» Travel around Indonesia .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 18 Sep 2009

Travel around Indonesia

mount-bromo.jpgஇதயங் கவர்ந்த இந்தோனேசியா!

இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

இந்தோனேசிய ஓட்டுநரைத் தேவையில்லாமல் சீண்டியதற்கு எதிர்மறைப் பலனே கிடைத்தது. அதற்குப்பிறகு அந்த ஓட்டுநர் வாயைத் திறக்கவேண்டுமே! ஊகும்!

நன்றாகப் பேசி இந்தோனேசியாவைப் பற்றிய தகவல்களை நிறையவே பெற்றிருக்கலாம். தவறிழைத்துவிட்டேன்.

மறுநாள் கெய்சர் ஓட்டலில் உள்ள கொலோசியம் உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நான் மட்டுமே அந்த உணவகத்தில் இருப்பதை உணர்ந்தேன்.

இந்தோனேசியா இரவு நெடுநேரம் வரை விழித்திருப்பதால் மெதுவாகத்தான் எழுந்திருக்கிறது.

அந்த உணவு புபே (Buffet) உணவு முறை என்பதால், நான்தான் முதன்முதலில் கரம் வைத்தும், கரண்டி போட்டும் கலைத்தேன் என்பதை நன்கு உணர முடிந்தது.

உணவகத்தில் என் தேவைகளை கவனிக்க ஒரே ஒரு ஊழியர் மட்டும் இருந்தார். என்னை அவர் அடிக்கடி பார்த்துக்கொண்ட விதம், வித்தியாசமானதாக இருந்தது. என் இருக்கையில் ஒரு பெண் மட்டும் இருந்திருந்தால் சண்டைக்குப் போயிருப்பாள். “என்னை ஏன்யா அப்படி முறைச்சு உத்து உத்துப் பார்க்கிறே?” என்றே கேட்டிருப்பார். ஒரு வாடிக்கையாளர், அந்த உணவக ஊழியரைத் தேவை கருதி அழைக்கமாட்டோமா என்ன? ஆளுக்கு ஆள் இப்படிப் பார்ப்பதே நான் சாப்பிடுபவற்றின் மீது ‘கண் வைப்பது’ போல் பார்க்கத்தான் வேண்டுமா?

மற்ற உணவு வகைகள் எல்லாம் தயாராக இருக்கும். முட்டை மட்டும் போட்டுக் கொடுப்பார்கள் என்பதால் அவரை அழைத்து, ‘ஒன் மசாலா ஆம்லேட் - இண்டியன் டைப்!’ என்றேன்.

புரிந்துகொண்டதுபோல் நன்றாகத் தலையாட்டினாலும், என்ன கொண்டு வருவாரோ என்கிற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆம்லேட் வந்தபிறகுதான் தெரிந்தது அவர் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது.

நான் உணவருந்திக் கொண்டிருந்தபோதே ஒருவர் உள்ளே நுழைந்தார். பார்க்க இந்தோனேசியர் போலத் தெரிந்தாலும் மங்கோலிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், ஒருவித வெள்ளைக்காரர் கலப்புத் தெரிந்தது.

ரொம்பத் தெரிந்தவர்போல் ‘ஹலோ’ என்றார் நுழைந்த வேகத்தில். நானும் பதிலுக்கு ஹலோ சொன்னேன். அவ்வளவு பெரிய உணவகத்தில் எல்லா இடங்களிலும் விட்டுவிட்டு ஏனோ அடுத்த மேசையில் வந்து அமர்ந்தார்.

நான் சூடு கண்ட பூனையாக இருந்ததால், யாரைப் பார்த்தாலும் எனக்கு இருதயம் ஏனோ எச்சரிக்கை மணியே அடித்துக் காட்டும் சூழ்நிலையில் இருந்தது.

எழுந்து நடந்துபோய்த் தேவையான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தவர்,

‘யூ ஆர் ஃபிரம் இந்தியா?” என்று ஆரம்பித்தார்.

“ஆமாம்” என்றவனிடம் “சுற்றுலாவா தொழிலா?” என்றார் பதிலுக்கு.

“இரண்டும்தான்” என்றேன்.

“என்னது! இரண்டுமா? நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?”

“பத்திரிகையாளன்!”

“என்னது! பத்திரிகையாளரா!” என்று புருவங்களை உயர்த்தி, கண்களை அகலமாக்கிக் கேட்டவர். தட்டுகள் டம்ளரையெல்லாம் தூக்கிக் கொண்டு என் மேசைக்கு வந்துவிட்டார்.

“நானும் பத்திரிகை நிருபர்தான். என் பெயர் ரெட்டி விட்டுலர்”

“ஓ! நீங்களும் பத்திரிகைத் துறைதானா? மிகவும் மகிழ்ச்சியான சந்திப்பு. உங்களிடமிருந்து இந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.”

“தாராளமாக நான் அறிந்தவரை சொல்கிறேன்.”

“உங்கள் நாட்டில் இன்று என்ன சூடான செய்தி?”

“அதற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். எங்கள் ஊரில் டெலிகாம் துறையில் ஊழல் நடந்துள்ளது. அதைப்பற்றிய விசாரணையில் இருக்கிறேன்.”

“உங்கள் நாட்டிலுமா?”

“ஓ அப்படியா உங்கள் நாட்டிலும் நடந்துள்ளதா?”

அப்படித்தான் எங்கள் நாட்டு எதிர்கட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

“நீங்கள் எந்தப் பத்திரிகை?”

