» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 2 Oct 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை
(CITRUS AURANTIFOLIA)

CITRUS MEDICA, LINN; VAR.LIMONUM; RUTACEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :
விங்குவிளை கழனிமிகு
கடைசியர்கள் பாடல்விளை
யாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள்
மாடமலி நீடுபொழில் மாகற
லுளான்
கொங்குவிரி கொன்றையொடு
கங்கைவளர் திங்களணி
செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி
சேர்பவர்கள் தீவினைகள் தீரு
முடேனே.

அழகான குழந்தைகளை அல்லது அலங்கரித்த குழந்தைகளின் முகத்தில் அல்லது தாடையில் கரும்புள்ளி வைப்பார்கள். இது கண் திருஷ்டியைத் தடுக்கும் என்று பெற்றோர் நம்புகின்றனர்.

வீடுகளில் கருப்பு நூலில் எலுமிச்சம் பழத்தைக் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். சிலர் படிகாரம் கட்டுவார்கள்; பலர் பூசணிக்காய் கட்டுவார்கள். இன்னும் சிலர் தாயத்துக்களைக் கட்டுவார்கள். இவையெல்லாம் கண்திருஷ்டிக்கு பரிகாரம் என்பார்கள். வீட்டிலே இருக்கும் முதியவர்கள் யாருக்காவது உடல்நலம் மோசமாகிவிட்டால், மருந்துகளும் பயன் அளிக்கவில்லையென்றால் ஒரு கைப்பிடி மிளகாய் எடுத்து மந்திரித்து தலையைச் சுற்றி நெருப்பில் போட்டு எரிய விடுவார்கள். எரியும் மிளகாயில இருந்து சிறிதளவும் கார நெடி வராது. பொதுவாக தப்பித்தவறி அடுப்பில் மிளகாய் விழுந்து விட்டால், அதன் காரத்தால் அங்கு சில நிமிடங்களும் உட்கார முடியாது. இருமல் தொடர்ந்து வரும். இப்படி நெருப்பு, துடைப்பம், எலுமிச்சம் பழம் என பல பொருட்களைக் கொண்டு திருஷ்டியைச் சுற்றிப் போடுவார்கள்.

பெரியவர்களைப் பார்க்கச் செல்லும்போது, சிலர் மரியாதை நிமித்தமாக எலுமிச்சம் பழத்தை கையில் கொடுத்து மரியாதை செலுத்துவார்க்ள. மந்திரவாதிகள் எலுமிச்சம் பழத்தை ஏவல், சூன்யம், மாய, மந்திரம் செய்ய என அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

சில கோவில்களில் எலுமிச்ச மரத்தை வளர்ப்பார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை அனுபவப்பூர்வமாகத்தான் உணர முடிகின்றது. எலுமிச்சம் பழம் மருந்தாகவும், உணவுப் பொருளாகவும் அமைந்து இருக்கின்றது.

மருத்துவரீதியாக, எலுமிச்சம் பழம் வைட்டமின் ‘சி’ நிறைந்த பழமாகும். இந்தச் செடி அழியக் கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கோயில்களில் வைத்து உள்ளனர். அதன் மருத்துவ குணங்களை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் வைத்து இருக்கலாம். கொசுக்களின் தொல்லைகள் நிறைந்த சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் எலுமிச்சம் செடிகளை வளர்ப்பது கொசுக்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.

கோயிலுக்குப் போக வேண்டும் என்றால் பூக்கள், தேங்காய், எலுமிச்சம் பழம் போன்றவை இன்றியமையாததாகிவிட்டது. குபேரர், லட்சுமி, பார்வதி, சதாசிவம் போன்றோரின் சின்னமாக மதிக்கப்படும் இந்த எலுமிச்சம் பழத்தை இந்துக்கள் செழுமை, வசதி போன்றவற்றின் சின்னமாக மதிக்கின்றனர். இந்துக்களின் தெய்வீக, விசேஷ நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து விட் இந்த எலுமிச்சம் பழம் நமது அன்றாட வாழ்வோடு ஒன்றிவிட்டது.

