Bulgarians put their PM’s name to their home-made brandy

Posted on Monday 30 November 2009

பிராண்டிக்கு பிரதமரின் பெயர் : பல்கேரிய மக்களின் நன்றி

bulgarian-prime-minister-boiko-borisov.jpg

ல்கேரியா நாட்டின் கிராம மக்கள் தாங்கள் தயாரிக்கும் பிராண்டி வகை மதுவுக்கு, தங்கள் பிரதமரின் பெயரை வைத்துள்ளனர். மது மீதான வரிவிதிப்பிற்கான மசோதா பாராளுமன்றத்தில் வராமல் தடுத்ததற்காக, பிரதமர் பொய்கோ போரிஸ்செளக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உள்ளூர் சரக்கு ஒன்றுக்கு ‘போரிஸோவ்கா’ என்று கிராமத்தினர் பெயர் வைத்துள்ளனர்.

பல்கேரிய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு 30 லிட்டர் வரை ‘ராகியா’ என்கிற பிராண்டி வகை மதுவை வரி கொடுக்காமல் தயாரித்துக் கொள்ளலாம்.

பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வந்த வைன் மற்றும் மதுவகைகள் மீது விதிக்கப்படவிருந்த வரியை பல்கேரியா பாராளுமன்றம் வராமல் தடுத்துவிட்டது. முன்னதாக, அந்த மதுவகைகள் மீது 2010 முதல் வரிவிதிக்கும் முன்வடிவை பாராளுமன்ற பட்ஜெட் குழு சமர்ப்பித்திருந்தது. இந்த முன்வடிவை கடந்த புதன்கிழமை அன்று பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால், முன்னாள் தீயணைப்புப் படை வீரரும், கராத்தே கலையில் கருப்பு பெல்ட் வாங்கியவருமான பிரதமர் போரிசெள அந்த மசோதாவை வராமல் தடுத்து, கிடப்பில் போட வைத்துவிட்டார்.

ஆக, பிரதமரின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சோபியா என்ற நகருக்கு 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கபாடாவோ என்ற கிராமத்தினர், இவ்வாண்டு தாங்கள் தயாரித்த புதுவகை ராகியா என்ற பிராண்டிக்கு ‘போரிஸோவ்கா’ என்று பிரதமரின் பெயரை வைப்பதாக முடிவு செய்துள்ளனர். மேலும், தாங்கள் தயாரித்த வோட்கா வகை மதுவுக்கு ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் நினைவாக ‘புடின்கா’ என்று பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து பல்கேரிய கிராம மனிதர்  ஒருவர் கூறுகையில்  நாங்கள் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் குடி மன்னர்கள் என்பதால் மட்டுமே சந்தோஷப்படவில்லை. வீட்டில் மது தயாரிக்கும் எங்கள் பாரம்பரிய பண்பாட்டை காப்பாற்றியதற்காகவே பிரதமருக்கு நன்றி கூறுவதுடன் நாங்களும் சந்தோஷமடைந்திருக்கிறோம்” என்கிறார்.

“சாதாரண மக்கள், மதுக்கடைகளில் தங்கள் நேரத்தை செலவிடுவதை தடுப்பது நமது கடமை” என்று மக்களுக்கு சாதகமாக பதில் கூறியிருக்கிறார் பிரதமர் போரிசெள.

மதுவகைக்கு பிரதமரின் பெயரை வைத்த கிராமத்தினர், அதில் சில பாட்டில்களை பரிசாக, பிரதமருக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.

