Wednesday, 21 Oct 2009
அரவிந்த் வினோத் - ஸ்ரித்திகா போல ஆட்டம் போடணுமா?:
முதல்ல அழுங்க 80 ஆயிரம் ரூபாய்!

அரவிந்த் வினோத்தும், ஸ்ரித்திகாவும் அடையாளம் தெரியாத ஆளுடன் கோட்டும் சூட்டுமாக இருப்பதைப் பார்த்தால் ஏதோ சிட்டியைச் சேர்ந்த சிட்டுகள் போலத்தான் தெரியும். ஆனால், இந்த ஸ்டில் வருவது ‘மதுரை டூதேனி வழி ஆண்டிப்பட்டி’ என்கிற பக்கா கிராம படத்தில்.படம் வந்ததும் அதே வேகத்தில் உள்ளே போனதும் வேற விஷயம்.
அந்தப் படத்தில் புதுசா புதுசா அப்படிங்கிற பாட்டு. அந்த பாட்டை இந்தப் படத்தின் புரமோஷனல் டிரெய்லரிலும் பயன்படுத்தினர். அந்த டிரெய்லரில் வரும் ஒரே ஒரு காட்சியில்தான் அரவிந்த் வினோத்தும் ஸ்ரித்திகாவும் இந்த கோட்டும் சூட்டுமாக குதித்துவிட்டுப் போவார்கள்.
இவர்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அலசலாமா?
இவர்கள் மூவரும் தலைக்குக் கொடுத்திருப்பது கூரியன் வகை தொப்பி. அதிலும் இவை எக்ஸட்ரா பேண்டோடு வரும் ஜாக்வார்டு தொப்பிகள். கூரியன்கள் தொப்பி தயாரிப்பதில் வல்லவர்கள். இவர்கள் தயாரிக்கும் தொப்பிகள் எப்போதும் வித்தியாசமாக இருக்கும். தரத்தோடு இருக்கும். இந்த வகை தொப்பி யைத் தேடிப் போனால், 1500 ரூபாய் வரை நாம் அழ வேண்டியிருக்கும்.
http://www.hatsinthebelfry.com/product/pinstripe-trilby-fedora-goorin-moretti-100-0055.html
இவர்கள் கண்ணுக்குக் கொடுத்திருக்கும் சன் கிளாஸ்கள் லேட்டஸ்ட் மாடலாகத் தெரிகிறது. இதன் லென்சுகள் பாலிகார்பனேட்டால் செய்யப்பட்டது. இந்த சன்கிளாஸில் ஆண் பெண் பேதம் இல்லை. இருபாலினரும் இதை அணிய முடியும். கருப்பு, பிரவுன் மற்றும் அதன் ஷேடுகளில் இவை கிடைக்கின்றன. விலை வெறும் ரூ.5 ஆயிரம் வரை ஆகும்.
http://www.smartbuyglasses.com/designer-sunglasses/DKNY/DKNY-DY4039-33OO73-26286.html
ஸ்ருத்திகாவின் கோட்டுக்குள், உள்ளே மார்பை மறைத்திருக்கிற வி நெக் டீசர்ட் பல வண்ணங்களில், பல அளவுகளில் கிடைக்கிறது. விலை 1600 ரூபாய்.
ஆஹா… இவர்கள் இடுப்பில் பிடித்திருப்பது என்ன மாதிரி பெல்ட் தெரியுமா? மென்மையான ஒரிஜினல் தோலில் செய்யப்பட்ட இந்த கோல்டன் லாங்க் ஹார்ன் பெல்ட்டில் பக்கிளும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் உள்ள டிசைன் மிகநுட்பமாக குடைந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். இந்த வகை பெல்ட்டுகள் 800 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை கிடைக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கட்டிக் கொள்ளலாம்.
http://www.belts.com/webegolocale.html
இவர்கள் மூவரும் அணிந்திருப்பது டபுள் குளோசர் பட்டன்கள் கொண்ட உல்லன் கோட்டுகள். சும்மா வெளிச்சம் பட்டா கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரியும். இதில் பீகோட், மிலிட்டரி கோட் என்ற இருவகை உள்ளது. இதை பிரெஞ்ச் கனெக்ஷன் கோட் வகையிலும் சேர்க்கலாம். இதை போட்டுக்கொண்டு விழாக்களுக்குப் போனால் கையை விடுகிற இரண்டு பக்க பாக்கெட்டுகளிலும் யாரை வேண்டுமானாலும் மடித்து வைத்துக்கொள்ள முடியும். அது உங்கள் சாமர்த்தியம். ஆனால், இந்த கோட்டை வாங்க உங்களிடம் ரூ.5ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரை சட்டைப் பாக்கெட்டில் இருக்க வேண்டும்.
பாதித் தெரியும் பேண்ட் பாஸ் ப்ளாக் பிராண்டாக இருக்கலாம். இந்த பிராண்டில் பேண்ட் ஒன்று வாங்க வேண்டுமானால் ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆகலாம்.
ஆக, இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது உச்சி முதல் உள்ளங்கால் வரை, அதிகப்பட்சமாக கணக்குப் போட்டுப் பார்த்தால் வரும் ரூ.26,600 - தொகையை மூன்றால் பெருக்கினால் கிடைக்கும் ரூ.79,800 மதிப்பிலான உடைகளை அணிந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.
பாடல் ஒன்றில் வரும் ஒரே ஒரு காட்சிக்காக, உடைக்காக மட்டுமே இத்தனை செலவை தயாரிப்பாளருக்கு இயக்குநர் வைத்திருப்பாரா என்ற சந்தேகமும் வருகிறது. ஒருவேளை லோக்கல் சந்தையில் இந்த உடைகளை வாங்கி செலவைக் குறைத்திருக்கவும் கூடும், யார் கண்டது?
































