Friday, 2 Oct 2009
தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்
பெங்களூர் தக்காளி - 2
நாட்டுத் தக்காளி - 2
துவரம் பருப்பு - 1/2 கப்
மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1-1/2 தேக்கரண்டி
மிளகு, சீரகப்பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சிறியக் கட்டி
மல்லி இலை - சிறிதளவு
தாளிப்பதற்கு :
நெய் : 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
செய்முறை :
துவரம் பருப்பை குழைய வேக வைத்து நன்றாக மசித்து கரைத்து வைக்கவும். தக்காளியை நறுக்கி உப்பு, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம், வெல்லம், கொஞ்சம் மல்லி, இலை எல்லாவற்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து தக்காளி வெந்ததும், கரைத்து வைத்த துவரம் பருப்புத் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைத்து மீதி உள்ள மல்லி இலையையும் சேர்த்துக் கலந்து, இறக்கி வைத்து எண்ணெய், நெய் விட்டு, கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும். நாட்டுக் தக்காளி இல்லை என்றால் கொஞ்சம் புளி கரைத்துச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். புளி விடுவதாக இருந்தால் பொடிகளுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
Chettinadu Samayal
2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































