இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
ஸ்ரவணா பாலியைப் பற்றிச் சொல்லிச் சென்ற செய்திகள் சற்றே சுவையானவை.
பாலித் தீவின் இரண்டாவது பெரிய நகரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரிய வந்தால் வியப்பாக இருக்கும். சிங்கராஜா. என்னது! ஊரின் பெயர் சிங்க ராஜாவா என்கிறீர்களா? ஆமாம்.
இதைக் கேட்டபோது சிங்கப்பூர் என்ற பெயரும் நினைவிற்கு வந்தது. இந்தோனேசியாவும் சிங்கப்பூரும் அடுத்தடுத்து உள்ள நாடுகள் என்ற வகையிலும் தமிழ் மன்னர்கள் இந்தப் பகுதிகளிலெல்லாம் படையெடுத்துச் சென்று தங்களது ஆட்சி எல்லையை விரிவு படுத்தியதால் இப் பெயர்களின் தாக்கங்கள் இப்பகுதிகளில் இருப்பது இயல்பே என்று தோன்றியது.
பாலியில் உள்ள ஒரு கோயிலின் பெயர் பூராஜகத் நாதா என்பதாகும். வடக்கு பாலியில் உள்ள முக்கியக் கோயில் இது. ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒருவர் இந்துவாக இருந்தால் கூட இந்தக் கோயிலினுள் நுழைய முடியாது. ஆமாம். உல்லாசப் பயணிகள் எவருக்குமே அனுமதி இல்லை. அப்படியானால்? உள்ளூர்வாசிகள் மட்டுமே (இந்தோனேசியர்கள்) இக்கோயிலினுள் அனுமதிக்கப்படுவர். இந்த விதி விநோதமாக உள்ளது (ஏம்பா உங்களையெல்லாம் கேள்வி கேட்பாரே இல்லையா?)
இதனால் கோயிலின் வெளிப் பகுதியை மட்டும் மற்ற நாட்டவர்கள் ஏக்கத்துடன் சுற்றி வந்துவிட்டுப் புறப்படுவார்கள் என்றார் ஸ்ரவணாபாலி.
ஸ்ரவணா சொன்ன இன்னொரு தகவல் என்னை வியப்புக்குள்ளாக்கியது உண்மை.
“இந்தோனேசியப் பாணிச் சமையலை நீங்கள் கற்க வேண்டுமா? எங்கள் நாட்டில் இதற்கு crash course உண்டு” என்றார். இதை எப்படித் தமிழ்ப் படுத்துவது? துரிதகதியில் தரப்படும் பயிற்சி வகுப்பு என்று சொல்லலாமா?
உல்லாசப் பயணிகளுக்கென்றே நடத்தப்படும் வகுப்பாம் இது. காலையில் நுழைந்து மாலைக்குள் இந்தோனேசியாவின் அடிப்படைச் சமையல் வகைகளைக் கற்றுக் கொண்டு விடலாமாம். “கட்டணம் எவ்வளவு?” என்றேன் சொன்னார். சொற்பமாகத்தான் இருந்தது என்று நினைவு.
“இந்தியக் கடல் பகுதியில் டால்பின்கள் உண்டா? எங்கள் பகுதியில் உண்டு” என்று சற்றே பெருமிதமாகப் பேசினார் ஸ்ரவணா.
உண்டு. அரிதாக வலையில் அகப்படும் என்றும் எங்கள் மீனவர்கள் இதனை உண்ணப் பயன்படுத்தாமல் திரும்பவும் கடலிலேயே விட்டுவிடுவார்கள் என்றும் சொன்னேன்.
ஸ்ரவணா இதை நம்பாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டதும் நான் சற்று சூடாகிவிட்டேன்.
‘டால்பின்கள் பற்றி ஆதாரபூர்வமாக மேலும் ஒருசெய்தியைச் சொல்லுகிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்.”
“தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அருகில் போர்ட்டோ நோவோ எனப்படும் பறங்கிப் பேட்டையில் கடல் உலகம் சார்ந்த (Marine Giology) கல்லூரி ஒன்று உண்டு. இது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. இங்கு பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் ஏ.என்.சுப்பிரமணியன் என்பவர் வங்காள விரிகுடாக் கடலின் டால்பின்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் தெரியும்ல?” என்கிற பாணியில் சில செய்திகளை எடுத்துவிட்டதும்தான் ஸ்ரவணா அடங்க ஆரம்பித்தார்.
“உங்கள் நாட்டில் எப்படியோ தெரியாது லோவிதா என்கிற இடம் பாலியில் மிகப் புகழ்மிக்க கடற்கரை ஊர். இங்குள்ள கடல் பகுதியில் வருடத்தில் சில மாதங்களில் மட்டும் டால்பின்கள் அழகுறக் குதித்து விளையாடுவதைப் பார்க்க முடியும்? இதற்காகச் சுற்றுலாப் பயணிகளைக் கடலுக்குள் அழைத்துச் செல்வார்கள். இந்த வசதி உங்கள் ஊரில் உண்டா?” என்று சற்றே கடுப்பேற்றினார் ஸ்ரவணா.
“எங்க வீட்ல எங்கப்பா ரெண்டு கார் வச்சுருக்கார். உங்க அப்பா என்ன வச்சுருக்கார்?” என்று பள்ளிக்கூடப் பிள்ளைகள் பேசிக் கொள்ளுமே அந்தப் பாணிக்கு அல்லவா இறங்கிப் போகிறார் இந்த ஸ்ரவணா என்று எனக்குத் தோன்றியது.
“எங்க ஊரில் இப்படியெல்லாம் இல்லீங்க” என்றதும்தான் டால்பின் தம்பட்டத்தை நிறுத்தினார்.
லோவிதாவில் கடற்கரை ஓரமாக வாக்கிங் செல்பவர்களுக்காக அழகான பாதைகளை அமைத்திருப்பார்களாம். காலை நேரத்தில் இளம் வெயிலில், மாலை மங்கும் நேரத்தில் இந்தக் கடற்கரைச் சாலையில் நடப்பதே அலாதி சுகம் என்று மிகவும் சிலாகித்தார் ஸ்ரவணா.
மறுபடி, “லோவிதாவுக்கு அடுத்த முறையாவது வாருங்கள். இந்தோனேசியாவிற்கு வந்து பாலிக்குச் செல்லாமல் லோவிதா கடற்கரையைப் பார்க்காமல் செல்பவர்கள் அநேகமாக நீங்களாகத்தான் இருப்பீர்கள். எத்தனை வெளிநாட்டவர்கள் வருகிறார்கள் தெரியுமா உங்களுக்கு?” என்று மறுபடி தம்பட்டத்தைப் பெரிதாகத் தட்ட ஆரம்பித்தார்.
விநாயகருக்கு பாலியில் கணேஷ் என்றுதான் பெயராம். வேறு என்ன பெயரைச் சொன்னாலும் இந்தோனேசியர்களால் புரிந்து கொள்ள முடியாதாம்.
ஆவிகள், ஆத்மா ஆகியவற்றிலெல்லாம் பாலி இந்தோனேசியர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாம்.
மலைப் பிரதேசங்களில் வாழும் ஆவிகள் நல்ல (?) ஆவிகளாம். இதனால் பாலித் தீவு மக்கள் காலை எழுந்ததும் மலைப் பகுதியை நோக்கித் திரும்பி நின்று அதை வணங்குவார்களாம். அப்படி வணங்கினால் அந்த ஆவிகள் மலையிலிருந்து புறப்பட்டு தங்கள் இல்லம் வந்து, தங்களைக் காத்து விட்டுப் போகும்; நல்லது செய்யும் என்று இவர்கள் நம்புகிறார்களாம். பாலி இந்தோனேசியர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஒட்டுமொத்த இந்தோனேசியர்களும் மலைகளை வணங்கி ஆவிகளின் மூலம் நன்மை பெற முடியும் என்று நம்புகிறவர்கள்தாம் என்றார் ஸ்ரவணா. ஸ்ரவணா ஏராளமான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கும் களஞ்சியமாகத் திகழ்கிறார். செய்தி திரட்டும் ஆசையில் இவரைப் பேச அனுமதித்தாலும் அனுமதித்தேன். அதற்காக இப்படியா? வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.
“மலைகளை இவர்கள் வணங்குவதால், அவற்றின்மீது ஒருவிதப் பயமும் புனிதத் தன்மையும் கற்பித்துக் கொண்டதால் மலைவளத்தை எங்களால் நன்கு காக்க முடிகிறது; இதனால் சுற்றுப் புறச்சூழல் பாதிப்பு அடையாமல் இருக்கிறது” என்று ஒரு புதுக்கோணம் கற்பித்த ஸ்ரவணாவை இவர் இலேசுப்பட்ட மனிதர் இல்லை; எதையும் எதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறார் பார் என்று எனக்குள் வியக்கத் தோன்றியது.
இந்தோனேசியாவே ஒரு தீவுக்கூட்டம் என்பதால் எங்கு திரும்பினாலும் படகு, படகு, படகுதான்.
ஒரே தூரத்தை 36 மணி நேரத்தில் கடக்கும் டொக்கு டொக்கு டொக்குப் படகுகள், 24 மணி நேரத்தில் கடக்கும் படகுகள், 12 மணி நேரத்தில் கடக்கும் படகுகள் என்று அதிவேகப் படகுகளையும் வைத்திருக்கிறார்கள். வேகத்திற்கு ஏற்பக் கட்டணம் மாறும். ஏழைகள் டொக்கு டொக்கு படகில்தான் பயணிக்கிறார்கள்.
இந்தோனேசியாவில் பணக்காரர் ஏழை என்பது படகுகள் சார்ந்த விஷயமாகவும் உள்ளது. விரைவுப் படகில் போகிறவர்கள் பணக்காரர்கள். 3 மடங்கு அதிகக் கட்டணமாம்.
இதுமட்டுமல்ல, சொத்து மதிப்பும் கூட இவர்கள் வைத்திருக்கும் படகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































