» Asthma .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 23 Oct 2009

Asthma

wheezing.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

“Death begins in the colon’ and starts in the mouth with
adverse foods and poor digestion.

அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்!
அல்லல் படும் ஆன்மாவும்

மனித உறுப்பில் முக்கியமான ஒன்று நுரையீரல். நமது சுவாசமண்டலம் மூக்கில் ஆரம்பித்து அவை மூக்கு, மூச்சுக்குழல், சுவாசப்பைச் சிறு குழாய், சுவாசப்பைச் சிற்றறை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் சுவாசப்பைச் சிறுகுழாய் பாதிக்கப்படும் போதுதான் ஆஸ்துமா ஏற்படுகின்றது.

ஆஸ்துமாவில் மூன்று வகை உண்டு.

1. புரொங்கையில் ஆஸ்துமா (Bronchial Asthma)
இதுதான் மூச்சுக்குழல் பாதிக்கும் போது ஏற்படுவதாகும். மூச்சுக்கிளைக் குழல்கள் சுருங்கிவிடும் போது நுரையீலுக்குச் செல்லும் ஒட்சிசனின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயானது பெரும்பாலும் ஒவ்வாமையால் (Allergy) வருகிறது. சீதோஷண நிலை மாற்றம், குளிர்ந்த காற்று, தூசிகள், வாகனங்களின் புகை, சிகரெட் புகை, சாம்பிராணி, ஊதுவத்தி போன்றன, பூக்களின் மகரந்தம், இரசாயன மாத்திரைகள், இராசயனப் பொருட்கள் கலந்த உணவுகள், நீண்ட நாள் மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, உடலுழைப்பின்மை, மனக்கவலை போன்ற காரணங்களினால் ஆஸ்துமா உண்டாகின்றது.

2. கார்டியாக் ஆஸ்துமா (Cardiac Asthma)
இது இதய நோயால் ஏற்படுவதாகும்.இதில் மூச்சுத் திணறல், வேகமான, அதிகமான நாடித்துடிப்பு, நெஞ்சுவலி, படபடப்பு போன்றவை ஏற்படுகின்றன. இவர்களுக்கு பகலை விட இரவில்தான் மூச்சுத் திணறல் அதிகமாக ஏற்படுகின்றது.

3. ரீனல் ஆஸ்துமா (Renal Asthma)
இது சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்படுவதாகும். சிறுநீரகங்கள் பழுதடையும் போது இரத்தத்திலுள்ள யூரியா கிரியேட்டனின், பொட்டாசியம், சோடியம், குளோரைட்டு போன்ற கழிவுப் பொருட்களும் உற்பத்தியாகும். சிறுநீரும் போதுமான அளவு வெளியேற்றப்பட முடியாததால் உடலில் நுரையீரல் முதல் பல உறுப்புகளில் நீர் தேக்கம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள்:

உடம்பிற்கு ஒவ்வாத புகைகளோ, தூசிகளோ, மகரந்தமணிகளோ மூச்சுக்கிளைக் குழலை அடையும் போது தும்மல், இருமலோடு கூடிய மூச்சிரைப்பு எற்படுகிறது. குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போது மூச்சுக்கிளைக் குழல்கள் சுருங்கி தேவையான ஒட்சிசன் கிடைக்காத போது சளியோடு கூடிய மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இதில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்றைவிட வேகம் அதிகமாகவும், வேகமாகவும் மூச்சுத் திணறல் ஏற்படும். மூச்சுவிடும் போது விசில் சத்தம் போன்ற ஒரு இரைச்சலோடு மூச்சுவிடுவார்கள்.

சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்றன இரத்தத்தில் ஈஸ்னோபில் அதிகமாகும் போது அறிகுறிகளாகத் தோன்றும். நமது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் இருப்பது போல ஈஸ்னோபில்கள் என்ற அணுக்களுமுண்டு. இவை நம் உடலில் நோயை உருவாக்கும் நுண்கிருமிகள் உட்செல்லும் போது அவற்றுடன் போராடுகின்றன. அவ்வாறு போராடும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் வெற்றி பெற்று விடுகின்றன. அந்த நிலையில்தான் நோயின் அறிகுறிகள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன. எனவே நோய்க்கிருமிகள் உள்ளே நுழைந்து நோயை ஏற்படுத்தியவுடன் அதை நமக்கு உணர்த்துவதற்கான ஈஸ்னோபில்ஸ் என்ற அணுக்கள் தன் எண்ணிக்கையில் இருந்து அதிகமாகி விடுகிறது. இதைத்தான் நாம் ஈஸ்னோபீலியா என்று கூறுகிறோம். எனவே ஈஸ்னோபீலியா என்பது ஒரு நோய்க்கான அறிகுறியே அன்றி அது ஒரு நோய்க்கான காரணம் அல்ல.

ஈஸ்னோபில்ஸின் அளவு மற்ற நோய்களைவிட ஆஸ்துமா நோயில் சற்று அதிகமான எண்ணிக்கையில் உயர்ந்து விடுகிறது. இந்த ஈஸ்னோபில்ஸின் அளவை நாம் இரத்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். சாதாரணமாக 3லிருந்து 7 வீதம் என்ற அளவு இருக்க வேண்டும். இந்த அளவிற்கு மேலே இருப்பின் உடலில் தொற்று நோய்க் கிருமிகள் சென்றுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயின் இறுதிக் கட்டத்தை (Chronico Obstructive Pulmonary Disorders) குரோனிகோ ஒப்ஸ்ரக்டிவ் பல்மனொரி டிஸ்ஓடர்ஸ் என்று கூறுவார்கள். ஆஸ்துமா நோயை ஆரம்பத்திலேயே அறிந்து அதற்காக சிகிச்சை பெறாவிடில் நுரையீரலின் மூச்சுக்கிளை குழல்கள் மேலும் மேலும் சுருங்கி காற்று செல்லும் பாதையே 90 சதவீதத்திற்கு மேலாக அடைபட்டு விடும். இதனால் அவர்களுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காததால் மூச்சுத்திணறல் மிக அதிகமாக ஏற்பட்டு விடுகிறது. இது ஆபத்தான ஒன்று, குரொனிகோ ஒப்ஸ்ரக்டிவ் பல்மனொரி டிஸ்ஓடர்ஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு 100 சதவீதம் இருப்பதற்கு பதிலாக 40 சதவீதம் குறைவாகவே காணப்படும். காபனீரொட்டை அளவுதான் அதிகமாக காணப்படும். எனவே தான் அவர்கள் மூச்சு விட மிக மிக சிரமப்படுகிறார்கள். முடிவில் அவர்கள் ஓட்சிசனுக்காக ஏங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் ஒவ்வாமை தம்மைத் தாக்காதவாறும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய மூலிகைகள், உணவுகள், எளிய உடற்பயிற்சிகள் போன்றன பின்பற்றினால் ஆஸ்துமா நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Most Commented Posts


Leave a Reply