வீட்டுக்கு வீடு தயாரிக்கப்படும் மதுவுக்கு வரி விதிக்கும் திட்டம் நின்றுபோனதால், 5 சதவீதமாக இருந்த சூதாட்டத்தின் மீதான வரியை 15 சதவிகிதமாக ஏற்றியிருக்கிறது பல்கேரியா பாராளுமன்றம்.

admin @ 11:21 pm
Filed under: news
Divya Spandana celebrated 27th birthday

Posted on Monday 30 November 2009

திவ்யாவுக்கு வயது 27

divya-spandana.jpg

குத்து ரம்யா என்கிற நடிகை திவ்யா நவம்பர் 29 ஆம் தேதி, தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடி்னார். பத்திரிகையாளர்களுடன் எப்போதும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த திவ்யா, தன்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு பத்திரிகையாளர்களை அழைத்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நேற்று முன்தினம் 27 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், தன்னுடைய கண்களை தானம் செய்வதாக அறிவித்தார். கண்தானம் செய்வதாக எழுதிக் கொடுத்த அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

“பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நான் கண் தானம் செய்கிறேன். அத்துடன் என் ரசிகர்களை சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் இந்த பிறந்தநாளை, என் ரசிகர்களுடன் கொண்டாடுகிறேன்” என்றார் திவ்யா.

admin @ 9:51 pm
Filed under: kollywood
Arjun in Vallakkotai

Posted on Monday 30 November 2009

அர்ஜூன் - வெங்கடேஷ் கூட்டணியில் ‘வல்லக்கோட்டை’

arjun.jpg

ர்ஜூன், இயக்குநர் வெங்கடேஷ் கூட்டணி மீண்டும் இணைகிறது. இவர்களது கூட்டணியில் வெளிவந்த வாத்தியார், துரை போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, இப்போது ‘வல்லக்கோட்டை’ என்ற புதிய படம் பூஜை போடப்பட்டுள்ளது.

இதில், அர்ஜூனுக்கு ஜோடியாக இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், படத்தின் க்ளைமாக்ஸ் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் எடுக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தின் சண்டைக்காட்சிக்காக அர்ஜூன் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அதிரடி ஆக்ஷனுடன் த்ரில்லர் படமாக உருவாகும் இதில் பங்களா ஒன்று முக்கியக் கதாபாத்திரமாக இடம் பெறுகிறது. இந்த பங்களா செட் சென்னையில் போடப்பட்டு வருகிறது. முக்கியக்காட்சிகள் மும்பை, தில்லி நகரங்களில் படமாக்கப்படுகிறது.

admin @ 9:12 pm
Filed under: kollywood
Padmapriya pair with Sivaraj in Kannada film

Posted on Monday 30 November 2009

ஐந்து மொழிகளில் எட்டு படங்கள் ரிலீஸ் : பத்மப்ரியா  மகிழ்ச்சி

padmapriya.jpg

ந்த ஆண்டு,  ஐந்து மொழிகளில் நான் நடித்து 8  படங்கள் வெளியாகியுள்ளது என பத்மப்ரியா கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

“தமிழில் பொக்கிஷம், பழசிராஜா ஆகிய படங்கள் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளன. பொக்கிஷம் படத்தில் என்னுடைய  நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கன்னட நடிகர் சிவராஜ், தமஸு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இந்தப் படத்தை ‘அக்னி’ ஸ்ரீதர் இயக்குகிறார். நேரமில்லாததால் கன்னடப்படங்களில் நடிக்காமல் இருந்தேன். இப்போது நேரமும், கதையும் சேர்ந்து வந்துள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக சிவராஜ் நடிக்க, நான் வன்முறைக்கு எதிரான பெண்ணாக நடிக்கிறேன்” என்றார் பத்மப்ரியா.

admin @ 8:24 pm
Filed under: kollywood
Comedy actor Ganja Karuppu marries a doctor

Posted on Monday 30 November 2009

‘கஞ்சா’ கருப்புவுக்கு கல்யாணம்

ganja-karuppu1.jpg

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, டாக்டரை மணக்கிறார். கருப்புவுக்கும்,  சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற டாக்டருக்கும் இருவீட்டாரும் இணைந்து திருமணம் நிச்சயித்துள்ளனர். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சிவகங்கையில் நடைபெற்றது. ஜனவரி 27 ஆம் தேதி, நாட்டரசன்கோட்டையில் உள்ள கோயிலில், திருமணம் நடக்கிறது.

