இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
இந்தோனேசியாவின் உணவுப் பழக்கம் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். உலக மக்களெல்லாம் கலவையான சத்துகளை உண்டு நலமோடு இருக்க, நாம் மட்டும் அதிகமான கார்போஹைட்ரேட்டுகளை (மாவுச் சத்துகள்) உண்டு சர்க்கரை நோயை அதிகப்படுத்திக் கொண்டு, உலகில் சர்க்கரை நோயாளிகளை அதிகம் கொண்ட நாடு என்கிற பெருமைகளைப் (?) பெற்றிருக்கிறோம்.
அதேபோலர் கொழுப்புச் சத்துமிக்க உணவுகளை உண்கிறோமே தவிர, அதனை எரித்துச் செலவழிப்பது கிடையாது. இதனால் உலகின் இருதய நோயாளிகள் பட்டியலிலும் முன்வரிசையில் இருக்கிறோம்.
இந்தோனேசியாவில் பயணிக்கும் வேளையில் ஒருவகை நாற்றத்திற்கு நாம் பழகியே ஆகவேண்டும். ஆம். கருவாட்டைச் சுட்டுச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களே இந்தோனேசியர்கள். கருவாட்டை மெல்லிய பட்டைகளைப் போல் ஆக்கி இவற்றைச் சுருள் சுருளாகச் சுருட்டி வைத்து விற்பதை நிறையப் பார்க்க முடிகிறது.
இந்தக் கருவாட்டைக் குழம்புப் பாணியில் சமைக்காமல் சுட்டுப்பொசுக்குவதால் இதன் புகை பல பக்கங்களிலும் பரவி, குடலை உருவும் நாற்றத்தை உருவாக்குகிறது.
அகார் என்ற சொல் ஆகாரம் என்ற வடசொல்லிருந்து உருவாகியிருக்குமோ?) இந்தோனேசியாவில் நிறையக் கேள்விப்பட்டு என்னவென்று விசாரித்தால், இது, வேறு ஒன்றுமில்லை ஊறுகாய். ஊறுகாயை நாம் இங்கு எத்தனை விதமாகப் பார்க்கிறோம். என்னென்ன காய்கறிகளிலெல்லாம் செய்கிறார்கள். தனி அசைவ ஊறுகாய்கள் இங்கு உண்டல்லவா?
இந்தோனேசியாவில் ஆகார் என்றாலே அது வெள்ளரிக்காயால் ஆன ஊறுகாயாகத்தான் காண முடிகிறது. இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் பிற வகை ஊறுகாய்களைக் (இவையும் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்தவை) காண முடிகிறது.
உப்புக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வெள்ளரியை விதவிதமாக வெட்டி வினிகர், சர்க்கரை, உப்பு, நீர் கலந்து ஆகார் தயாரிக்கின்றனர். சாப்பாட்டில் பார்த்தேன். தள்ளுபடி செய்யும்படி இல்லையே தவிர, ஒரு பாட்டில் வாங்கி ஊருக்குக் கொண்டு போகலாம் என்கிற அளவிற்குத் தூண்டுதல் ஏற்படவில்லை. ஆனால் நாம் சாப்பிடும் ஊறுகாய் அளவிற்கு ஊறு விளைக்காத ஊறுகாய் இது என்று தோன்றியது.
இந்தோனேசியாவில் தென்னை வளம் மிகுதி என்பதாலோ என்னவோ, எதற்கெடுத்தாலும் தேங்காய்ப் பால்தான். எதற்கெடுத்தாலும் தேங்காயப் பாலை சமையலில் கலந்து விடுகிறார்கள்.
நாசி உடுக் என்று ஓர் உணவு வகை, சாப்பிட்டுப் பார்த்தவுடன் பிரமாதம். தேங்காய்ப் பாலில் சாதத்தை அவித்து இன்னும் ஏதேதோ சேர்த்துத் தருகிறார்கள்.
தேங்காய்ப் பாலைக் கொதிக்க வைத்து அதில் கோழியைப் போட்டு வேகவைத்துத் தருகிறார்கள்.
நாசி படாங் என்கிற உணவு நன்றாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள் என்றார். “எங்கள் ஓட்டலின் டெசர்ட் இது” என்று விளக்கம் கிடைத்தது.
இந்தோனேசிய காப்பி உலகப் புகழ்பெற்றது என்று இந்தோனேசியர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். (காப்பி பிரியர்களே! அப்படியா?)
காப்பியை இங்கு மலையாள உச்சரிப்பைப் போல் கோப்பி (KOPI) என்கிறார்கள்.
வெறும் பால் போதும் என்றால் ஒயிட் காப்பியா என்கிறார்கள். “ஒயிட் கோப்பியா? அதெல்லாம் வேண்டாம். வெறும் பால் கொடுங்க” என்றால் அதுக்குப் பேர்தாங்க ஒயிட் கோப்பி என்கிறார்கள். இதை எளிதில் உங்களுக்குச் சொல்லிவிட்டேனே தவிர, இதைப் புரிந்து கொள்வதற்குள் எனக்கு நாக்குத் தள்ளி விட்டது. தேநீரைப் பால் கலக்காமல் நீட்டி, சாப்பிடுங்க சும்மா, காசு தர வேண்டாம் என்கிறார்கள். ஆம் இந்தோனேசியாவில் பல உணவகங்களில் தேநீர் என்பது இலவச பானமே!
