மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்!
அல்லல் படும் ஆன்மாவும்
தொடர்ச்சி….
உணவு முறைகள்
சாதாரணமாக எளிதில் ஜீரணமாகும் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளையும் முக்கால் வயிறு ஆகாரமே உட்கொள்ள வேண்டும். மேலும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்தல் வேண்டும். உணவில் அதிகளவு தானியங்களை அடிக்கடி சேர்க்க வேண்டும். ஒரு நாளின் மொத்த உணவில் நாலில் ஒரு பங்கு காய்கள், பழங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்நோயாளிகள் பப்பாளி, பேரீச்சை, மா, மாதுளை, கேரட், வெண்டை, கரும்புச்சாறு, இளநீர், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து ஏதேனும் இரண்டு வகை உணவில் அதிகளவு சேர்த்து உண்பது நன்மை பயக்கும். கொத்தமல்லியிலை, புதினா, தூதுவளை, துளசி போன்றவற்றில் இருந்து சாறு எடுத்து 50 மில்லி லிட்டர் காலை அல்லது மாலை வேளைகளில் வாரம் இரண்டு முறை பாவித்து வரப் பயன் கிடைக்கும்.
தினமும் காலை மாலை எளிய உடற்பயிற்சிகள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். தவிர காலை, மதியம், மாலை மூன்று வேளை உணவு அருந்தும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்தல் அவசியம்.
அவசர சிகிச்சை
நெஞ்சு சளி கரையவும், வெளியேறவும் இரண்டு மேசைக்கரண்டி தேங்காயெண்ணெய், சிறிது கற்பூரம் எடுத்து ஒரு கரண்டியில் போட்டு அடுப்பில் காட்டி சூடாக்கிய பின்னர் கை பொறுக்கும் சூட்டில் நெஞ்சுப்பகுதி, மூக்கின் மேற்பகுதி, நெற்றி, கை, கால், கழுத்து பகுதிகளில் அவ்வப்போது தடவிக் கொள்ளலாம். இதனால் நல்ல பலன் தெரியும். அடிக்கடி வரும் மூச்சுத் திணறலுக்கு கற்பூரம், ஓமம் எடுத்து தூள் செய்து சம அளவில் ஒன்றாகக் கலந்து வெள்ளைத் துணியில் வைத்து முகர்ந்தால் உடனே மூச்சுத் திணறல் குறையும். இது மூலிகை மருத்துவத்தில் சிறந்த இன்ஹேலர் ஆகும்.
ஆஸ்துமா நோயின் காரணமாக மூச்சிழுப்பும், இரைப்பும் அதிகமாக இருக்கும் போது கஸ்தூரி மஞ்சளை தீயில் சுட்டு புகையை மூக்கின் வழியாக உள்ளிழுத்தால் உடனே இரைப்பு நிற்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பிறகு அந்தப் பொல்லாத மூச்சுத் திணறல் வரவே வராது. இதுமட்டுமின்றி இப்புகை காச நோய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் கடுமையைத் தடுக்கிறது. இதே மஞ்சள் புகையை நாசியின் வழியாக உள்ளிழுத்தால் தலைவலி, ஜலதோஷம் என்பன சரியாகும்.
நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை
புகைத்தல், மதுவகைகள், பால், பால் கலந்த பொருட்கள், சர்க்கரை கலந்த இனிப்புப் பொருட்கள், மாமிச உணவுகள், மலச்சிக்கல், போதைப் பொருட்கள், இரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள், காற்றோட்டமில்லாத இடங்களில் இருத்தல் என்பனவற்றைத் தவிர்த்தல் வேண்டும். மனதைப் பாதிக்கும் சம்பவங்களான மனக்கவலை, பயம், மனவுளைச்சல், பரபரப்பு, அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றாலும் ஆஸ்துமா அதிகரிப்பதால் அவற்றையும் தவிர்த்தல் நன்று.
கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட 2.5 மில்லியன் கனடியர்கள் ஆஸ்த்மா நோயால் அவதி!
கனடாவின் புதிய பிரதமர் காப்பர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை மாலை சுவாசிப்பதற்குக் கஷ்டப்பட்ட பிரதமர் உடனடியாக ஒட்டாவா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உடனடிச் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். ஒரு மணிநேர சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து அவர் நடந்தே வெளியில் வந்தார். அவர் தேகாரோக்கியமாக இருப்பதாக அவரின் பேச்சாளர் பின்னர் தெரிவித்தார். சிறுவயதிலிருந்தே காப்பர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குளிர்காலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பல தடவை குளிரால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்திருந்தார். சூழல் மாசு தொடர்பில் ஒரு தடவை என்.டி.பி.கட்சி உறுப்பினர்கள் - கன்சவேற்றிக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டிய போது காப்பர் தனது நோய் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். என்.டி.பி கட்சியினர் மட்டுமின்றி மற்றவர்களும் சூழல் மாசு குறித்து கவலைகொண்டுள்ளனர் என்று காப்பர் தெரிவித்தார். ‘விசேடமாக நான் சிறுவயது முதலே ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறேன். இதனால் எனக்கும் சூழல் மாசு தொடர்பில் அக்கறையுள்ளது’ என்றும் அவர் பாராளுமன்றத்தில் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்.
கனடா உட்பட வட அமெரிக்காவில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை கடந்த இருபது வருடங்களில் நான்கு மடங்காகியுள்ளது. இதற்கு காரணம் சூழல் மாசு மற்றும் அசுத்தமான காற்று என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிள்ளைகள் சுவாசிக்கும் காற்றானது அவர்களுக்குப் பிடிக்கும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது என்று சூழல் கூட்டுறவு கமிசன் தெரிவித்துள்ளது. சிறுவயதில் சுவாசம் சம்பந்தமான உடல் உறுப்புகள் நன்கு விருத்தியடையாதலால் வயதான காலத்தில் பலவிதமான நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
கனடாவின் புதிய பிரதமர் காப்பர் உட்பட 2.5 மில்லியன் கனடியர்கள் இந்த ஆஸ்துமா நோயால் அவதிப்படுகின்றனர். விசேடமாக கனடாவில் 8 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பையன்களில் 20 வீதமானவர்களும், சிறுமிகளில் 15 வீதமானவர்களும் ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமல், மூச்சிழுப்பு, மார்பு நோய், சுவாசிப்பதில் கஷ்டம் என்பன இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கும். பாடசாலைகள் மற்றும் வேலைத்தளங்களில் உள்ள தூசு மற்றும் எரிபொருள், போன்ற ஒவ்வாமைப் பொருட்களும் இதற்கொரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் புகைத்தலும் இரண்டாம் நிலைப் புகைத்தலும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.
கனடாவின் வீடுகளில் உள்ள புகைப்பவர்கள் காரணமாக இரண்டாம் நிலைப் புகையை - 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 26 வீதமானவர்களும், ஐந்து வயதுக்கு உட்பட்ட 16 வீதக் குழந்தைகளும் கனடிய வீடுகளில் புகையைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று ஆய்வு கூறுகின்றது.
அதிகம் சூழல் மாசு காரணமாக - ஒன்ராரியோவின் தென்பகுதி மற்றும் கிராமப் பகுதி சிறார்கள் ஆஸ்த்மா மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களால் அவதிப்படுகின்றனர். வறுமையான பகுதிகளில் சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் தன்மைகள் குறைவு என்பதால் - நிலமட்டத்துடன் உள்ள கார்பன் மோனெக்சைட், நைற்றைஜென் டைஒக்சைட், சில்வர் டைஒக்சைட், ஈயம் என்பனவற்றால் இந்தத் தாக்கம் ஏற்படுகின்றது.
ஆஸ்த்மா நோய் காரணமாக மெக்சிக்கோ, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெரும் சுகாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன. கனடாவை விட மெக்சிக்கோ, அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெருமளவு சிறார்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாடசாலைகள், வேலைத்தளங்கள், அலுவலகங்கள், வீடுகள் என்பனவற்றில் உள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் சூழல் மாசு மற்றும் அசுத்தக் காற்று என்பனவற்றில் கவனமாக இருந்து பிள்ளைகளை இந்த நோயிலிருந்து காக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
2009/08/28 உணவே மருந்து
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/10 கிளி வைத்தியம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/02/13 அவசியம்… அவசியம்…
2009/02/06 உணவே மருந்து
2009/01/30 நம்ம வழி எளிய வழி
2009/01/23 சுகமோ சுகம்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/14 விரைந்து நலம்பெற…
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/29 சத்தான சாறு எது?
2008/08/22 இளமையிலே முதுமையா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/27 மருத்துவ பட்ஜெட்…
2008/06/20 உணவே மருந்து!
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/06/06 மனக்கவலையை மாற்ற…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/23 A to Z
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/25 சோர்வை விரட்ட…
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/28 ஆறு யோசனைகள்
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா