Friday, 9 Oct 2009
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
பொதுவாகவே மனிதராகப் பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் வயது கூடிக்கொண்டு போவது என்பது இயற்கையின் மரபாகும். வயது தான் கூடிக் கொண்டு போய்க் கொண்டு இருக்கிறதே ஒழிய அதனால் உடல் வளர்ச்சியிலும், உறுப்புகளின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் சில ஏற்பட்டாலும், மனதளவில் இன்று நம்மில் எத்தனையோ பேர் மிகவும் சுறுசுறுப்புடனும், துடிப்போடும் இளைஞர்கள் போல் ஓடியாடி, முதுமை என்ற நினைப்பே இல்லாமல், தங்களால் எல்லாம் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ்வதை நாம் பார்க்கின்றோம். அத்தகைய முதியோர்களைப் பார்க்கும் போது எவ்வாறு அவர்கள் இப்படி இளமையாக ஆரோக்கியத்துடனும் செயல்பட முடிகிறது என்று நம்மை வியக்க வைக்கலாம். அது ஒன்றும் பெரிய வித்தை அல்ல. நீங்கள் அனைவருமே முதற்கண் மனதளவில் நாம் இளமையுடன் தான் இருக்கின்றோம் என்ற மனப்பக்குவத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு, அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள், மனதை ஒருமுகப்படுத்தி மகிழ்ச்சியும், சாந்தியும், மனநிறைவும் பெறக்கூடிய வழிமுறைகளை அனுசரித்தாலே போதும், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து வளமும் நலமும் சூழ வாழந்து காட்டலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்பது என்ன? யாராவது ஒரு பெரியோரைப் பார்த்ததவுடன், எப்படி சுகம் என்றால் என்னத்த சொல்வது, வயது கூடிக்கொண்டே போகுது, சுகர் கம்ப்லெயின்ட், பிளட் பிரஷர், கொலஸ்ட்ரால், கால் கை குடைச்சல், கண் பார்வையில் குறை, காது கேளாமை, சிறுநீர் பிரச்னை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். மேலும் பலர் குடும்பச் சூழல், தங்களது பிள்ளைகளால் பிரச்னைகள், பொருளாதார நிலை ஆகயவற்றால் இரவில் நிம்மதியாக தூங்கவோ, மனதை அமைதிப்படுத்தவோ இயலாத வாழ்க்கையைக் கெர்ணடவர்களாக பதில் அளிப்பார்கள். இவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும், தைரியமும், விவேகத்துடன் கூடிய மன ஆற்றலும் தான்அனைவருக்கும் தேவை.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்கள் தோறும் வேதனை இருக்கும் என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொருவர் வாழ்க்கையும் இன்பமும் துன்பமும் கலந்து இருப்பதே இயற்கையின் நியதி. அதன்படி வாழ்கின்ற காலத்தில் நோய்நொடியின்றி, திட்டமிட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும். வயதான காலம் என்றவுடன், ஏதோ விரைவில் இறந்து விடுவோம், நமது உடலில் தள்ளாமை ஏற்பட்டு, நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுவிடலாம் என்ற மனோரீதியான எண்ணங்கள் ஏற்படுவது என்பது எல்லாம் ஒரு தவறான கருத்தாகும். வயதாகி விட்டது என்று ஏன் சொல்லுகிறோம். ஒரு குடும்பத்தில் தலைவனாய் விளங்கி, தனது பேரன் பேத்திகளை எல்லாம் உறவினர்கள் சூழ ஒரு கூட்டு குடும்பமாய் வாழ்ந்த காலம் மாறி இன்று ஒன்றோ அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்று, அவர்களை வளர்த்து பெரியவர்களாக்கி, குடும்ப பாரத்தை அவர்களிடம் ஒப்படைத்து நாமும் ரிடையராகி, அவர்களைச் சார்ந்தோ அல்லது பிறரின் தயவில் வாழவோ நேரிடும்போதுதான், நமக்கு வயது கூடியதின் விளைவாக, வயதில் முதிர்ச்சி அடைந்தவர் என்ற பின்னணியில் நமக்கு முதியவர்கள் என்ற அந்தஸ்தை அளித்து விடுகிறார்கள். அப்படி முதியோராய் வாழும் போது நமக்குத் தேவை என்பது நமது உடல் நிலைக்கு ஏற்ற உணவுவகைகள், ஓய்வு, பொழுது போக்கு மற்றும் அன்புடனும் பரிவுடனும் நம்மீது அதிகம் பற்று கொண்டுள்ள உற்றாரும் உறவினர்களும் நண்பர்களுமே. எனினும் அடிப்படையில் முதியவர் என்று பார்க்கும்போது,அவரின் மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் பெறக்கூடிய விதத்தில் ஒருவர் வாழ்வதுதான் சிறப்பான வாழ்வாகும். இது எல்லோருக்கும் அமைந்துவிடுகிறதா? உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், இங்கு எத்தனை பேர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு, நிம்மதியும் சந்தோஷமும் இன்றி இருக்கின்றீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். நான் தொடக்கத்தில் கூறியது போல, இருப்பினும் முதிய பருவத்தில் பொதுவாகவே உடல் பாதிப்பு என்பது ஒரு சில நோய்களின் தாக்கத்தினால் தான் என்பதால் அவற்றிலிருந்து விடுபட இயற்கை உணவுகளை உண்டு பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.
