம் பெற்று ஓட்டலைக் கலக்கி எந்த விபரமும் சொல்லாமல் வைத்துவிட்டாரே!
இவனுகளாவது என்ன விஷயம் என்று கேட்டு வாங்கக் கூடாதா? சரியான மக்குப் பசங்க. இவனுகளைத் திட்டவும் முடியலை. என்ன பேசினாலும் அது அவர்களது மூளைக்குள் இறக்குமதியாகுமா என்பதே சந்தேகம். எரிச்சலாக வந்தது.
இப்போதெல்லாம் எப்போதும் எங்கு சென்றாலும் சி.டி.பிளேயர் அல்லது கேசட் பிளேயர் அல்லது ஐ-பாட் எடுத்துச் செல்கிறேன்.
எம்.ஜி.ஆர் படத் தத்துவப் பாடல்கள் சற்று பிடிக்கும். அன்னமிட்ட கை பாடல் முடிந்து ஒரு பாடல் ஆரம்பித்தது பாருங்க, செம சிச்சுவேஷன் சாங்!
“அவெனுக்கென்ன! தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா?” என்று ஆரம்பித்தது அந்தப் பாடல். ரொம்பப் பொருத்தமான நேரம், பொருத்தமான பாடல்தான் என்று தோன்றியது.
எப்படியோ உறங்கிப் போனேன். காலையில் இந்தோனேசியாவில் சீக்கிரம் விடிந்துவிடும். இந்தியாவில் பிறகுதான் விடியும்.
காலையில் நடைப்பயிற்சி செல்லலாம் என்று நடந்தேன். தமிழ்ச் செய்திகள், தமிழ்த்தாள்கள் கேட்காமல் படிக்காமல் காலைப்பொழுது ஒரு நல்ல பொழுதாகவே கழிவதில்லை. வெளிநாடுகளில் என்ன செய்வது இந்தச் சூழலுக்குப் பழக வேண்டும்.
நடைப்பயிற்சி முடிந்து அறைக்குக் திரும்பியபோது ஆவலாய் விசாரித்தேன். “ஏதும் தொலைபேசி வந்ததா?”
“வரலை”
சே! இந்த வாளியப்பன் கொஞ்சமும் சரியில்லை. என்னவோ ஏதோ என்று ஒரு தொலைபேசிக்கும் மறு தொலைபேசிக்கும் இடையே தபிப்போமே என்கிற கவலை இவருக்கு அடியோடு இல்லை போலும்!
குளித்துக் கொண்டிருக்கையில் என் அறைத் தொலைபேசி மணி அடித்தது.
ஆர்க்கிமிடிஸ் ஒரு விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்ததும் அப்படியே குளியலறையிலிருந்து யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு துண்டுகூடக் கட்டிக்கொள்ளாமல் ஓடினாராம். நான் அப்படியில்லை. அதே நேரத்தில் மணி நிற்குமுன் எடுத்துவிடவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தொலைபேசி வரை தவிப்புதான்.
ஈரம் சொட்டச் சொட்டத் துண்டைச் சுற்றிக்கொண்டு தொலைபேசியை நோக்கி ஓடினேன்.
எடுத்தேன். “யாரு?”
“நான்தான் வள்ளியப்பன் பேசறேன். யப்பா நீயா? நண்பா! நேத்துப் பேசிக் கலக்கிட்டியேப்பா என்னை. என்ன இப்படி நாடுவிட்டு நாடு?”
“என் மகளுக்குக் கல்யாணம். முதல்ல உனக்கு சொல்லணும்னதான்.”
“அப்பாடா! நல்ல செய்தி! எவ்வளவு நாளாக எதிர்பார்த்த செய்தி தெரியுமா? மகிழச்சி.” கையோடு நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.
“இந்தோனேசியாவுல என்ன கிடைக்கும்? இங்கே கிடைக்காத ஏதாச்சும் வாங்கிட்டுவா! நினைவா வச்சுக்குறேன்!”
“இந்தோனேசியாவுல வாங்கும் படியாக எதுவும் இல்லை. இந்தியாவுல கிடைக்காதது சிலது இங்கே கிடைக்குது. வாங்கிட்டு வரவா?”
“என்னது?”
“புலிப்பல்! சிறுத்தை நகம்.”
வள்ளியப்பனிடமிருந்து பதிலே இல்லை. வாயடைத்துப் போனார்.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































