இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
குரலில் தணல் வீசிய இளைஞர்!
லில்லி கோசம் என்கிற சமூக சேவகியுடன் (வயது 56) பேசிக் கொணடிருப்பதை உங்களுக்கு நினைவூட்டி இவ்வார அத்தியாயத்தைத் துவங்குகிறேன்.
இந்தோனேசிய ஓட்டுநரிடம் விஷயங்களைக் கறக்க முடியாத சூழ்நிலைக்கு வருந்தினேனே, இவருக்கு நல்ல மாற்று இந்த லில்லியம்மா.
இந்தோனேசியாவைப் பற்றி என்ன கேட்டாலும் விரல் நுனிதான். ஆனால் சற்றே பயந்தவராக இருக்கிறார். “படம் எடுத்துக் கொள்வோம் நாம் இருவரும்” என்றேன்.
“ஐய்யோ! வேண்டாம். நீங்கள் ஒரு சாதாரண மனிதர் என்றால் எடுத்துக் கொள்வேன். நீங்கள் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகையில் என் - நம் படத்தை வெளியிட்டு விடுவீர்கள். எங்கள் அரசியல்வாதிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.”
“எங்கள் நாட்டில் வெளியிடப் பெறும் பத்திரிகையில் இடம் பெறுவது எப்படி உங்களைப் பாதிக்கும் என்கிறீர்கள்?”
“வேண்டாம் வற்புறுத்தாதீர்கள். புகைப்படம் எடுக்காவிடில் நிறையப் பேசுவோம். புகைப்படம் என்றால் நான் புறப்படுகிறேன்.”
“வேண்டாம். உங்களிடம் நிறையப் பேசவேண்டும்.”
“எதைப் பற்றி?”
“இந்தோனேசியப் பள்ளிக்கல்வி முறை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”
“கேளுங்கள்.”
“நீங்களே ஆரம்பித்துப் பேசுங்கள். எங்கே விளக்கம் வேண்டுமோ அந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.”
“இப்படி ஒரு சுதந்தரமா? சரி! இந்தோனேசியப் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது.”
“அதுதான் சொல்லிவிட்டீர்களே! மூன்று மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் என்று.”
“இதுகூடச் சாதாரணம் என்பேன்.”
“பின் என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“ஆசிரியர் பணி என்பது நேபுள் புரபஷன். ஆனால் இங்கே ஆசிரியர்கள் தொழிலாளர்கள் போல நடத்தப்படுகிறார்கள்” சற்று உணர்ச்சிவசப்பட்டு நிறுத்தினார் லில்லி.
தொண்டையில் முண்டிக்கொண்டிருந்த எலும்பு அசைந்து கொடுத்தது. எச்சில் நன்கு விழுங்கி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார். பிறர் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணும் இவரல்லவா உண்மையான சமூக சேவகி என்று அந்த நொடியில் எனக்குத் தோன்றியது.
“இந்தோனேசியாவிற்கு 4,20,000 பள்ளி ஆசிரியர்கள் தேவை. ஆனால் 2,36,000 ஆசிரியர்கள் தாம் இருக்கிறார்கள். இங்கு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இங்கு எலிமென்ட்ரி கல்விக்குப் பிறகு ஜூனியர் செகண்டரி பள்ளிகள் என்று இருக்கின்றன. இவற்றில் சேர்ந்து படிக்கப் பிள்ளைகள் வேறு வரமாட்டேன் என்கிறார்கள்.”
“ஏன்?”
“வெகு தொலைவான தூரங்களில் பள்ளிகள் இருப்பதுதான் காரணம். அரசுப் பள்ளிகளை நிறைய உருவாக்க வேண்டும்.”
“உருவாக்குவதில் என்ன கஷ்டம்?”
“பொருளாதார இயலாமைதான்.”
“சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களைப் போன்றவர்களும் போராடிப் போராடி இப்போதுதான் இலட்சம் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அந்தஸ்தை வழங்கி சம்பளமும் உயர்த்தப் போகிறார்கள். மீதமிருக்கிற 1,36,000 ஆசிரியர்களின் கதி பரிதாபகரமானது.”
“எந்த விதத்தில்?”:
“மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்ட இவர்கள் நான்காம் வருடம் அரசு ஊழியர்களாக ஆக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் சேர்ந்தார்கள்.”
