இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
உலகில் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தோனேசியாவில் கணக்கற்ற இந்துக் கோயில்கள் இருக்கின்றன என்பதும், இவை முறைப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதும் இவற்றில் கணக்கற்ற விழாக்கள் அடிக்கடி நடந்த வண்ணம் இருக்கின்றன என்பதும் எனக்குள் பெரிய பிரமிப்பையே ஏற்படுத்தியிருந்தன.
கொழுத்த பர்ஸின் ஜிப்பைத் திறந்து கவிழ்த்தால் அது கொட்டுமே அப்படிக் கொட்டினார் ஸ்ரவண பாலி.
இத்தொடரை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் சுமத்ரா தீவில் நடந்துள்ள மிக மோசமான பூகம்பம் பற்றி அறிய நேர்ந்து மனத்தளவில் மிகவும் தாக்கப்பட்டேன்.
அழகான நாடு. நல்ல மக்கள். பிறருடன் வம்பிற்குப் போகாத அப்பாவி ஜனங்கள். உதவும் உள்ளமும் மனித நேயமும் உள்ளவர்கள். இவர்களையா இந்த இயற்கை இப்படி அலைக்கழித்து உயிர்களைப் பறிக்க வேண்டும்?
என்ன பாவம் செய்தது இந்த நாடு? ஏன் இப்படிப்பட்ட சோதனை? அதுவும் இவ்வளவு கடுமையாகவா? விழுந்த அடி ஆறுமுன் மறுபடி மறுபடி அடிக்கிறதே இந்த இயற்கை! எந்த நாடாவது இவ்வளவு கடுமையான சோதனைகளை இயற்கையின் வழியே சந்தித்திருக்குமா?
இந்தோனேசியா இப்போது இனிய உணர்வுகளைவிட இதயத்து அதிர்வுகளையே அதிகம் தருகிறது.
பாலியில் இந்துக்களே அதிகம். நடிகை வைஜெயந்திமாலாவைத் தெரியாத அந்தக் காலத்து இரசிகர்கள் இருக்கவே முடியாது. இவருடைய முழுப் பெயரில் பாலி என்பதும் சேர்ந்திருக்கும்.
இந்த பாலிதான் அந்த பாலி. அதென்னவோ பாலியில் பிறந்தவர்கள் அந்தப் பெயரையும் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்கிறார்கள். நாம் இப்போது சந்தித்த ஸ்ரவணா பாலியும் இதற்கு மேலும் ஓர் உதாரணம்.
“பாலி ரொம்பவும் கிராமப் பகுதியோ? ஒரு வசதியும் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன் ஸ்ரணாவிடம்.
“உண்மை. பொய்!” என்று சொல்லி நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.
“என்ன ஸ்ரவணா, இரண்டையும் சொல்கிறீர்கள்?”
“பாலியின் இயற்கையழகு கெடக் கூடாது என்பதற்காக நவீனப்படுத்தாமல் இருக்கிறார்கள். அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மறுக்காமல் செய்து தந்திருக்கிறார்கள். வங்கிகள் உண்டு ஏ.டி.எம்.கள் கிராமத்தில்கூட உண்டு.”
“ஓ!”
“ஆமாம். தபால் நிலையங்கள் வெறும் தபால் நிலையங்களாக மட்டுமில்லாமல் இன்டர்நெட் மையங்களாவும் கூடச் செயல்படுகின்றன. தொழிற் கவலைகளை மறக்க இங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் கூட இங்குள்ள தகவல் தொடர்பு வசதிகளைப் பார்த்து, ஓய்வை மறந்து விட்டு அதில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உட்கார்ந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.”
“உங்கள் ஊரில் கிராமத் தபால் நிலையங்களில் இன்டர்நெட் வசதிகள் உண்டா?”
“வந்து… வந்து..”
“புரிகிறது. எங்களுக்கு உல்லாசப் பிரயாணிகளால்தான் பெரிய வருமானம், பிழைப்பு. உங்கள் நாடு அப்படி இல்லியே! உங்கள் நாட்டிற்குத்தான் பல வழிகளில் வருமானங்கள் வருகின்றனவே! உலகில் இந்திய மென்பொருள் இன்ஜினியர்கள் சம்பாதிக்கிற கோடிகள் வேறு எந்த நாட்டவர்கள் சம்பாதித்து விட முடியும்?”