கல்யாணம் குறித்து மாப்பிள்ளை கஞ்சா கருப்பு கூறுகையில்,

“என் வருங்கால மனைவி சங்கீதா ஒரு பிசியோதெரபி டாக்டர். எங்கள் திருமணம் முடிந்த மறுநாள், ‘மெய் காண்’ பட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்கிறேன். சங்கீதா அன்று பரீட்டசை எழுது இருப்பதால், ஒரு மாதம் கழித்து அவரும் நானும், ஹனிமுன் கொண்டாட வெளிநாடு செல்கிறோம்” என்றார்.

admin @ 8:00 pm
Filed under: kollywood
Prime minister loses job after forgetting absence note

Posted on Monday 30 November 2009

பாராளுமன்றத்திற்கு வராததால் பதவி இழந்த பிரதமர் : வனாட்டு தீவில் நடந்த அதிசயம்!

edward-natapei.jpg

ம் நாட்டில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் ஒன்று பசிபிக் கடலில் உள்ள சின்னத் தீவான வனாட்டுவில் நடந்திருக்கிறது. மூன்று நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வராத வனாட்டு தீவின் பிரதமர் எட்வர்டு நடாபி பதவி இழந்தார்.

வனாட்டு தீவு சட்டப்படி, அதன் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து மூன்று நாட்கள் பாராளுமன்றக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளா விட்டாலோ, ஏற்றுக் கொள்ளும்படியான காரணம் கூறா விட்டாலோ உறுபினரின் பதவி கோவிந்தா ஆகிவிடும்.

பிரதமர் எட்வர்டு நடாபி, டிரினிடாட் மற்றும் டொபாக்கோ தீவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அவர், அப்படி சென்றதை பிரதமர் அலுவலகம் முறைப்படி பாராளுமன்ற அமைப்புக்கு தெரிவித்திருக்க வேண்டும். பிரதமரே ஆனாலும் காரணம் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், பிரதமர் அலுவலகம் தக்க காரணம் கூறத் தவறியதால், எட்வர்டு பதவிக்கு வேட்டு விழுந்துவிட்டது.

இந்த பிரச்னையைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஆகிவிட்ட எட்வர்டு நடாபி அவசர அவசரமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்வாகும் வரை வானாட்டு தீவில் காபந்து அமைச்சகம் தான் செயல்படும் எனத் தெரிகிறது.

admin @ 3:38 am
Filed under: news
Image of Jesus Christ on the bottom of the iron

Posted on Monday 30 November 2009

அயர்ன் பாக்ஸில் காட்சி கொடுத்த ஏசு!

image-of-jesus-christ-on-the-bottom-of-the-iron.jpg

யர்ன் பாக்ஸின் தேய்க்கும் பகுதி இது. நவம்பர் 23 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தில்  துரு ஏறி இருக்கும் இடத்தில் ஏசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாகவும், இதை தான் எதேச்சையாகக்  கவனித்தாகவும் அயர்ன் பாக்ஸின் சொந்தக்காரர் மேரி ஜோ கோடி கூறுகிறார் (உங்களுக்குத் தெரிகிறதா?) .கடந்த வாரத்தில் அதிகம் இ.மெயில் செய்யப்பட்ட புகைப்படமும் இதுதான்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூட்ஸ் நகரில் நடந்த அதிசயம் இது. ‘என் வீட்டு அயர்ன் பாக்ஸில் ஏசு கிறிஸ்துவே காட்சி கொடுத்து விட்டார் இனி எனக்கு நல்ல காலம்’ என்று மகிழ்கிறார் மேரி ஜோ கோடி.

admin @ 3:01 am
Filed under: American news
Cavemen came to Warsaw zoo

Posted on Monday 30 November 2009

வார்சா ஜூவில் குகை மனிதன்!

