விஜய்யின் அரசியல் விஜயம்!
இந்த இதழ் அச்சாகும் நேரம், நடிகர் விஜய் என்ன முடிவு எடுப்பாரோ தெரியாது. ராகுல்காந்தியை விஜய் சந்தித்ததும், ராகுல்காந்தியின் அரசியல் அழைப்பும் விஜய்க்கு அரசியலில் இருக்கும் ஈடுபாட்டை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. ஆனால் என்ன காரணத்திற்காக விஜய் தன் முடிவைத் தாமதப்படுத்தினார் என்பது தெரியவில்லை. நல்ல நாள் பார்க்கிறாரா? அல்லது தம் அரசியல் விருப்பத்தை வெளியிட்டு தம் ரசிகர்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்று நாடிபிடித்துப் பார்க்கிறாரா? நெருங்கிய வட்டாரம் மற்றும் ஊடகங்கள் எப்படி பிரதிபலிக்கின்றன என்று அறிய ஆசைப்படுகிறாரா?
இவைதாம் காரணங்கள் என்றாலும் இவை அல்லாத காரணங்கள் என்றாலும் விஜய்யின் இந்த நிதானம் வரவேற்கப்படவேண்டியதுதான்.
விஜய்யின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு விஜய்யின் இன்றைய நிலைப்பாடு ஒன்றும் வியப்பானது அல்ல.
காரணம் சமீபகாலமாகவே தம் அரசியல் பிரவேசம் பற்றிப் பலவிதமான சந்தர்ப்பங்களில் கோடு காட்டி வந்துள்ளார் விஜய்.
இந்த வகையில் எப்போது, எப்போது என்றுதான் பலருக்கும் உணர்வு இருந்திருக்க முடியுமே தவிர அட.. அப்படியா! என்பது இல்லவே இல்லை.
அரசியல் ஒரு சாக்கடை என்று எவரோ ஒரு மேதாவி சொல்லி வைத்தார். இதைப் பல அரசியல்வாதிகளே மறுக்கத் தயாரில்லை. ஆனால் மறுக்கத் திராணியற்றவர்களாகவும் ஆகிப் போனார்கள்.
ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய அவல நிலையைத் தமிழகம் உருவாக்கி அதை இந்தியாவிற்கும் வழிகாட்டிவிட்டது. இதற்கு அரசியல்வாதிகள் எவரும் கைக்காசைச் செலவழிப்பதில்லை. அரசியலில் இருந்தே இந்தக் காசை அவர்கள் பெறுகிறார்கள்.
அப்படியானால் நேர்மை என்பது சாத்தியம் இல்லாமல் போகிற நிர்ப்பந்தம் அரசியலில் ஏற்பட்டுவிட்டது என்பது தெள்ளத் தெளிவு.
விஜய் நல்லவர். ஆனால் அரசியலுக்குப் பொருத்தமானவரா என்பது கேள்வி. அநீதிகளை அழித்து வில்லன்களைச் சாய்த்து வெற்றியைக் கரம்பிடிப்பது திரையுலக ஃபார்முலா! அரசியலிலும் இப்படிச் சாதித்து விடமுடியும் என்று நினைத்து விட்டாரா விஜய். அரசியலில் நல்லவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இடம் இல்லை என்பதை மதுரையில் மக்கள் சமூகக் காவலர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை டெபாசிட் கூட பெற முடியாமல் செய்ய வைத்ததன்மூலம் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார்கள்.
திரையுலகப் புகழ் வேறு. அரசியலில் வெற்றி என்பது வேறு. இதை, அருமையாகப் பயன்படுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அதற்குப் பிறகு வந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு உயரங்களைத் தொட முடிந்திருக்கிறதே தவிர பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. விஜயகாந்தையும் சேர்த்தே சொல்லுகிறேன்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்கிற இருதலைமுறைகளுக்குப் பிறகு விஜய் சொல்லிக் கொள்ளும்படியாக திரையுலகில் தாக்குப்பிடித்து வளர்ந்து வருகிறார்.
ஆனால் இவரால் அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்று இப்போதைக்குப் படவில்லை. அதே நேரத்தில் தரையில் படர்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸிற்கு நல்லதொரு புளியங்கொம்பு கிடைத்திருப்பதாகத்தான் இப்போதைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?
2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!
2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?
2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!
2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!
2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!
2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!
2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!
2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!
2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!
2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!
2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
Most Commented Posts
































September 26th, 2009 at 12:37 pm
Very good essay. Especially following line “அரசியலில் நல்லவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இடம் இல்லை என்பதை மதுரையில் மக்கள் சமூகக் காவலர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை டெபாசிட் கூட பெற முடியாமல் செய்ய வைத்ததன்மூலம் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார்கள்”. Tamilnadu politics wouldn’t have got any better leader than him, people ruined a good oppurtunity
October 2nd, 2009 at 12:12 am
திரையுலகப் புகழ் வேறு. அரசியலில் வெற்றி என்பது வேறு. இதை, அருமையாகப் பயன்படுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அதற்குப் பிறகு வந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு உயரங்களைத் தொட முடிந்திருக்கிறதே தவிர பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. விஜயகாந்தையும் சேர்த்தே சொல்லுகிறேன்