வயதான காலத்தில் ஏற்படுகின்ற நோய்களில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது நீரிழிவு, இரத்த அழுத்தம், நினைவாற்றல் இழப்பு, பாரிசம் எனும் பக்கவாதம், எலும்புகள் பாதிப்பு போன்றவை. இத்தகைய உடல் தளர்ச்சிக்கு மருத்துவ ஆலோசனை பெற்று உரிய மருந்துகளை முறையே உட்கொள்ளுவதோடு, இயற்கை உணவுப் பொருட்களான பச்சைக் காய்கறிகள், பழ வகைகள், அடிக்கடி சாத்துக்குடி, திராட்சை, ஆப்பிள், பால், தயிர்,போன்றவற்றையும் உட்கொள்ளல் வேண்டும். தவிர உடற்பயிற்சியாக காலை மாலை நடைப்பயிற்சி, தியானம், யோகா போன்றவை மற்றும் பொழுதுபோக்கும் அம்சமாக வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல், நண்பர்கள் உறவினர்களுடன் உரையாடல், ஆலய வழிபாடு என்று எந்த விதத்திலாவது மனதிற்கு பூரண நிறைவைத் தருகிற வகையில் அன்றாடம் பழக்கப்படுத்திக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ்வது என்பது எளிதாகும். அவ்வகையில் முதியவர்களை பாதிக்கும் ஒரு சில முக்கிய நோய்களையும், அதற்கான எளிய இயற்கை உணவு வகைகளையும் கூறி, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தை நீங்கள் அனைவரும் உணர்ந்து பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.
முக்கிய நோய்கள் - இயற்கை உணவு பலன்கள் - உணவுக்சூழல் - சிறுகுடல் - கல்லீரல் - கோலன் - இருதயம் - நீரிழிவு - புற்றுநோய் - சிறுநீரகம் - அல்ஸிமியர் எனும் நினைவாற்றல் இழப்பு - பக்க வாதம் மற்றும் மூட்டு வலி.
மேற்கூறிய நோய்கள் தான் முதுமைக் காலத்தில் நம்மவர் மத்தியில் பரவலாக காணப்படுவதால், வாரம் தோறும் வியாழக்கிழமை வெளிவரும் சுதந்திரன் வார இதழில் எனது மருத்துவத் தொடர் கட்டுரை “உணவே மருந்து” என்ற தலைப்பில் வெளியிட்டு, நம்மின் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உடல் நோய்பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். நீங்களும் படித்து வருவதை அறிந்து மிகவுமி மகிழ்ச்சி. உலக மறையாம் திருக்குறளின் கூறியபடி,
‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’
என்பது போல் நீங்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற இறைவனை பிரார்த்தித்து உங்களுக்கு ஏற்படும் எந்த விதமான உடல்நல சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் சிகச்சை மற்றும் ஆலோசனை பெற என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பயன் பெற வேண்டுகிறேன்.
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