பல கோயில்களில் தெய்வீகத் தன்மையோடு வணங்கப்படுகின்ற இந்த எலுமிச்சயை இந்து சமுதாயத்தவர்கள் மிகவும் போற்றுகின்றார்கள். கண் திருஷ்டி கழியவும், நேர்த்திகள் செய்வதற்கும், பூஜைகள் செய்வதற்கும் இவை பயன்படுகின்றது. இந்துக்களின் வீடு, கடை, அலுவலங்களில் எலுமிச்சம்பழம் கட்டி தொங்க விடப்பட்டு இருப்பதைக் காணலாம். இதில் மிகுந்த தெய்வீகத் தன்மை அடங்கியிருப்பதாகவும், இதனைக்கொண்டு தமது தேவைகளை நிறைவாக்கிக் கொள்ளலாம் என்றும் இந்துக்களிடம் நம்பிக்கை உண்டு.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் இந்த எலுமிச்சையைப் பற்றி மருத்துவ நூல்களில் ஏராளமான தகவல்கள் பதிவாகியுள்ளன. இதிலுள்ள சில மருத்துவப் பொருட்கள் பல அதிசயகரமான வேலைகளையும் செய்து வருவதைக் கண்டு மருத்துவ அறிஞர்கள் பெரும் வியப்பு கொள்கின்றனர்.

தோற்றம்:
எலுமிச்சம் பழச்செடி ஒரு சிறிய செடியாகும். இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும்.

காணப்படுமிடம்:
எலுமிச்சம் பழத்தின் தாயகம் மத்தியக் கிழக்கு நாடுகள் என்று பலரும் கூறுகின்றனர். இன்னும் சிலரோ இது “காணா” என்ற தீவிலிருந்துதான் உலகமெங்கும் பரவியதாகக் கூறுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு இந்தத் தீவிலிருந்துதான் சென்றதாகவும் கூறுகின்றனர்.

இமயமலைப் பிரதேசத்தில் அதிக உஷ்ணமுள்ள பள்ளத்தாக்குகளில் இது ஒரு காட்டுச் செடி போல வளர்ந்து பழங்களுடன் காட்சியளிக்கிறது.

இந்தப் பழம் சாதாரண காய்கறிகளைப் போல் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.

60 வகையான எலுமிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் நாம் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டும்தான் பயன்படுத்துகின்றோம்.

கொழுந்து இலையின் மருத்துவப் பயன்கள்:
மனிதர்களுக்குப் புரியாத புதிராகவும், பெரும் திகைப்பாகவும் இருந்த “ஸ்கர்வி” என்ற கொடூரமான நோயினை இந்த எலுமிச்சம் பழம் குணப்படுத்துகின்றது. இதிலுள்ள வைட்டமின்-சி தான் ஸ்கர்வியைக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலுமிச்சைச் செடியின் கொழுந்து, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகிய அனைத்தும் சிறந்த மருந்துப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பித்த வாந்தி, ஜீரணக் குறைவு, வாய்வுப் பிடிப்பு, மலச்சிக்கல், வயிற்றுவலி, போன்றவற்றிற்கு நிவாரணமாக விளங்குகிறது. எலுமிச்சை இலைகளைக் கொண்டு துவையலும் செய்கின்றார்கள். எலுமிச்சை இலையை அரைத்துப் பற்றுப்போட்டால் மூட்டுவலி, கெண்டைக்கால் வலி, தலைவலி போன்றவை குணம்பெறும்.

எலுமிச்சைச் செடியின் பூ
எலுமிச்சம் பூவை மைபோல் அரைத்து சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிடுவதன் மூலம் ஈறு நோய்கள், பல்வலி குணம் பெறும்.

எலுமிச்சம் பிஞ்சு
விதை முற்றாத எலுமிச்சம் பிஞ்சு மலச்சிக்கல், பித்தம், இரத்த மூலத்தைக் குணப்படுத்துகின்றது.

எலுமிச்சங்காய்
எலுமிச்சங்காயை ஊறுகாய் செய்து உணவோடு சாப்பிடுவதன் மூலம் பித்தம் போகும். அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள், பல்வலி குணமாகும்.

எலுமிச்சம் பழம்
ஆஸ்துமா, வாதநோயாளிகளுக்கு இவை ஒத்துவராது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இரத்தப்போக்கு, புண்களை ஆற்றவும் பயன்படுகின்றது. இந்தப் பழத்தின் தோலிலிருந்து எடுக்கப் படுகின்ற எண்ணெய் சிறந்த வாசனைத் தைலமாகப் பயன்படுகின்றது. இவை மிட்டாய் வகைகள், பிஸ்கட்டுகள், கேக்குகுள், சர்பத், சோப்புகள், தைலங்கள், மருந்துப்பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றது.