cavemen.jpg

போ
லந்து நாட்டின் தலைநகரான வார்சாவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த வாரத்தில் சென்றிருந்த பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி கம் அதிசயம் காத்திருந்தது. விலங்குகளைக் காணப்போன அவர்களுக்கு குகைமனிதனும் காட்சிக் கொடுத்தான். ஆமாம், கூண்டு ஒன்றில் குகைமனிதன் ஒருவன் தன்னுடைய துணையுடன் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரும் விலங்குகளின் தோல்களையே ஆடைகளாக அணிந்திருந்தனர். ஆஹா நம் மூதாதைகள்தான் வந்துவிட்டார்களோ என்ற பார்வையாளர்களின் கேள்விக்கு, மரியா மஸ்ட்டா லெர்ஸ் என்ற அமைப்பாளர் பதில் அளித்தார்.

வார்சா நகரில் அரங்கேற்றப் போகும் ‘கேவ் மேன் - குகைமனிதன்’  என்ற நாடகத்தை பார்க்கத் தூண்டும் வகையில் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார் அவர். ஆனால், குகை மனிதன் ஒரு முக்கிய செய்தி வைத்திருக்கிறான். என்னதான் மனிதன் வளர்ச்சி அடைந்து விட்டாலும் அவனுக்கும் கற்கால மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் அவர் விளக்கினார்.

கூண்டில் இருந்த குகை மனிதனும், அவன் மனைவியும் நெருப்பு மூட்டி, மீன் ஒன்றை வறுத்தக் காட்சி பார்வையாளர்களை அசர வைத்துவிட்டது.

admin @ 2:03 am
Filed under: news
Naan Avan Illai-2 : Movie review

Posted on Monday 30 November 2009

நான் அவன் இல்லை - இரண்டு : திரை விமர்சனம்

naan-avan-illai-2.jpg

ஜீவன் நடித்து வெளிவந்த நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் இது. இதிலும் அவர் பெண்களை ஏமாற்றும் கதைதான். ஆனால் இதில் நல்ல காரியத்திற்காகப் பெண்களை ஏமாற்றுகிறார் ஜீவன்.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா, பணக்கார இளைஞனை காதலித்து மணக்கிறார். இந்நிலையில் அவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அதற்காக கணவரின் குடும்பத்தாரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம்  பெற்றுக்கொண்டு செல்கிறார். திடீரென நடக்கும் தாக்குதலில் சங்கீதாவின் கணவர் இறந்துவிட, அவரைக் கடத்துகிறது கணவனின் குடும்பம். கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுத்தால் அவரை விட்டுவிடுவதாகக் கூறுகிறது. இதைப்பார்த்து இரக்கப்படும் ஜீவன், சங்கீதாவை மீட்க தேவைப்படும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

அதற்காக பெண்களை ஏமாற்றி பணம், நகையை  பறிக்கிறார். பணத்தை க்கொடுத்து சங்கீதாவை மீட்கிறார். ஏமாந்த  பெண்களோ ஜீவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்றனர். ஜீவன் தப்பித்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

நான் அவன் இல்லை பாகம் ஒன்றில் கடைசியாக ஜீவன் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவார். அதனால் இரண்டாம் பாகம், வெளிநாட்டில்  இருந்து கதை தொடங்குகிறது. அதே கதைதான். ஆனால், கதாநாயகிகள் மட்டும் வேறு.

ஜீவனை தன்னுடைய கடவுளாக ஆராதிக்கும் பெண் துறவி ரக்ஷனாவிடம் ஏமாற்றப்பட்ட பெண்கள், ஜீவன் பற்றி  விசாரிக்கிறார்கள். தாங்கள்  ஏமாந்த கதையை அவரிடம் கூறுகின்றனர்.

