Friday, 13 Nov 2009
கிளிசரின் - விஜயகுமாரி பாஸ்கரன்
நிறமும், மணமுமற்ற திரவம், சருமத்திற்கு ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுத்தன்மை அளிக்கக் கூடியது. எனவே சருமத்திற்கான கிரீம்கள், சோப்புகள் தயாரிப்பில் சேர்க்கப்படுகின்றது.
குளிர் மற்றும் பனிக் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியினைப் போக்குகின்றது. காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை நிறமற்ற திரவப்பொருள்.
பீர்
பார்லி எனும் தானியத்தை புளிக்கச் செய்து தயாரிக்கப்படும் பானம். நொதிக்கச் செய்யும் “ஈஸ்ட்” கலந்திருப்பதால் சருமத்திற்கு மென்மையளிக்கிறது. கேசத்திற்கு வலுவும் பளபளப்பும் கொடுக்கக் கூடியது.
கோக்கோ பட்டர்
சாக்லெட்டின் இன்சுவையை அறியாதவர்களே இருக்க முடியாது. இது கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோக்கோவின் தாயகம் அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகள். கோக்கோ பசுமை மாறாத தாவரம். கோக்கோ மரம் 4.5 மீட்டர் முதல் 5.5 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பளபளவென்று மின்னும் இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் சுமார் 30 செ.மீ. நீளமுடையது. கோக்கோ பூக்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது. மிகச் சிறியவை. கொத்தாகத்தான் மலரும். முதிர்ந்த கனி சிவப்புக் காவி அல்லது மஞ்சள் நிறத்திலுள்ள விதைக் கூடு. இது உறுதியான மேல் தோலைக் கொண்டது. அதனுள்ளே பிசுபிசுப்பான சதைப் பகுதியினுள்ளே வரிசையாக 20 முதல் 50 வரை கோக்கோ விதைகள் இருக்கும். இந்த விதையில் மேலும் பாதாம் பருப்பிற்கு இருப்பது போல மெல்லிய தோல் இருக்கும்.
கோக்கோ மரம் ஆண்டு முழுவதும் பூத்துக் காய்ப்பதால் பலமுறை அறுவடை செய்வார்கள். நல்ல மணமுடைய இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. புரதச்சத்து, கார்போஹைடிரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சருமத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
அழகுக்கூடும்…
அழகுக் குறிப்புகள்
2009/11/06 உப்பு, தவிடு, முல்தானி மட்டி
2009/10/30 ஏனைய எண்ணெய் வகைகள்
2009/10/09 நீலகிரித் தைலம் (யூகலிப்டஸ்)
2009/04/17 அமுக்கிராங்கிழங்கு (அஸ்வகந்தி)
2009/03/13 கடற்பாசி (ஸ்பைருலினா)
2008/12/26 குப்பைமேனி, பொன்னாங்கண்ணி
2008/10/31 வேப்பிலை (மார்கோசா, வேம்பு)
2008/10/17 கற்பூரவல்லி, ஓமவல்லி - விஜயகுமாரி பாஸ்கரன்
2008/09/12 அழகுக் குறிப்புகள் - புவனா
2008/09/05 அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!
2008/08/29 அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்
2008/08/15 புகைப்பிடிப்பவர்களுக்கு
2008/08/08 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்
2008/08/01 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்
2008/06/13 உடற்பயிற்சி கூடங்கள்
2008/06/06 ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!
2008/05/16 தலைமுடிக்குச் சாயமிடுதல் (டை)
2008/05/09 மணப்பெண் ஆவதற்கு முன்
2008/05/02 தலைமுடிப் பாதுகாப்பு
2008/04/25 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 4
2008/04/18 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 3
2008/04/11 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 2
2008/04/04 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 1
2008/03/28 அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்
































