» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 23 Oct 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம்

ஒதி மரம்(LANNEA COROMANDELICA)

இம்மரத்தின் இலை, மரப்பட்டை, பிசின், வேர் மருந்தாகப் பயன்படுகின்றன. துவர்க்கும், உரமாக்கும், தொற்றப் புழுவகற்றும், குருதிப் போக்கடைக்கும் பண்புகள் இம்மரத்தின் உறுப்புகளுக்கு உள்ளது.

ஒதி மரம், ஒதிய மரம், உதி மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மரம் வெள்ளாடு வளர்ப்போருக்கு மிகவும் உதவியான மரமாகும். ஆலைத் தொழில்களுக்கும், மருத்துவத்துக்கும் பயன்படும் மரமாகும். இதன் கோந்து, மரக்குழம்பு, இலை ஆகியவை மிகவும் பயன்படுகிறது. காகிதம் தயாரிக்கவும், கீரையாகப் பயன்படுத்தவும் இதன் உறுப்புகள் பயனாகிறது.

இம்மரத்தினை நம் நாட்டில் பெரும்பாலும் இலையுதிரிக் காடுகளில் காணலாம். செம்புறை நிலம், மணற்கால் நிலங்களில் நன்றாக வளர்கின்றன. கடுமையான வெப்பத்தையும் தாங்கி சுமார் 750 மில்லி மழைக்கு மேலாக உள்ள பகுதிகளிலும் வளரக் கூடியது. ஓங்கி உயரமாக வளர்ந்து செங்குத்தாக உருவாகும் இம்மரத்தில் தழைகள் அடர்த்தியாகக் காணப்படும்.

கோடையில் இலைகளை உதிர்த்து மொட்டையாகக் காணப்பட்டாலும், சில பகுதிகளில் பசுமை மாறாமல் இருக்கும். பிப்ரவரி - ஏப்ரல் மாதங்களில் பூக்கத் தொடங்கும். பின்னர், இலைகளே இல்லா நிலையில் பச்சைநிறக் காய்கள் தோன்றும். பின்னர், சிவப்பு நிறப்பழமாக மாறும்.

பொதுப்பயன்கள்

இலை : இதன் தழையை கால்நடைகளுக்கும், யானைகளுக்கும் தீவனமாக்குகின்றனர். தற்போதைய ஆராய்ச்சியின்படி 15 கிலோ எடையுள்ள வெள்ளாட்டின் மொத்த உணவுச்சத்து தேவையை இம்மரத்தின் தழையே தந்து விடுவதாக அறியப்பட்டுள்ளது.

மேலும், மழைக் காலத்தில் இதன் தழையை அரைத்து, உலர வைத்து பொடியாக்கி சேகரித்து வைத்துக் கொண்டால் கோடையில் கால்நடை தீவனமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மரப்பட்டை: ரப்பட்டை தோல் பதனிடவும், சாயமேற்றவும் பயன்படுத்தப்படுகிறது. பட்டையிலிருந்து வடித்தெடுக்கும் சாற்றை துணிகளில் பிரிண்ட் செய்யவும், கம்பளி மற்றும் பட்டுக்கு சாயமேற்றவும் உபயோகப்படுத்துகின்றனர்.

மரக்கோந்து: இக்கோந்தின் ஒட்டும் பண்பு அராபிய கருவைக் கோந்தின் பண்பில் முக்கால் பாகம் உள்ளது. காலிகோ பிரிண்ட் செய்யவும், காகிதம் செய்யவும், இங்க், மிட்டாய்கள் மற்றும் சில வார்னிஷ் பொருட்கள் தயாரிக்கவும் பயனாகிறது.

மேலும் சிலர் வீட்டில் வெள்ளையடிக்கும் போது, சுண்ணாம்பு நீரில் இக்கோந்தைக் கலந்திட்டால் நன்றாக ஒட்டிக்கொள்வதாக அறிந்துள்ளனர்.