எலுமிச்சம் பழச்சாறு வாய் துர்நாற்றம், வயிற்றுப் பொருமல், வயிற்று உப்புசம், வாயுக் கோளாறுகள், மலம் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகுதல், இரத்த பேதி, வாந்தி, பித்தம், அஜீரணம், இரத்த ஒழுக்கு, பசியின்மை, தாகம், மலச்சிக்கல், புளிச்ச ஏப்பம், பித்த ஏப்பம், உடல் வறட்சி, குடல் புண், வாய்க் கசப்பு போன்றவைகளைக் குணப்படுத்துகிறது.

காலரா தாக்கும் இடங்களில் இருக்க நேரிடும் போது, இரண்டு எலுமிச்சம் பழங்களைச் சாறு பிழிந்து குடித்து விடுவதால் காலரா நோய் நம்மைத் தாக்காது. ஒரு வேளை காலரா நோயின் தாக்கம் தெரிந்தால் சிறுவெங்காயம் ஒன்றின் சாற்றையும், எலுமிச்சம் பழச்சாற்றின் சம அளவில் கலந்து குடிக்கச் செய்வதன் மூலம் வாந்தி பேதி நின்று உடல் குணப்படும்.

மேலும் எலுமிச்சம் பழச்சாறு குடல் புழுக்கள், மலச்சிக்கல், வாய்ப்புண், சீதபேதி, பித்த வாந்தி, குமட்டல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல், மூலக்கடுப்பு, சாப்பிட்டதும் ஏற்படும் வயிற்றுவலி, இரத்த மூலம், பல் ஆடுதல், வாய் துர்நாற்றம், இருமல் போன்ற குறைபாடுகளைப் போக்கி குணப்படுகின்றது.

இருதயம், இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் தொடர்பான பல நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

கல்லீரல் மற்றும் பித்தநீர் தொடர்பான நோய்களுக்கும், மஞ்சள் காமாலைக்கும் இவை மிகவும் பயன்படுகின்றது.

ஆல மரத்தின் விழுதை அறுத்து எடுத்து, அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மாவாக்கி, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றினைக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின்னர் தலைக்குக் குளித்தால் தலைமுடி நன்றாக வளரும்.

தலையில் தோன்றும் சொறி, புண், பொடுகுத் தொல்லைகளையும் எலுமிச்சம் பழம் போக்கி குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து அதைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைப்பேன்கள் அகலும். ஆறாத புண்களை ஆற்றவும், கட்டிகளை உடைக்கவும் எலுமிச்சம் பழத்தை நல்ல முறையில் பயன்படுத்தலாம். உடலில் எந்தப் பகுதியிலாவது கட்டிகள் உருவாகியிருந்தால் அதனைப் பழுக்க வைத்து சீழை வெளியேற்றிப் புண்களை ஆற்றுகிறது.

அடிப்பட்ட வீக்கங்களையும், கரப்பான் நோய்களையும், முகத்தில் உருவாகும் புண்களையும் இவை போக்கி குணப்படுத்துகிறது. எலுமிச்சம் பழத்தோலிலிருந்து தூள் தயாரித்து அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வ்நதாலும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். டிப்தீரியா, டைபாய்டு கிருமிகள் எலுமிச்சம் பழத்தில் இறந்துவிடுகின்றன. ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்துகிறது. இன்ஃபுளுவென்ஸா, நிமோனியா போன்ற நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.

விஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு இருக்கின்றது. தேள் கொட்டிய இடத்தின் மேல் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை வைத்து நன்றாக அழுத்தித் தேய்த்தால் விஷம் போய்விடும்.

தோல் வறட்சியைப் போக்கி சருமம் மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகின்றது. பற்களுக்கு பலத்தை அளிக்கிறது. கண் நோய்களைப் போக்கும் சக்தியும் இதற்கு உள்ளது. தூக்கமின்மையைக் குணப்படுத்துகிறது.

நகச்சுற்றுக்கு எலுமிச்சம் பழத்தை விரலில் செருகி வைக்க அவை பழுத்து உடையும். எலுமிச்சம் பழச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, பின் காய வைத்து, தேவையான போது, சுவைத்து வந்தால் பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப் போக்கு ஆகியவை போய்விடும்.

பிற செய்திகள்

பொதுவாக, எலுமிச்சம் பழம் சமவெளிப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரமாக உள்ள பிரதேசங்களிலும் வளர்கின்றது. நவம்பர்-டிசம்பர், டிசம்பர்-மார்ச், ஜுன்-செப்டம்பர் மாதங்களில் எலுமிச்சைச் செடி அதிகளவிலான காய்களைத் தருகின்றன.