“என்னவாயிற்று?”
“பத்து வருடங்களாகியும் தொழிலாளர்கள் போல் நடத்தப்பட்டு 46,000 ரூபாய் தான் சம்பளம்.”
“உயர்த்தப்பட இருக்கிற சம்பளம் எவ்வளவு?”
“18,50,000 ரூபாய்!”
“என்னது இது சம்பந்தமில்லாமல் இருக்கிறது?”
“ஆமாம். 40 மடங்கு குறைவான சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.”
“இலட்சம் பேர்களுக்கு பதவி உயர்வு சரி. மற்றவர்களுக்கு?”
“அரசு கைவிரித்துவிட்டது. இலட்சம் பேருக்குத்தான் முடியும் என்கிறது.”
“1,36,000 பேர்களுக்கு என்ன சொல்லி வாய்ப்பு மறுக்கப்படும்?”
“இருக்கவே இருக்கின்ற தேர்வுகள். அழகாக வடிகட்டி விடுவார்கள். பாவம் வேலையில் சேர்ந்து பத்து வருடங்களாகி இப்போதுதான் இந்த வளமையை அடையப் போகிறார்கள்.”
“34,000 பள்ளிகள் என்கிறீர்கள். எவ்வளவு பிள்ளைகள் படிக்கிறார்கள்?”
“29,00,000 பிள்ளைகள்.”
“இந்தோனேசியாவின் ஜனத்தொகையை ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருக்கிறதே!”
“அந்த மனக்குறையை ஏன் கேட்கிறீர்கள்?”
இதன் பிறகும் நிறையப் பேசினோம். உங்களுக்கு அவை சுவையாக இல்லாமல் இருக்கலாம் என்பதால் தவிர்க்கிறேன்.
மறுநாள் ஜகார்தாவை வலம் வந்தபோது காண்டம் வழங்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டேன். இங்கு பாலியல் பற்றிய பார்வைகள் மிக மோசம் என்பதால் திரும்பிய திசையெல்லாம் இந்த இயந்திரங்களைக் காணமுடிந்தது.
இந்த இயந்திரத்தை ஒருவர் இயக்கி காண்டம் ஒன்றை வெளியே எடுக்க ஆரம்பித்தார்.
இயல்பான ஆர்வத்தில் நின்று கவனிக்க ஆரம்பித்தேன்.
மூன்று இந்தோனேசிய 500 ரூபாய்க் காசுகளை உள்ளே தள்ளினார். (ஒரு காண்டம் விலை 1500 ரூபாயா என்கிறீர்களா? செளகரியமாகப் புரிந்து கொள்ள இரு சைபர்களை நீக்கிவிடுங்கள்.)
இயந்திரத்தில் வெவ்வேறு பட்டன்கள் இருக்க, இவை வெவ்வேறு பிளேவர்களாம்.
ஒரு இயந்திரம் 300 காண்டம்களை மட்டும் கொள்ளுமாம்.
நான் நின்று பார்க்கவே அந்த இளைஞர் (படத்தில் இருப்பவர்) என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “உங்களுக்கு என்ன பிளேவர் வேண்டும்? நான் சாக்லேட் எடுத்தேன். எனக்கு சாக்லேட் பிளேவர் பிடிக்கும்” என்று ஆரம்பித்தார்.
“ஆளை விடுப்பா சாரி!’ என்று சொல்லாக் குறையாக நடக்க ஆரம்பித்தபோது.
“மிஸ்டர்!” என்றார் அவர்.
“கேட்டதற்குப் பதிலே சொல்லாமல் போகிறீர்கள்!” என்றார். குரலில் சற்றே தணல்.
“சாரி! சும்மா ஆர்வத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்” என்றேன்.
“பக்கத்தில் ஜெயபுராவில் சாகாமாலில் ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் கண்காட்சி நடக்கிறது போய்ப் பாருங்கள். படு சுவாரசியம்” என்றார்.
“என்னது ஹெச்.ஐ.வி கண்காட்சியா? அது சரி!” என்று சொல்லியபடி அவரிடமிருந்து நழுவ ஆரம்பித்தேன்.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































