» Punch Balu .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Tuesday, 10 Nov 2009

Punch Balu

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.

பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை, இன்றைய விலைவாசி சூழலை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை தேடல் மற்றும் பயிற்சி செலவுகளை கருத்தில் கொண்டும், குறைந்தபட்சம் 2,500 ரூபாயாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் லெனின் அறிக்கை

நல்லா இருக்கே கதை. நாட்டிலுள்ள எவ்வளவோ பேர் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காகக் கூட கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் நிலையில், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இவ்வளவு தொகையை உதவியாகக் கேட்பதில் என்ன நியாயம இருக்கிறது? அரசு வேலையை எதிர்பார்த்து இராமல் வேறு வேலை பார்ப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்க, மிச்சம் மீதி உள்ளவர்கள உதவித்தொகை பெரிதாகக் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? உதவித்தொகையை நம்பாமல் உழைப்பை நம்பலாமே!

கடல் படுகை உரிமைகளை திரும்பப்பெறும் நடவடக்கைகளின் ஒருகட்டமாக, அந்தமான் தீவை மீட்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து இந்திய அரசுடன், இலங்கை அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
-இலங்கை வெளியறவுத் துறை அமைச்சர் ரோகித போகல்லகாமா

கேளுங்க, கேளுங்க தமிழ்நாட்டையும் சேர்த்துக் கேளுங்கள். இப்போ இருக்கிற மத்திய அரசு கொடுத்தாலும் கொடுத்துடும். காலம் மாறும், உங்கள் அராஜகம் எல்லாம் காலடியில் போட்டு மிதிக்கப்படும்.

காங்கிரஸ் கூட்டணி அரசில் எனக்கு அமைச்சர் பதவி அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. பீகார்  மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, என் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவேன்.
-ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ்

என்னப் பண்றது சூப்பர் ஸ்டாரா இருந்த உங்க இமேஜ் வடிவேலு மாதிரி ஆயிடுச்சு. டயலாக் கூட பாருங்க வடிவேலு மாதிரி சொல்றீங்க. மேலே ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட்டு வீக்குங்கறத இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே சந்தோஷம்.

Punch Balu’s Old punches

2009/10/23 Punch Balu

2009/10/16 Punch Balu

2009/09/18 Punch Balu

2009/09/11 Punch Balu

2009/08/07 Punch Balu

2009/07/31 Punch Balu

2009/07/24 Punch Balu

2009/07/17 Punch Balu

2009/06/20 Punch Balu

2009/06/12 Punch Balu

2009/05/29 Punch Balu

2009/05/22 Punch Balu

2009/05/15 Punch Balu

2009/05/08 Punch Balu

2009/05/01 Punch Balu

2009/04/20 Punch Balu

2009/04/10 Punch Balu

2009/04/03 Punch Balu

 2009/03/27 Punch Balu

2009/03/20 Punch Balu

2009/03/13 Punch Balu

2009/03/06 Punch Balu

2009/02/27 Punch Balu

2009/02/20 Punch Balu

2009/02/13 Punch Balu

2009/02/06 Punch Balu

2009/01/30 Punch Balu

2009/01/23 Punch Balu

2009/01/16 Punch Balu

2009/01/09 Punch Balu

2009/01/02 Punch Balu

2008/12/26 Punch Balu

2008/12/19 Punch Balu

2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

Most Commented Posts


Leave a Reply