இந்தோனேசியா செல்லும் நம்மவர்கள், ‘எங்கே இந்திய ஓட்டல்? எங்கே இட்லி, எங்கே தோசை, வடை? என்று வந்த இடத்திலும் நம் உணவிற்கு அலையாமல் இந்தோனேசிய உணவு வகைகளை உண்டு பார்க்க வேண்டும். நம் சமையல் வகைகளோடு நன்கு இயைந்து போகும் உணவு வகைகள் தாம் இந்தோனேசிய உணவு வகைகள்.
உணவகங்களில் நன்கு கவனித்தேன். வெளிநாட்டவர்கள் நம்மைப்போல் இல்லை. வந்த இடத்தில் உங்கள் உணவு வகைகளையே ருசி பார்க்க விரும்புகிறோம் என்று சொல்லி பிடிக்கிறதோ இல்லையோ வகை வகையாக ஆர்டர் செய்து உள்ளே தள்ளுகிறார்கள். பிடிக்காவிட்டால்கூடச் சலித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் கொடுத்த காசு ஜீரணிக்கும்படி சாப்பிட்டு முடித்துவிடுகிறார்கள்.
சமயங்களில் நல்ல நல்ல உணவு வகைகள் இருக்கும்போது ஏகமாய்ப் பாராட்டியபடி நன்கு ருசித்து உண்டு மகிழ்கிறார்கள்.
மீட் பால் சூப் என்று ஒர் உணவு. ஆட்டுக் கறியை எலும்பு நீக்கி கோளா உருண்டை போல் உருட்டி வைத்து சூப்பில் போட்டுத் தருகிறார்கள். உதிர்ந்து உடையாமல் கட்டுக் கோப்பாக இது இருப்பது வியப்பைத் தருகிறது.
சாப் காய் என்று காய்கறிகளை வறுத்துத் தருகிறார்கள். அட ‘காய்’ என்பது பெயர் மாறாமல் அப்படியே பொருத்தமாக இருக்கிறதே!
ஈல் மீன்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மனிதனையே தன் உடலிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொன்று விடக் கூடிய மோசமான மீன். இது இந்தோனேசிய ஆறுகளில் நிறையக் கிடைக்கிறது. “எங்களையா மின்சாரம் பாய்ச்சிக் கொல்கிறாய்? உன்னை என்ன செய்கிறோம் பார்” என்று பிடித்து வறுத்து இதன் எண்ணிக்கை ஆறுகளில் உயர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.
பாசிப் பருப்பை முளை வரும் வரை வளர்த்து கேக்கின் மீது தூவிச் சாப்பிடுகிறார்கள். மிக வித்தியாசமான இரசனைதான்.
அரிசிலியிருந்து ஒயின் தயாரிக்க முடியும் என்று சொன்னால், போங்க போங்க! யாராச்சும் காதில் பூ வைத்திருப்பார்கள் அவர்களிடம போய்ச் சொல்லுங்கள் என்பார்கள் மதுப்பிரியர்கள். இதை பிரென் என்கிறார்கள். அரிசியில் செய்ததுதான். நீங்கள் சாப்பிடலாம் என்றார்கள்.
மதுவகைகளை நான் அருந்துவதில்லை என்றதற்கு அரிசியில் செய்ததைக் கூடவா சாப்பிடக் கூடாது என்று பதிலுக்குக் கேட்டார்கள்.
“போதை தரும்போது அதன் மூலப்பொருள் எதுவாக இருந்தால் என்ன?” என்று பதில் கேள்வி கேட்டு அவர்களை அடக்கினேன்.
அரிசியால் செய்யப்படும் நூடுல்ஸ் இங்கு மிகப் பிரபலம். இதைக் கிட்டத்தட்ட இடியாப்பம் என்றே சொல்லிவிடலாம். ஆனால் நம்முடைய இடியாப்பம் போல் அன்றி சற்றே பிசுப்பிசு என ஒட்டுவதால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை எனக்கு.
(தொடரும்).
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title
































November 2nd, 2009 at 10:38 pm
அரிசிலியிருந்து ஒயின் தயாரிக்க முடியும் என்று சொன்னால், போங்க போங்க! யாராச்சும் காதில் பூ வைத்திருப்பார்கள் அவர்களிடம போய்ச் சொல்லுங்கள் என்பார்கள் மதுப்பிரியர்கள். இதை பிரென் என்கிறார்கள்ஆம் இந்தோனேசியாவில் பல உணவகங்களில் தேநீர் என்பது இலவச பானமே.