இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
கடைக்காரப் பெண்ணிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்கப்போக, உங்களைப் போன்றவருடன் படம் எடுத்துக் கொள்ள நான் அல்லவா சந்தோஷப்பட (சத்தியந்தாங்க!) வேண்டும் என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.
இதன்பிறகு எனக்கு இந்தோனேசியப் பெண்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்கும் விஷயத்தில் தயக்கமே விட்டுப் போயிற்று. கேட்டதும் சற்றே வெட்கப்பட்டுத் திரும்பிக் கொள்வது; பிறகு சம்மதிப்பது; பிறகு பெருமிதமாக போஸ் கொடுப்பது என்று சொல்லி வைத்தமாதிரி நடந்தது.
அப்படிப் படம் எடுத்துக் கொள்ளும்போது சுற்றிலும் ஒரு பெருமிதப் பார்வை பார்! நான் அழகாக இருப்பதால்தானே உங்களையெல்லாம் விட்டுவிட்டு என்னோடு படம் எடுத்துக்கொள்கிறார் என்பதே அந்தப் பெருமிதம்.
மறுத்த ஓரிரு பெண்கள்கூட இதமான புன்னகையுடன் மறுத்தார்களே தவிர, பார்வையில் வெறுப்பையோ, கோபத்தையோ உதிர்க்கவில்லை என்பது எனக்கு வியப்பாக இருந்தது.
இந்தோனேசியப் பெண்கள் பெரும்பாலும் உயரக் குறைவாகவே இருக்கிறார்கள். நான்கரை அடி, ஐந்தடியில் இவர்களது உயரம் முடிந்துவிடுகிறது. மங்கோலிய இனத்தினர் உயரக் குறைவாக இருந்த காலமெல்லாம் மாறி வருகிறது. ஜப்பானியர்கள், சீனர்களின் சராசரி உயரம் இப்போது அதிகரித்துவிட்டது. இந்தோனேசியர்களின் உயரம் இன்னும் இப்படி அதிகரிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. சீனர்களும், ஜப்பானியர்களும் உண்ணும் ஊட்டமான உணவினை இந்தோனேசியர்கள் இன்னும் பின்பற்றவில்லையோ என்று தோன்றுகிறது.
இந்தோனேசியப் பெண்களை ஒருவிதத்தில் பாராட்டவேண்டும். அடுக்களைப் பெண்களாக இருக்க இவர்கள் விரும்பவில்லை. பெரும்பாலும் ஏதேனும் வேலை செய்து சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
பல வணிக வளாகங்களுள் நுழைந்து பார்த்தபோது ஆண்களைவிடப் பெண்களே கடைகளின் பொறுப்பாளர்களாக உரிமையாளர்களாக இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். பலர் முகம் மட்டும் தெரியும்படி முறையாக உடை உடுத்தியிருந்த கண்ணியத்தையும் கண்டேன்.
தபால் நிலையங்கள் இந்த நாட்டில் இரவு 10.00 மணி வரை இயங்குவது எனக்கு அதிசயமாகப்பட்டது.
பத்திரிகைக் கடையில் அன்றாட நாளிதழ்களைக் கூவிக்கூவி விற்பது விநோதமாக இருக்கிறது. ஜகார்தா போஸ்டை, விற்றவர் விநோதமாக உச்சரிக்க அருகே போய் என்னதான் விற்கிறார் என்று பார்த்தேன்.
உலகமெங்கும் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை விற்கும் சிறுசிறு நிறுவனங்கள் கூட இரவில் வெகு நேரம் வரை இயங்குவதும் இவ்வூர் அதிசயம்.
டி-ஜகார்தா என்பது இங்கே நன்கு விற்பனையாகும் மாத இதழாகும். ஆங்கிலத்தில் கிடைக்கிறது. இதில் இளைஞர்களுக்கான கதைகள் என்று புராணக் கதைகளை வெளியிடுகிறார்கள். ஆபாசம் துளியும் இல்லை. டி.ஜகார்தா அலுவலகம்போய் அதன் ஆசிரியரைக் கட்டித் தழுவிக்கொள்ளலாம் போல (அடேய்! பெண்மணியாக இருக்கப் போகிறார் பார்த்து) இருந்தது.
பாஷா ஜகார்தா என்று ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். பாஷை என்கிற அதே அர்த்தம்தான் இதற்கும். இந்தியத் தாக்கம் இங்கு நிறைய உண்டு என்பதற்கு இவ்விதழ் ஒரு நல்ல முன்னுதாரணம். இதில் ஒரே கதைகளாக உள்ளன.
டூரிஸ்ட் பிரைசஸ் என்ற கடையின் பெயர் எனக்கு மிகப் பிடித்துப் போகவே சுற்றுலாப் பயணியின் பரிசுகளுக்குள் (கடைக்குள்) நுழைந்தேன். பிலிம்களை டெவலப் செய்து நேரங்கெட்ட நேரத்திலும் பிரிண்ட் போட்டுத் தரும் கடை இது. ஒரு பரிசும் இல்லை. பெரும்பாலும் பியூஜி பிலிம்களே இந்நாட்டில் அதிகம் காண முடிகிறது.
இந்தோனேசியாவில் ஜகார்தாதான் அதிகப் பாதுகாப்பு என்கிறார்கள். உல்லாசப் பயணிகள் அதிகம் ஒன்றுகூடும் மற்ற ஊர்களில் அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. இதனாலேயே இந்த நாட்டில் அழகழகான தீவுகளும், அமைதியின் உறைவிடங்களும் இயற்கை எழில் கொஞ்சம் இடங்களும் நிறைய இருந்தும் கூட்டம் வர மறுக்கிறது. பட்டாவியா பார்க்கிறீர்களா? என்று இந்தப் பெயரிட்ட பனியனை அணிந்த ஒருவர் என்னை மடக்கினார். இவர் ஒரு சுற்றுலா நிறுவன ஊழியராம். அங்கே என்ன இருக்கிறது என்று ஒரு கேள்விதான் கேட்டேன். மளமளவென்று பாடம் எடுக்கும் பேராசிரியர் ஒருவரைப் போல மூச்சு விடாமல் பேச ஆரம்பித்துவிட்டார். இவரை ஆஃப் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
பண்டைய டச்சு நகரமாம் இது. டச்சுக்காரர்கள் விட்டுச் சென்ற பல சரித்திர அடையாளங்களைக் காணலாம் வாருங்கள் என்றவர் பியூட்டிபுல் என்று ஆரம்பித்து பலரும் பாடும் பல்லவியை இவரும் பாடினார்.
மன உறுதியும், சுய கட்டுப்பாடும் ஒழுக்க இயல்பும் இல்லாவிட்டால் இந்தோனேசியாவில் கற்பை இழக்க வேண்டியதுதான். ஐய்யோ! பயங்கரம்பா சாமி!
S.O.S. Medika Klimik என்கிற விநோத ஸ்பெல்லிங்குகளுடன் ஒரு மருத்துவமனையைப் பார்த்தேன். என்ன விசேஷம் இங்கு? என்றேன். இந்த மருத்துவமனை குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்குமாம். இங்கு பணிபுரியும் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுவார்களாம். இதை ஏதோ பெரிய செய்தியாகச் சொன்னதிலிருந்து மற்ற மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உட்பட ஆங்கிலம் பேச மாட்டாதவர்களாக இருப்பார்கள் என்பது தெரியவருகிறது. ஆங்கிலம் தெரியாத மருத்துவர்! என்கிற தலைப்பில் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தேன். காய்ச்சல் வரும்போல இருந்தது எனக்கு.
‘தி ஜகார்தா போஸ்ட்’ இதழை வாங்கி புரட்டியபோது ஒரு முக்கியமான தலைப்பை அது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருந்தது.
இந்தோனேசியாவில் பல்லாயிரம் இளம் பெண்கள் வீட்டு வேலைக்காகவும் பாலியல் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதே தி ஜகார்தா போஸ்டின் கவலைத் தொனியாகும்.
இவர்களைக் காக்கச் சரியான சட்டங்கள் இல்லை என்று அதில் படித்துத் தெரிந்துகொண்டபோது, அடடே! இந்த அடிப்படை கூடவா இங்கு ஆட்டம் காண்கிறது என்று சற்றே பதற்றம் கண்டது மனம்.
12 முதல் 15 வயதுப் பெண்கள் காலை 4.00 மணிக்கு எழுப்பி விடப்பட்டு, இரவு 10.00 மணி வரை வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டுச் சக்கையாகப் பிழியப்படுகிறார்கள்.
இந்த வேலைக் கொடுமை போதாதென்று வேலை செய்யும் இல்லத்து ஆண்களுக்குப் பாலியல் அடிமைகளாகவும் இருக்கிறார்கள்.
எச்.ஆர்.டபிள்யூ முகமது அலி என்பவர் ஊடகங்களை அழைத்து என்னதான் செய்கிறது இந்த அரசு, இவர்களைக் காக்க ஏற்பாடு செய்யாமல் என்று விளாசியிருந்தார்.
இந்தோனேசிய ஊழியர் சட்டத்தில், வீட்டு வேலை என்கிற பெயரால் பிழியப்படும் பெண்களை, தவறான வழியில் பயன்படுத்தப்படும் பெண்களைக் காக்கும்படியாக ஒரு வரிகூட இல்லையாம்.
இவர்களுக்கு விடுமுறைகள் இல்லை. குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் பற்றி ஏதும் விதிகள் இல்லை.
முகமதலி இக்குற்றச்சாட்டுகளைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், 44 சிறுமிகளைப் பேட்டி கண்டு ஆதாரப்பூர்வமாக எடுத்துப்போட்டு, அதையும் நூல் வடிவாக்கி, ஊடகச் சந்திப்பில் அந்நூலை வேறு உயர்த்திப் பிடித்து போஸ் கொடுத்துவிட்டார். பெரிய விவகாரமாக வெடிக்கும் இது என்று தோன்றியது.
இந்தோனேசிய அரசு இதைப் புறக்கணித்தாலும் உலக மனித உரிமை ஆணையம் முதமதலியின் ஆதாரபூர்வ நூலைப் பிடித்துக்கொண்டு தொங்கும் என்று தோன்றியது.
சிகரெட்டால் இவர்களைச் சுடுவது, பிரம்பு கொண்டு தாக்குவது போன்ற கொடுமைகளும் இவர்களுக்கு இழைக்கப்படுவதை வெட்டவெளிச்சமாக்கியிருந்தார் முகமதலி.
இந்தோனேசியாவில் 26 இலட்சம் வீட்டு வேலைப் பெண்கள் இருக்கிறார்களாம். இவர்களுள் 64,000 பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்களாம். அனைத்தையும் புள்ளி விபரமாகத் தந்து, வெளுத்து வாங்கியிருந்தார் முகமதலி.
ஒன்று இந்தோனேசியப் பெண்களுக்கு நன்மை நடக்கப்போகிறது, இல்லாவிட்டால், முகமதலிக்குக் கெடுதல் காத்திருக்கிறது என்று பட்டது எனக்கு.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