எலுமிச்சம் பழம் ஆஜீரணத்தால் உண்டாகும் வாந்தியையும், கர்ப்பமுற்ற நிலையில் ஏற்படும் வாந்தியையும் தடுத்து நிறுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் காலை, மாலை வேளைகளில் எலுமிச்சம் பழரசத்தைத் தண்ணீரில் கலந்து, ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்துக் கலக்கி அருந்தி வந்தால் எளிதான சுகப் பிரசவம் உண்டாகும்.

ஆயுர்வேதம்
எலுமிச்சம் பழச்சாற்றில் ஜீரணம் செய்யும் தன்மையும் நச்சு நீக்கும் தன்மையும் மிகுந்து காணப்படுகின்றது. இருமல், ஆஸ்துமா, மூக்கில் நீர் வழிதல், மலச்சிக்கல், குடல் ஏற்றம், கக்குவான் இருமல் போன்றவைகளைக் குணப்படுத்த உதவுவதாக ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

படை, வயிற்றுக்கோளாறுகளுக்கும் இவை பலன் தருவதாகவும் பல நூல்களிலும் கூறப்படுகிறது.

யுனானி மருத்துவம்
சாராயம் குடித்தபின், எலுமிச்சம்பழச் சாற்றைக் குடித்தால் மதுவின் போதை நம்மை அடைவதில்லை. எலுமிச்சம்பழத்தை முகர்ந்தால், அவை ஜலதோஷத்தைப் போக்கிவிடுகிறது என்ற யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதயம், பித்தம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீர்ப் பிரச்சினைகள், ஞாபக மறதிகள், தோல் தொல்லைகள் போன்ற பல விதமான நோய்களுக்கும் இவை மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுவதாகவும் யுனானி நூல்களில் காணப்படுகின்றது.

இதிலிருந்து தயாரிக்கப்படுகின்ற ‘சிகஞ்சபீன் லெமுனி’ என்ற யுனானி மருந்து அஜீரணம், கல்லீரல் நோய்கள், மூக்கடைப்புகளுக்கு மருந்தாக விளங்குகின்றது.

இது போலவே ஷர்பத்-தே-மதனி என்ற மருந்தும் இந்தப் பழத்தில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றது. எலுமிச்சம் பழச்சாறு மனதிற்கு சாந்தம் அளிக்கின்றது. கிருமிகளைச் சாகடிக்கிறது. அசுத்த திரவங்களை வெளியேற்றுகிறது. வயிற்றுச் சூட்டையும், பித்தத்தையும் தணிக்கின்றது. விஷத்தை முறிக்கின்றது.

இதன் விதைகள் இதயத்திற்கு இன்பம் தருகின்றது. உடலுக்குச் சுத்தத்தையும், நறுமணத்தையும் அளிக்கின்றன என்றும் அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்
எலுமிச்சம்பழத்தில் லிமோனீன் என்ற பொருள் அதிகமான அளவில் காணப்படுகின்றது. சிட்ரோநெல்லால், நோனானால், டெக்கானால், டோடிகானால், லினானைல் அசிட்டேட், மீத்தைல் அந்த்ராநிலேட், லிபோஃபிலிக், ஃபிளேவினாய்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
திருமாகறல் திருக்கோயில் தலவிருட்சமாக எலுமிச்சை வணங்கப்படுகிறது.

1. திரு அன்னிபூர் (பொன்னூர்) ஆபச்சகாயேஸ்வரர் ஆலயம்.

2. திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர், மாகறல் ஈஸ்வரர் ஆலயம்.

திருஅன்னியூர் (PIN CODE - 609 203) என்னும் ஊர் நீடுரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் மேற்கே உள்ளது. இவ்வூர் பொன்னூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு ஆபச்சகாயேஸ்வரர் பெரிய நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் எலுமிச்சை மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் எலுமிச்சை மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருமாகறல் (PINCODE - 631 603) என்னும் ஊர் காஞ்சிபுரம் வழி உத்திர மேரூர்..
[3:54:16 AM] Ganasekar: திருமாகறல் (PINCODE - 631 603) என்னும் ஊர் காஞ்சிபுரம் வழி உத்திர மேரூர் ஓரிகை சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு அடைக்கலங் காத்தநாதர், மாகரல் ஈஸ்வரர், திரிபுவன நாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் எலுமிச்சை செடியாகும்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply