இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
“வாருங்கள் மேலும் சற்று உணவு எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்” கெய்சர் ஓட்டலில் கொலோசியம் உணவகத்தில் புபே உணவைத் தொடர்வதற்காக என்னை இப்படி அழைத்தவர் ரெண்டிவிட்டுலர்.
மீதமுள்ள வயிற்றின் வெற்றிடத்தைக் கனமான உணவுகளால் நிரப்புவதில்லை என்கிற முடிவுடன் எழுந்தேன். பழங்கள் உள்ள பகுதிக்குச் சென்றேன்.
அவரும் ஏதோ எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தார்.
“எனக்கு இன்று கடுமையான வேலைகள் இருக்கின்றன. நான் சீக்கிரமே புறப்படுகிறேன்.”
“எங்கே தங்கியிருக்கிறீர்கள்?”
“எனக்குப் பக்கத்தில்தான் வீடு. வீட்டினர் ஊரில் இல்லை. சாப்பிட மட்டும் வந்தேன். நீங்கள் சொன்ன செய்தி கண் திறப்பதுபோல் இருந்தது.”
“அப்படியா? மகிழ்ச்சி.”
“ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.”
“நன்றி.”
“அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். எனக்கு வேறு ஏதும் உபயோகமாகச் சொல்லுங்கள்.”
சற்று யோசித்தவர் “ஆங்! நினைவிற்கு வந்துவிட்டது. லில்லி என்கிற அற்புதமான பெண்மணியை அறிமுகப்படுத்துகிறேன்.”
“லில்லி?”
“ஆமாம். இந்த ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்.”
‘சமூக சேவகி.”
“என்ன மாதிரியான சேவை?”
“எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் எப்படி?”
“உடையவர் உரியவர் சொல்லுவார்.”
“சரி, எப்படிச் சந்திப்பது?”
“நான் ஏற்பாடு செய்கிறேன்.” விரைந்து சாப்பிட்டு, தாளில் கைதுடைத்து, “வாருங்கள் போகலாம். உங்கள் உடைமைகளை எடுத்து வந்துவிடுங்கள்.”
“சரி”
வரவேற்பறைக்குப் போனோம். அங்குள்ள தொலைபேசியை எடுத்தார். ஏதோ இந்தோனேசிய மொழியில் பேசினார். “வருகிறார்கள்” என்றார்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வந்தார். நரைமுடி இருக்க, சற்றே ஆணின் தோற்றம் லில்லிக்கு. என்னை அறிமுகப்படுத்தினார்.
“இவர் பெயர் லேனா தமிழ்வாணன். பத்திரிகையாளர். இந்தியாவிலிருந்து வருகிறார்.”
“மகிழ்ச்சி” என்றபடி கைகுலுக்கினார் லில்லி.
“நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் புறப்படுகிறேன்” என்றார் ரெண்டி. விடை கொடுத்தோம்.
“லில்லி மேடம். நான் இந்நாட்டிற்குப் புதியவன். நீங்கள்தாம் உங்களைப் பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.”
சற்றே புன்னகைத்த அவர்,
“என் பெயர் லில்லி. சமூக சேவகி. 2005இல் நிலநடுக்கத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.”
“தனி மனுஷியாகவா?”
புன்னகைதான் பதிலாக வந்தது. ஆமாம் என்று பொருள்.
“உங்கள் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். அதில் தன்னடக்கம் வேண்டாம்.”
இதற்கு நன்றாகவே சிரித்தார்.
“எங்கள் நாட்டின் சுமத்ரா பகுதியில் லாமெர் என்பது ஒரு களேபர பூமி. இங்கே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு பள்ளியையுயம் அதைச் சுற்றி 200 வீடுகளையும் உருவாக்கியிருக்கிறேன்.”
“அடேயப்பா! பெரிய விஷயம்.”
“2005இல் இந்தப் பகுதி இயற்கையின் சீற்றத்தால் ஒன்றுமே இல்லாத களர் நிலமாக ஆக்கப்பட்டுவிட்டது. இப்படி எத்தனையோ கிராமங்கள் தரைமட்டமாகிப் போயின. எனவே என் சாதனை பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. மற்ற கிராமங்களையும் சீரமைக்கப் புறப்பட்டிருக்கிறேன். அரசின் அனுமதி எதிர்பார்த்த அளவிற்குக் கிடைக்கவில்லை.”
“நான்கு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதே! இன்னுமா தீர்வு கிடைக்கவில்லை?”
“அதையேன் கேட்கிறீர்கள்? இதற்கு மேல் நான் உங்களிடம் விவாதிப்பது எனக்கு நல்லதல்ல.”
முழுப்பெயர் லில்லி கோசம் 56 வயது ஆகிறது. பாட்டிகூட ஆகிவிட்டார். ஆனால் குடும்ப அக்கறையைவிடத் துன்பப்படும் ஏழைக் கிராம மக்கள் மீது அக்கறை அதிகம். 36 சதுர மீட்டர் கொண்ட மரத்தால் ஆன வீடு. (கான்கிரீட்டில் கட்டப் பணம் கிடைக்கவில்லையாம்.) இந்த 200 வீடுகளில் முதல் முன்னுரிமை மீனவர்களுக்காம். பிறகு, துறைமுகத் தொழிலாளர்களுக்காம். மீதமிருந்தால் பிறருக்காம்.