“தி ஜகார்தா டைம்ஸ்”

“அடடே! இதுநாள்வரை ஜாகர்தா என்றல்லவா சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏன் என்னை (உச்சரிப்பை) எவருமே திருத்தவில்லை? ஜாகர்தா என்பது தவறு. ‘ஜகார்தா என்பதே சரி என்பதை ரெண்டி வெட்டுலர் மூலம்தான் தெரிந்துகொண்டேன்!

“எவ்வளவு ரூபாய் சம்பந்தப்பட்ட ஊழல்?”

“சுமார் 250 மில்லியன் இந்தோனேசிய ரூபாய்.”

“ஜுஜுபித் தொகைங்க இது. எங்க நாட்டு ஊழல் ரொம்பப் பெரிசு.”

“பெரிய நாடு பெரிய ஊழல் போலிருக்கிறது.”

“உங்கள் நாட்டு ஊழல் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.”

“நான் பத்திரிகையில் விரிவாக எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள்.”

(நான் சாதாரணமாகக் கேட்கப் போக இந்த மனிதர் மூக்கில் இப்படிக் குத்துவிடுகிறாரே!) “சரி பரவாயில்லை!”

“எங்கள் நாட்டுத் தலைவர் சுசிலோவே விசாரிக்க உத்தரவு போட்டிருக்கிறார்?”

“யாரைக் கொண்டு?”

“பி.டி. டெலிகாம் நிறுவனத்தில் களங்கமற்றவர் என்று பெயர் எடுத்தவர்களைக் கொண்டே.”

“சக ஊழியர்களை மாட்டி விடுவார்களா?”

“நிச்சயமாக! தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆத்திரம் இருக்குமல்லவா இவர்களுக்கு.”

ரெண்டி விட்டுலர் பிடித்த கோணம் பிரமாதம்! உண்மையும் கூட. நிச்சயம் நுணுக்கமாகக் கண்டுபிடிக்க முடியும்.

“எங்கள் ஊரில் உள்ளதுபோல், காவல் துறை, பொருளாதாரக் குற்றப் பிரிவினர் சி.பி.ஐப் போன்றவர்களைக் கொண்டு விசாரிக்கக் கூடாதா?”

“அதெல்லாம் சரிப்பட்டு வராது. விசாரணைக் குழு ‘விசாரணை’ என்ற பெயரால், காலம் கடத்தும் பல செளகரியங்களைச் சம்பவிக்கும். பணம் வாங்கினாலும் வாங்கிவிடும். உடன் பணிபுரிகின்ற குழுவினர் என்றால் அப்படியில்லை. துறை சார்ந்த அறிவு, தவறு செய்த சக பணியாளர்களைச் சீக்கிரமே மாட்டிவிடும் சந்தோஷம், மேலதிகாரிகளின் நெருக்கடி ஆகிய கோணங்களில் சீக்கிரமே உண்மைகளைக் கண்டுபிடித்துவிடும்.”

ரெண்டி புத்திசாலித்தனமாகப் பேசுகிறார். அடேங்கப்பா என்று வியந்தது மனம். பத்திரிகையாளராக இருக்கத் தகுதி வாய்ந்தவர்தான்.

“நீங்கள் அறிந்தவரையில் தவறு நடந்திருக்கிறது என்கிறீர்களா?”

“வாய்ப்பு அதிகம்.”

“நீங்கள் ஏதும் விசாரித்து அறிந்தீர்களா?” ‘எங்க ஏரியா உள்ள வராதே!’ என்பதுபோல் ஒருமுறை பார்த்தவர் ஒன்று மட்டும் சொன்னார்.

“இந்தப் பிரிவில் தங்கள் முதலீடுகளைச் செய்திருப்பவர்களின் நலன்களைக் காப்பவரான ரோச்சிமன் சுகர்ணோவிடம் மட்டுமே பேச முடிந்தது.”

“என்ன சொன்னார்?”

“இலஞ்ச ஊழல் விசாரணை பற்றி எனக்கு ஏதும் தகவல் இல்லை” என்றார்.

“இந்தப் பதிலிலேயே ஒரு கோளாறு இருக்கிறது கவனித்தீர்களா ரெண்டி?”

இருவரும் அரைப் பசியைத் தீர்த்திருந்தோம். தட்டுகள் காய்ந்து கொண்டிருந்தன. எழுந்து மறுபடி போய்த் தட்டுகளை உணவுகளால் நிரப்ப வேண்டும். ஆனாலும், இருவரும் எழுந்திருக்காமல், நேர ஓட்டம் பற்றி அக்கறை கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

“என்ன சொல்லுங்கள்! எனக்கு ஒன்றும் தோன்றவில்லை!”

“உங்கள் கேள்விக்கு சுகர்ணோ என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்?”

“சொல்லுங்கள்.”

“தவறு. ஊழல் எதுவும் நடக்கவில்லை. நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?”

“அதானே!”

“பதிலை நன்கு கவனியுங்கள். ஊழல் குற்றச்சாட்டுப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது மகா நழுவலான பதில். சமாளித்தார்.”

“அதானே! இந்தக் கோணத்தில் என் பாணியில் விசாரிக்கிறேன். சுகர்ணோவை மறுபடி பார்க்கிறேன். நீங்கள் கேட்ட கேள்வியை நாகரிகமான முறையில் கேட்கிறேன்.”

நன்றாக! கபடிக் கபடியில் ஏறி உள் கோடு வரை வந்த ரெண்டி விட்டுலர், இப்போது நான் அவரது களத்திற்குள் நுழைந்து அவரது எல்லைக்கோடு வரை நுழைந்துவிட்டதைப் போல் உணர்ந்தவராகத் தெரிந்தார்.

(தொடரும்)

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Most Commented Posts


Leave a Reply