» World’s worst lovers! .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Wednesday, 30 Sep 2009

World’s worst lovers!

நாற்றம் பிடித்த நாசக்காரர்கள் யார்?

லகின் மோசமான காதலன்கள் என்ற பெயரை ஜெர்மனி ஆண்கள் எடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் பெண்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் காதலில் கலக்குபவர்கள் யார்?, படுக்கையில் படுத்துபவர்கள் யார்? என்றெல்லாம் பலான பலான கேள்விகள் கேட்கப்பட்டன. பதிலுக்கான காரணமும் கேட்கப்பட்டது.

அந்த சர்வேயில்தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்களை ‘நாற்றம் பிடிச்ச நாசக்காரர்கள்’ என பெண்மணிகள் முத்திரை குத்தியிருக்கிறார்கள். காதல் செய்ய (இது படுக்கை காதல்), ஜெர்மனி ஆண்கள் பக்கத்தில் வரும்போதே கூவத்தில் புரண்டுவிட்டு வந்தார்களோ என எண்ணத் தோன்றுகிறதாம். அந்தளவுக்கு வாசம் மிக்கவர்களாக ஜெர்மனி ஆண்கள் திகழ்கிறார்களாம். அவர்களுக்கு அடுத்த இடத்தை பிரிட்டன் ஆண்கள் பிடித்திருக்கிறார்கள். நாற்றம் எல்லாம் இல்லையென்றாலும், ‘அந்த’ விஷயத்தில் ‘பக்’கென பற்றிக்கொள்ளாமல், ‘ஆறினக் கஞ்சி பழம் கஞ்சி’ என்பது போல் படுசோம்பேறிகளாக இருக்கிறார்கள் இவர்கள் என்று குறை சொல்லியிருக்கிறார்கள் பெண்கள்.

அதற்கடுத்த மோசமான காதலன்கள் பட்டியலில் சுவீடன் (பட்டென தீர்ந்து போகிறார்களாம்), ஹாலந்து (அடக்கியாள்கிறவர்கள்), வேல்ஸ் (சுயநலக்காரர்கள்), ஸ்காட்லாந்து (முனகல் மட்டுமே கேட்கவேண்டிய இடத்தில் அதிக சத்தம் வருகிறதாம்) நாட்டு ஆண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அதேசமயம் சிறந்த காதலன்களாக ஸ்பானீஸ், பிரேசில் நாட்டு ஆண்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பெண்கள்.

Most Commented Posts


Leave a Reply