நெதர்லாந்தின் செஞ்சிலுவைச் சங்கம்தான் அதிகபட்சமாக மூன்று இலட்சம் அமெரிக்க டாலர்களைத் தந்ததாம். பிற தொகைகளைக் குருவி தானியம் சேர்க்கிற மாதிரி அங்கும் இங்குமாகச் சேர்த்திருக்கிறார். 104 டாலர்கள் கொடுத்தால் பத்து லட்சம் இந்தோனேசிய ரூபாய் கிடைக்கும். பொறுமை இருந்தால் கணக்கிட்டுக் கொளுங்களேன்.
லில்லியின் கவலையெல்லாம் உதவி செய்ய முன்வருகிற சில அமைப்புகளின் உள்நோக்கம் மிகத் தவறாக இருக்கிறதாம். முதல் நோக்கம் பலன் பெறுகிறவர்கள் மதம் மாறவேண்டும் என்பதாம்.
இதைச் சொல்லியபோது லில்லியின் குரல் சற்றே பதறி நடுங்கியதை என்னால் உணர முடிந்தது.
அந்தமான் தொடரில் அந்தமான் மக்களை அவர்களது துணிவிற்காகப் பாராட்டியிருக்கிறேன். கணக்கற்ற நிலநடுக்கங்களைச் சந்தித்துக்கொண்டு அந்தமானைக் காலி செய்துவிட்டு வந்துவிடாமல் அங்கேயே தொடர்கிறார்களே, அதற்காக.
இந்தோனேசிய மக்களை இன்னும் ஒரு படி மேலே சொல்வேன். ஆசியாவில் நிலநடுக்கங்களின் தாயகமே இந்தோனேசியாதான். வாழ்க்கையை ஓட்டுவதற்கே சிரமப்படும் இவர்கள் இயற்கை இழைக்கும் கொடுமைகளையும் துணிவுடன் சந்தித்தும் சகித்தும் கொள்கிறார்கள். லில்லியின் உலக ஞானம் அபாரம். “தமிழர்கள் சிலர் எங்களது வடமேற்கு மாநிலங்களில், தென்கிழக்கு மாநிலங்களில் (பிராவின்ஸ் என்கிறார்கள் இதை) வெகுகாலங்களுக்கு முன்பு குடியேறியவர்கள் இருக்கிறார்கள். வந்து பார்க்கிறீர்களா? தங்களது அடையாளங்களையெல்லாம் தொலைத்து விட்டுக் கிட்டத்தட்ட எங்களவர்களாகவே மாறிவிட்டார்கள்.”
“இந்தோனேசியாவில் தமிழை மறந்த தமிழர்களா? ஆச்சரியமாக இருக்கிறதே!”
“உண்மை. தமிழகத்திலிருந்த சோழர்கள் படையெடுத்து வந்து ஜாவா, சுமத்ராவை வென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுள் பலர் இந்தோனேசியாவிலேயே தலைமுறை தலைமுறையாகத் தங்கிவிட்டார்கள். இன்னும் சிலர் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் பகுதிகளுக்கு மரக்கலங்கள் வழியே சென்றபோது காற்றின் சுழற்சி வலுவான கடல் நீரோட்டங்கள் ஆகியவற்றால் இந்தோனேசியக் கடற்கரைகளில் ஒதுங்கினார்கள். பிறகு புறப்பட மனம் இன்றியோ, வேறு வழியின்றியோ இந்தோனேசியாவில் தங்கிவிட்டார்கள்.”
“சுவையாகவும் வியப்பாகவும் இருக்கின்றன நீங்கள் சொல்பவை.”
“உண்மை. ‘இந்தோ’ என்கிற வார்த்தையே உங்களிடமிருந்து நாங்கள் பெற்றவைதானே? எங்கள் நாட்டில் கிராமங்களில்கூட இராமாயணக் கதைகள் உலவக் காரணம், இன்னமும் நடித்துக் காட்டப்படக் காரணம் உங்களவர்கள் வருகை தாம். எங்கள் பகுதிகளில் உள்ளவர்களின் பெயர்கள்கூட உண்டு. உதாரணமாக இப்போது தேசிய வளர்ச்சி மட்டும் திட்ட அமைச்சராக இருக்கும் பெண்மணியின் பெயர் இந்திரவாதி. இவருக்கு எப்படிப் பெயர் வந்தது என்று விசாரித்துப் பாருங்கள். ஏதோ ஒரு வகையில் இந்தியத் தொடர்பு உள்ளவராகவே இருப்பார்.”
ரெண்டியுடனான சந்திப்பு லில்லியின் அறிமுகம் ஆகிய இரண்டும் என் பயணத்தை அர்த்தமுள்ள பயணமாக ஆக்கிகக்கொண்டிருப்பதை என்னால உணர முடிந்தது.
“உங்களுக்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மீது மட்டும்தான் கவனமா? வேறு ஏதும் கவனங்கள் உண்டா?”
“இந்தோனேசியாவில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பல. உதாரணமாக பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகளுக்கு 4,60,000 ரூபாய் சம்பளமாகக் கொடுக்கிறோம். இங்கு இது போதாது. இது மட்டுமல்ல, இந்தச் சம்பளத்தை மாதாமாதம் கொடுப்பது இல்லை.”
“பின்னே?”
“மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் சம்பளம்.”
“ஐயோ! எப்படிச் சமாளிக்கிறார்கள்?”
எங்கே சமாளிப்பது? இதனால் பல ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலையை உதறிக் கொண்டிருக்கிறார்கள்.
அடப்பாவமே!
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