வெளிநாடுகளில் சொத்து வாங்க நினைக்கும் லட்சுமி ராயிடம் கோடிஸ்வரன் போல நடித்து ஏமாற்றுகிறார் ஜீவன். ஜொள்ளு பார்ட்டிகளை பார்ட்டிக்கு அழைத்து, அவர்களை அவர்களுடைய மனைவிகளிடம் மாட்டிவிடும் ஸ்வேதா மேனனிடம் மாட்டிக்கொள்ளும் ஜீவன், தான் ஏமாற்றாமால் ஸ்வேதாவை ஏமாற்றி, பணம், தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துக்  கொண்டு தப்பிக்கிறார்.
தன்னுடைய வருங்காலக் கணவன் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் ஆந்திரப் பெண் ஸ்ருதியின் மனத்தில் அழகாக இடம் பிடிக்கிறார் ஜீவன். அங்கேயும் கை வைத்தப்பிறகு தப்பிக்கிறார். பெண் தாதா ரக்ஷனாவிம் பாடலாசிரியர் வாலியாக ஆக்ட் கொடுக்கும் ஜீவன், அவருடைய பாடல் வரிகளை சொல்லிக்காட்டி ரக்ஷனாவை பெண் துறவியாக மாற்றி விடுகிறார்.

ஜீவன் பெண்களை ஏமாற்றுவதற்கு இலங்கைப் பெண் சங்கீதாவின் கதையைக் காரணமாக்கி, ஜீவனின் ஏமாற்று வேலைகளுக்கு நியாயம் கற்பிக்கிறார் இயக்குநர் செல்வா.
.
சரி, இத்துடன் ஜீவனின் ‘நான் அவன் இல்லை’ கதையெல்லாம் முடிந்தது என்று பார்த்தால் கடைசியில் குளம் அருகில் நிற்கும் ஜீவனிடம் வரும் ஒரு பெண் தன்னை ‘வ்ள்ளி’ என அறிமுகம் செய்துகொள்ள,  ‘என் பேர் முருகன்’ என்று ஜீவன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொள்வதைப் பார்த்தால் ‘நான் அவன் இல்லை’ பாகம் மூன்றுக்கு இப்போதே அடித்தளம் போட்டு விட்டது போலிருக்கிறது.

admin @ 12:31 am
Filed under: Review
Super hit advertisement!

Posted on Sunday 29 November 2009

சூப்பர் ஹிட் விளம்பரம்

what-happened.jpg

தைப் பார்த்து இவர்கள் வியக்கிறார்கள்? மூக்குக்குள் கிச்சு கிச்சு மூட்டும் முடிகளை நறுக்க, பானசானிக் நிறுவனம் தயாரித்துள்ள டிரிம்மரின் விளம்பரத்தைப் பார்த்துதான். இந்த விளம்பரத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம் பானசானிக் ஏன் சிறந்ததொரு நிறுவனமாகத் திகழ்கிறது என. இந்தோனேசியா நாட்டில், சாலைகளில் கண்டபடி தொங்கும் மின்சார ஒயர்கள், கேபிள் ஒயர்களை (நம்முடைய நாட்டில் மட்டும் என்ன வாழுதாம்?) தன்னுடைய விளம்பரத்திற்கு மிக அழகாக பயன்படுத்திக் கொண்டது பானசானிக் நிறுவனம்.

மூக்கினுள் எத்தனை நுண்ணிய நரம்புகள் உள்ளன. அவற்றைச் சீண்டாமல், துருத்திக்கொண்டிருக்கும் முடிகளை மட்டும் தங்கள் டிரிம்மர் மூலம் அழகாக நீக்கலாம் என்கிறது இந்த விளம்பரம். சமீப காலத்து சூப்பர் ஹிட் விளம்பரம் இது.

panasonic-nose-hair-trimmer-ad1.jpg

panasonic-nose-hair-trimmer-ad2.jpg

panasonic-nose-hair-trimmer-ad3.jpg

admin @ 11:33 pm
Filed under: news