Friday, 25 Sep 2009
இயற்கை அதிசயங்கள்

உலக அதிசயங்கள் மனிதன் உண்டாக்கியவை. இயற்கையே ஒர் அதிசயம் தான் என்றாலும் அது உருவாக்கும் அதிசயங்களை வர்ணிக்க நம்மிடம் வார்த்தைகள் இல்லை.
முதல் படத்தில் இருப்பது அரோரா போரியாலிஸ் எனும் வானம் மின்னும் அதிசயம். சூரியனில் இருந்து சில நேரம் வெளிப்படும் மிகவெப்பக் கதிர்கள் 300 முதல் 1200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். சோலார் விண்ட் எனப்படும்அவை பூமியின் காந்த மண்டலத்தை கடக்கையில் நமக்கான வானத்தில் 60 முதல் 600 கிலோ மீட்டர் உயரத்தில், வானத்தில் சில பகுதி வண்ணமயமாக மின்னும். அதுதான் இது.

மம்மடஸ் மேகங்கள் அல்லது பம்பி மேகங்கள் என்றழைக்கப்படும் இது மிகவும் அரிதான ஒன்று. வரப்போகிற மிக பயங்கர சூறாவளி அல்லது பெரும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் அறிகுறியாக இதுபோன்ற வீங்கிப்போன மேகங்கள் வானத்தில் தோன்றுகின்றன.

சிவப்பு அலைகள்: கடலுக்கு மிக அருகில் செல்லும் சில மேகங்கள் அமிலங்களைக் கொட்டிவிட்டுப் போகும். அந்த அமிலங்களின் விளைவால் கடற்கரை பகுதியில் இந்த மாதிரியான சிவப்பு மற்றும் வண்ண அலைகள் எழும்பும். அவை அந்தப் பகுதியையே ரத்தமயமாக ஆக்கிவிட்டுச் செல்லும். பெரும்பாலான சமயங்களில் ஆபத்தில்லாமால் போனாலும், சிலநேரம் இந்த அமில மழை கடல் ஜீவன்களை அழித்துவிட்டுச் செல்லும்.

பெனிடென்டஸ் எனப்படும் இந்த கூர்கூரான ஐஸ் பாளங்கள் அடர்ந்த பனிப்பிரதேசங்களில் ஏற்படுகிறது. சில சென்டி மீட்டரிலிருந்து 5 மீட்டர் உயரம் வரை எழும்பும் இந்த இயற்கை வித்தைக்கு சூரியக்கதிர்களும் காரணம். சூரியக்கதிர்கள் பாயும் அளவுக்கு இவற்றின் வடிவம் கரைக்கப்பட்டு இப்படி வித்தியாசமான தோற்றத்திற்கு ஐஸ் பாளங்கள் உருவாகின்றன.

நகரும் கற்கள்: டெத் பள்ளத்தாக்கின் பாலைவனப் பகுதியில்தான் இந்த நகரும் கற்கள் உள்ளன. அறிவியல் புதிராக விளங்கும் இந்த நகரும் கற்கள் பல ஆயிரம் கிலோ எடை கொண்டவை. இவை தன்னுடைய இடத்தைவிட்டு 100 அடி தூரத்தை தாண்டியும் நகருகின்றன. கற்கள் நகர அங்கே வீசும் காற்றும், அப்பகுதியின் அமைந்துள்ள பனியின் தாக்கமும் தான் காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்னறனர். இந்த கற்கள் எந்த திசையில், எவ்வளவு வேகத்தில், எவ்வளவு தூரம் நகரும் என்பது யாராலும் கணிக்கமுடியாத இன்னொரு அதிசயம்.

சுழன்றடிக்கும் சூறாவளி மிக அடர்த்தியாக நீண்ட நேரம் சுழன்றடிக்கும்போது ஏற்படுவது சூப்பர்செல்ஸ் என்கிற வடிவம். இவை சிலநேரம் கீழேயும் மேலேயும் வேவ்வேறு வடிவத்தில் உருவாவதை என்னவென்பது?

நெருப்புச் சுழல்: காடுகள் பற்றியெரியும் போது அங்கே சுழலும் காற்றும் நுழைந்தால்…காற்று பின்னும் பின்னலுக்கெல்லாம் நெருப்பும் டான்ஸ் ஆடும். அதுவே Fire Whirls. காற்றின் வேகத்திற்கு ஏற்ப இவை 10அடி அகலத்தில் நகர்ந்தபடியே 30 அடி முதல் 200அடி உயரம் வரை எழும்பும்.

ஐஸ் வட்டங்கள்: ஐஸை தவிர வேறு எதுவும் காணமுடியாத பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் இந்த ஐஸ் வட்டங்கள் தோன்றுகின்றன. நீரோடைகளின் கரைகளில் தோன்றாமல் மத்தியில் தோன்றும் ஐஸினால் இம்மாதிரி வட்டங்கள் தோன்றுகிறது. நீரோடையின் ஓட்டமும் இவை உருவாக உதவுகிறதாம். சிலநேரம் 500அடி விட்டம் கொண்ட ஐஸ்வட்டங்கள் கூட உருவாகுமாம் இந்த ஐஸ் வட்டங்கள் சுற்றுவதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஹம்ஸ் எனப்படும் நுண்ணிய சப்தம்: இயற்கையின் வினோதத்தில் காணப்படும் அரிய அதிசயம் இயற்கை எழுப்பும் ஹம்ஸ் எனப்படும் நுண்ணிய சப்தம். இந்த சப்தத்தை எந்த கருவியிலும் ஒலிப்பதவி செய்ய இயலாது. இது டாவோஸ் ஹம் என்றும் அழைக்கப்டுகின்றன. காரணம், மெக்சிகோவில் உள்ள டாவோஸ் நகரில் இந்த நுண்ணிய சப்தங்கள் அவ்வப்போது எழுந்து அடஙகுகின்றவாம்.

































September 26th, 2009 at 12:14 am
ஒவ்வொரு படங்களும் அருமை .இயற்கையின் விந்தை நம்மை வியக்க வைக்கின்றது.இன்னும் காண முடியாத இயற்கை அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.பகிரவுக்கு நன்றி.
July 2nd, 2011 at 4:53 am
தங்களின் பகிர்வுக்கு நன்றி. மேலும் தொடரவும்.
September 20th, 2011 at 9:06 am
Thank You For Your Valuable information in Tamil, i like your side thank you bye good night.
September 20th, 2011 at 9:08 am
Thank you for your valuable Informations and images in Tamil Language i Like Your Side Thank You Bye Good Night.