பாகிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு : பலி எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் பெஷாவர் மாகாணத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 105 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் லேடி ரெட்டிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்ததை அடுத்து பெஷாவரில் அனைத்து மார்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளது. தாலிபன் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்திய பிறகு பாகிஸ்தானுக்கு ஹிலாரி வந்துள்ளதால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts Title































