Friday, 13 Nov 2009
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
வளமான வாழ்விற்கு உணவே மருந்து
நின்று கொல்லும் நீரிழிவும்
கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
தொடர்ச்சி…
சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் பாதிப்பும்
இரத்தக் கொதிப்பு நோயை Silent Killer என்கிறார்களே அதன் காரணத்தைப் பார்ப்போம். டைபாய்டு, மலேரியாவைப் போல ரத்தக் கொதிப்பு 200/120 இருப்பவர் கூட சர்வ சாதாரணமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவருடைய உடலில் விபரீத விளைவுகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கும். அது அவருக்குத் தெரியாது. முக்கியமாக ரத்தக் கொதிப்பினால் இதயம் வீங்கிவிடும். இதயச் செயலிழப்புக்கும் பாதை தரும். மூளையில் ரத்தக் குழாய் வெடித்து பக்க வாதம் வர வழிவகுக்கும். கண்களில் உள்ள விழித்திரையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை இழக்க நேரிடும். இதயத்தமனி ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி மாரடைப்பைத் துரிதப்படுத்தும்.
சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து அது சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். நீரிழிவு நோய்க்குரிய சிக்கல்களைத் துரிதப்படுத்தும். இத்தனை கொடிய விளைவுகளும் ஒரே நாளில் நிகழந்துவிடாது. சிறுகச் சிறுகத் தான் நிகழும். ஆனால் அது நோயாளிக்குத் தெரியாது. ஆகையினால் தான் இந்தப் பெயர். மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. உடனடியாக அவர் தனது மருத்துவரை கலந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாறாக நூற்றுக்கு நாற்பது பேருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சர்க்கரை நோய் இருக்கலாம். அவர்கள் வேறு ஏதாவது நோய்களுக்காக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் போது தான் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையும் அறிய முடியும்.
ஆகையால் நடைமுறையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ரத்தப் பரிசோதனைதான், குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். ரத்தச் சர்க்கரை அளவும் இதற்கு உதவும். உணவு உட்கொள்ளாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 120 மில்லி கிராம் சதவீதமும், உணவு உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும்போது, சர்க்கரையின் அளவு 120 முதல் 160 மில்லி கிராம் சதவீதமும் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனத் தீர்மானிக்கலாம்.
பொதுவாகவே இந்த சர்க்கரை நோய் என்பது, பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், தங்கள் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு 100 சதவீதம். இவை தவிர உடல் பருமனாக இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, மனக்கவலை, உற்சாகமற்ற வாழ்க்கை முறைகள், தொடர்ச்சியாக ஏற்படும் தொற்று நோய்கள், அடுத்தடுத்து கருத்தரிப்பது ஆகிய காரணங்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்த வாய்ப்பாகும். அவற்றில் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய், இன்சுலின் சாரா சர்க்கரை நோய் என்று இரு வகைகள் உண்டு. முதலாவது வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகையினர் தேவைப்படும் காலங்களில் மட்டும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். மற்றபடி சர்க்கரை நோய் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். அது கட்டுப்படுவதோடு பிற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.
முக்கியமாக கொழுப்புச் சத்துள்ள உணவை குறைத்து உணவை கட்டுப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் அளவோடு உண்டு, தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்த பலனை அளிக்கும். உடற்பயிற்சியும் கூட முடிந்தால் காலை, மாலை என இருவேளைகளிலும் செய்தல் நல்லது.
உடல் எடையை உங்கள் வயதிற்கேற்ப கட்டுப்படுத்துங்கள். மனக் கவலைக்கு இடம் அளிக்காதீர்கள். பழங்களை சாப்பிடும்போது கூட ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு அளவு கூடினால் ஆபத்துதான். பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை விலக்க வேண்டும். புரதச் சத்து உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு தினமும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இடைவேளை நேரங்களில் சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம். காபியில் சர்க்கரையை குறைத்தல், நார்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்பு குறைந்த எந்த வகை உணவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நார்மல் ரத்த அழுத்தம்
120/80 மி.மீ. பாதரச அளவு என்பது ஒரு சராசரி நபருக்கு ‘நார்மல்’ ரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் ரத்த அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் ரத்த அழுத்தம். ஆனால் எல்லோருக்கும் இது நிறுத்தி வைத்தது போல 120/80 என்று இருக்காது.
ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள் உடல் உயரம் வித்தியாசப்படுகிற மாதிரி, ரத்த அழுத்தமும் வேறுபடும். சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 90 முதல் 140 வரை எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 60 முதல் 90 வரை எந்த எண்ணிகையிலும் அமையலாம். ஆகையால்தான் உலகச் சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 140/90 மி.மி பாதரச அளவை சராசரி நார்மல் ரத்த அழுத்தம் என்று வரையறை செய்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை (High Blood Pressure) நிர்ணயிப்பது சிஸ்டாலிக் இல்லை. டயஸ்டாலிக்தான். 90க்குள் இருக்க வேண்டிய டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 90 முதல் 104 வரை இருந்தால் அதை லேசான உயர் ரத்த அழுத்தம் எனவும், 104 முதல் 114 வரை இருந்தால் கடுமையான உயர் ரத்த அழுத்தம் எனவும் இனம் பிரிக்கிறோம். பொதுவாகவே வயதானவர்களுக்கு முதுமை காரணமாக ரத்த நாளங்களில் விரியும் தன்மை குறைந்து அவை கடினப்பட்டுப் போவதால் சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் மட்டும் சற்று அதிகமாக இருப்பதுண்டு. இவற்றின் அடிப்படையில் ரத்த அழுத்த நோய் எனப்படும் Blood Pressure-இன் இரண்டு வகைகளை பார்ப்போம்.
ஒன்று உடலில் காரணமே இல்லாத வகை. இது பெரும்பாலும் மனஉளைச்சலால் வருவது. மிகுந்த டென்ஷனான சூழலில் பரபரப்புடன் வேலை செய்வது, அதிக வேலைப்பளு, கவலை, கோபம், பதற்றம், பயம் ஆகிய காரணங்களால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பரம்பரை காரணமும் உண்டு. உடல் எடை சராசரியைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும்.
இரண்டாவது உறுப்புகளைச் சார்ந்த காரணங்களால் வருவது. நாள்பட்ட சிறுநீரகச் கோளாறுகள், ரத்த நாளங்களில் உண்டாகும் சீர்கேடுகள், நாளமில்லா சுரப்பிகளின் கூடுதலான இயக்கம், அட்ரினல் சுரப்பி மீது உண்டாகும் கட்டிகள், மிகுதியான தைராய்டு இயக்குநீர் ஆகியவற்றால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. தவிர ஸ்டீராய்டு மாத்திரைகள், ஈஸ்டரோஜன் கலந்த கருத்தடை மாத்திரைகள், எஃபிட்ரின் சேர்ந்த ஆஸ்துமா மாத்திரைகள் ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாகக் கூறப்பட்ட உறுப்பு சார்ந்த கோளாறுகளை சரி செய்துவிட்டால் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பிறகு சிகிச்சை தேவைப்படாது. ரத்த அழுத்த நோய்க்கு முப்பதுக்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்து ஏதேனும் ஒரு மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். எனினும் உடல் எடைக்கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி ஆகியவை அவிசயமாகும். உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த மருந்தில்லா சிகிச்சை முறை மற்றும் அதன் உணவு முறைகளைப்பற்றி பார்ப்போமா?
உடல் பருமனைக் குறைத்து உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். பரப்பரப்பான வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும். பதற்றமடைவது, அவசரப்படுவது, கவலைப்படுவது, கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது ஆகியவற்றைக் குறைத்து நிதானத்தைக் கையாள வேண்டும். எப்படிப்பட்ட நேரத்திலும் டென்ஷன் ஆகக்கூடாது. பொறுமையும் அமைதியும் காத்திட வேண்டும். முக்கியமாக உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்தவொரு கூடாத தீய பழக்க வழக்கங்களை முற்றிலும் தவிர்க்க முற்படுதல் வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதை மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்றவற்றை, நிறுத்திவிட வேண்டும். உணவில் உப்பை - குறைக்க வேண்டும். காபி, தேநீர் ஆகியவற்றையும் கூடுமானவரை குறைத்தல் நலம் பயக்கும். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடலாம். நெய், வெண்ணெய், பாலாடை ஆகியவை வேண்டாம். பூரி, வடை, சமோசா, ஊறுகாய், அப்பளம், கேக், பிஸ்கட், ஐஸ்கிரீம், அசைவ உணவு வகைகள் முதலியவை வேண்டவே வேண்டாம். இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளையும் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களை அளிக்கும்.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































