Friday, 25 Sep 2009
மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
சிறுநீர் பிரச்சனைகளை தவிர்க்க
அருகம்புல் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். நீண்ட நாள் உயிர் வாழ ஏற்றது. ஒரு பிடி அருகம்புல்லை எடுத்து சுத்தம் செய்து கொஞ்சம் நீரிலிட்டு காய்ச்சி இந்நீருடன் சோயா பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
இந்நீரை காபி அல்லது தேனீரில் கூட கலந்து சாப்பிடலாம். இதனால் சிறுநீர் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். சிறுநீர்ப்பையும் உறுதிப்படும். சில நேரங்களில் சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத எரிச்சலும் வலியும் இருக்கும். இதற்கு சிறிது விளாம்பழத்தினை நீரில் கரைத்து உள்ளுக்கு அருந்தினால் எரிச்சலும் வலியும் நீங்கும்.
இரத்த சோகை குணமடைய
கொய்யாப்பழம் எல்லா காலத்திலும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் அதை அன்றாடம் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமடையும்.
விருந்தோம்பல்
சில சமயங்களில் நமது உடலை பாதிக்கும் வகையில் நம்மையும் அறியாமல், பலதரப்பட்ட ஐயிட்டங்களின் ருசியின் தாக்கத்தில் உந்தப்பட்டு, நமக்கு அஜீரணம் அளிக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு அவஸ்தைப்பட நேரிடலாம். எனவே உணவு கட்டுப்பாட்டு விடயத்தில் மிகவும் கவனம் தேவை என்பதை முன்கூட்டியே எச்சரிக்கின்றேன்.
வயிற்று வலி
உஷ்ணத்தினால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் சில சமயங்களில் உபாதைகள் ஏற்படுவது என்பது ஒரு சிலருக்கு இயல்பானதே. இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டாம். தனியா 100 கிராம், மிளகாய் 5 கிராம், மிளகு 3 கிராம், துவரம் பருப்பு 50 கிராம், பெருங்காயம் 5 கிராம், உப்பு வேண்டிய அளவு இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய் சேர்த்தோ அல்லது இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.
இதனால் உஷ்ண சம்பந்தமான வயிற்றுக் கோளாறு நீங்கும். மூலச்சூட்டினால் அவதியுறுவோர் மாங்கொட்டையை உடைத்து அதனுள்ளிருக்கும் பருப்பை அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
வயிறு உப்புசம் நீங்க சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து தெளிய வைத்து பின் அந்நீரை அருந்தலாம்.
அதுபோலவே வயிற்றுக் கடுப்பு நீங்க வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் போதும்.
சிலருக்கு வயிற்றில் பூச்சிகள் இருப்பதனால் சரிவர பசிக்காது. இதற்கு அன்னாசிப் பழம் நல்ல மருந்தாகும். அன்னாசி பழச்சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளை கொல்லும் ஆற்றல் உள்ளது. அதுபோன்றே மாங்கொட்டை பருப்பும் பூச்சிகளை ஒழிக்க, உலர்த்திக் தூள் செய்து சிறிது தேனில் குழைத்து சாப்பிட பூச்சித் தொல்லை ஒழியும். மேலும் பித்தத்தினால் ஏற்படும் தொல்லையை நீக்க இஞ்சி சாற்றில் கொஞ்சம் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் பெறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தேசிக்காய்ச் சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றுளைச்சலுக்கு சூடான பாலில் தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து பால் முறிந்த பின் தெளிந்துவரும் நீரைப் பருகினால் போதும்… உளைச்சல் கட்டுப்படும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் பல சிக்கல் என்பது ஆன்றோர் மொழி. பொதுவாகவே இரவில் நிம்மதியான தூக்கம், காலையில் மலம், சிறுநீர் கழித்தல் ஆகியவை சீராய் இருந்தாலே போதும் உடல் பாதிப்பு ஏற்படுவது என்பது அவ்வளவாக இருக்காது. நீடித்த மலச்சிக்கல் அவதிப்படுவோர் தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து மூன்று பச்சை மிளகாயை நறுக்கிப்போட்டு நன்றாக கலக்கி அரை மணி நேரத்திற்குப் பின்பு சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். பேரீச்சம் பழம்கூட மலச்சிக்கல்களை போக்கும் குணமுள்ளது. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதினால் ஏற்படும் உஷ்ணத்தைத் தணித்துக்கொள்ள சோயா பால் அருந்தினால் போதும்.
தூக்கம் வர
தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதை பலர் வழக்கமாய் கொண்டுள்ளனர். இது மிகவும் கெடுதலானது. இயற்கை வைத்தியமாக வெங்காயத்தை நசுக்கி ஒரு சொட்டு கண்ணில் பிழியலாம். அத்துடன் சீரகத்தை ஒரு மெல்லிய துணியில் முடித்து அடிக்கடி அதன் வாசனையை நுகரலாம். இதனால் இயற்கையாகவே நல்ல தூக்கம் வரும்.
உடல் சூட்டைத் தணிக்க
திராட்சைப்பழம் உடலின் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சியை உண்டாக்குவதோடு, மலச்சிக்கலையும் போக்கும் என்பதால் ‘திராட்சைப் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நன்மை பயக்கும்.
மூல வியாதிக்கு மருந்து
மூல வியாதியினால் அவதியுறுவோர் தேசிக்காய் சாற்றை சோயா பாலில் பிழிந்து கலந்து சாப்பிட்டு வர வலியும் குறையும், இரத்தப்போக்கு இருந்தாலும் குறைந்து குணமாகி விடும்.
(தொடரும்)
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