இந்த ஸ்ரவணா ஒரு பொல்லாத மனிதர் தோன்றியது. சற்று இடித்துப் பார்க்கிறார். பிறகு சமாதானம் சொல்வதுபோல் ஒத்தடமும் வைக்கிறார். இலேசுப்பட்ட ஆளில்லை இவர்!
“பாலியைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நினைவுகளைப் பதிக்கப் புத்தகமே எழுதியிருக்கிறார்கள். பாலியைப் பற்றி நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வதைவிட வந்த பயணிகள் பெருமைப்படுத்தி எழுதியதே அதிகம்.”
“அப்படியா? ஆச்சரியம்தான்!”
“1937 ஆம் ஆண்டு பாலியைப் பற்றிய புத்தகம் முதன் முதலில் வந்தது. மேக் டஃபி என்பவர் இதை எழுதினார். இன்னமும் இந்தப் புத்தகத்தை பாலியில் ஏன் இங்கு ஜகார்தாவில் வாங்கலாம். வாங்கிப் பார்த்தால் அதிக மாற்றம் தெரியாது. அப்படிச் சிந்தாமல் சிதறாமல் பாலியின் இயற்கை அழியாமல் பாதுகாத்து வருகிறோம். ஆனால் இயற்கைதான் எங்களைச் சீரழிக்கிறது” என்று சொல்லிச் சட்டென்று முகம் கவிழ்ந்தார் ஸ்ரவணா.
சற்றே பாவமாக ஆகிவிட்டது எனக்கு.
பாலித் தீவுக்கும் இந்தோனேசியாவின் மற்றொரு அழகிய தீவான ஜாவாவிற்கும் இடையே 24 மணி நேரமும் படகுப் போக்குவரத்து உண்டாம். 30 நிமிடத்திற்கு ஒரு படகு புறப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று சொல்லி அசத்தினார்.
பாலித் தீவில், ஜாவா தீவில் வாடகைக்குக் கார்கள் கிடைக்கின்றன. நாமே ஓட்டிக் செல்லலாம் உலக லைசன்ஸ் இருந்தால். ஓட்டுநர்களை இங்கே குறைவான தொகை கொடுத்து அமர்த்திக் கொள்வது சாத்தியம் என்றாலும் தனிமை, அவரைக் கவனிக்க ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் மேலை நாட்டவர்கள் இவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிடுவது உண்டாம்.
“புது இடமாச்சே! தடுமாறமாட்டார்களா?
“மேலை நாட்டவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது (!?) வரைபடத்தை வைத்துக் கொண்டு எப்படியும் சமாளிப்பார்க்ள. அபாரத் தன்னம்பிக்கை மிகுந்த மக்கள்”
“ஓகோ! அப்படியா?” என்றேன். அப்பாவியாய் விஷயம் தெரிந்ததாய்க் காட்டிக் கொண்டால் புது விஷயம் கறக்க முடியாது என்பதால் இந்த அப்பாவி வேடம்!
“இந்தோனேசியாவில் தீவுகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“ஆமாம். இவற்றையெல்லாம் சுற்றிப்பார்க்க ஒரு பேக்கேஜ் படகுத் திட்டம் உண்டு. மனித நடமாட்டம் உள்ள எல்லாத் தீவுகளையும் வலம் வந்துவிடலாம். அதிக நாள் ஆகாது.”
“மோட்டார் சைக்கிளும் வாடகைக்குக் கிடைக்கும். ஆனால் உயிருக்கு அஞ்சாதவர்கள் மட்டுமே இதை ஓட்ட முடியும்!”
“அப்படியா? ஏன்?”
“குறுகலான சாலைகள். எதிர் வாகனக்காரர்கள் மோதித் தூக்கி எறிந்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்” என்று சர்வசாதாரணமாக ஸ்ரவணா சொன்னதைக்கேட்டு பக் என்றிருந்தது எனக்கு.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