மேலும் சர்க்கரை ஆலைகளில், கரும்புச்சாற்றைச் சுத்தகரிக்கப் பயன்படுத்துகின்றனர். இதனைப் பயன்படுத்துவதால் வெகு விரைவில் கரும்புச்சாறு தெளிவடைந்து அதிலுள்ள அழுக்குகள் கீழே படிந்துவிடுகின்றன.

மரம் : நன்கு இழைத்து - மேசை, நாற்காலிகள், தட்டு முட்டுச் சாமான்கள், படகுகள், சட்டங்கள் செய்திடவும், பலகைகளாக அறுத்து பயன்படுத்தவும் வேளாண் கருவிகள், தேயிலைப் பெட்டிகள் செய்யவும் உபயோகிக்கின்றனர்.

தழை : துளிர்களைப் பசுமையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுகின்றனர். காய்களில் கலந்தும், சோற்றுடன் கலந்தும் கிழக்கிந்தியத் தீவுகளில் உபயோகப்படுத்துகின்றனர்.

படேவியாவில் கோழிக்கறியைச் சமைக்கும்பொழுது ஒதிய மரப்பட்டையைப் பொடியாக்கி கலந்து வறுக்கின்றனர். இதன்மூலம் ருசி அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.

சித்த மருத்துவப் பயன்கள்

இலை : இலையுடன், மிளகையும் சேர்த்தரைத்து மூட்டுவலி, வீக்கங்கள் ஆகியவற்றின் மீது கட்டினால் வீக்கம் குறைகிறது.

* உடல்வலி, வீக்கம், சுளுக்குக்கு எண்ணெயில் காய்ச்சி தடவி வரலாம்.

* போதை மயக்கத்தில் இருப்போருக்கு புளியுடன் இலைக்கொழுந்தை அரைத்து உள்ளுக்கு கொடுத்தால் வாந்தி எடுத்தபின் தெளிவடைந்து விடுவர்.

கனி: மத்தியப் பிரதேசத்தின் பாரியா என்னும் மலைவாசிகள் கனிப்பொடியை புண்களில் தூவிக் குணப்படுத்துகின்றனர்.

கோந்துப்பிசின் : இதனைப் பொடியாக்கி உள்ளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகிறது. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நன்மை உண்டாகிறது.

* ஆஸ்துமா மருந்துகளுடன் கலந்து கொடுக்கின்றனர்.

* சிராய்ப்பு ஏற்பட்ட பகுதிகளில் இளநீரில் கலந்து தடவினால் குணம் பெறலாம்.

வேர் : புண்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

வேர்ப்பட்டை : துவர்ப்புத் தன்மையுடன் இருந்தாலும் குடிநீர் தயாரித்து சாதாரண புண்களையும், புரையோடிய புண்களையும் கழுவலாம்.

* பல்வலி, வாய்ப்புண், நாக்குப்புண் முதலியவற்றிற்கு குடிநீரைக் கொப்பளிக்கலாம்.

குடிநீர் தயார் செய்து பயன்படுத்தும் முறை : பட்டை 50 கிராம், தண்ணீர் 1250 மிலி. சேர்த்துக் காய்ச்சி மூன்றில் ஒரு பங்காகச் சுண்ட வைத்து தினமும் 3 அல்லது 4 வேளை, 25 மி.லி. முதல் 50 மி.லி.வரைக் கொடுத்து வந்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் இவை தீரும். உடம்புக்குத் தெளிவு உண்டாகும். இதன் ஈரமுள்ள பட்டையை இடித்து வீக்கங்களுக்குக் கட்டலாம். பட்டையின் ரசம் கண்நோயைப் போக்குகிறது.

பிற செய்திகள்
திறந்த வெளிகளில் பயிரிட ஏற்றது. நிலமில்லாதோரும்கூட வீட்டைச்சுற்றி நட்டு வைத்து ஆடு வளர்க்கலாம். லாபம் ஈட்டும் மரமாக இது உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சமாக ஓதி மரம் வணங்கப்படுகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply