» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 4 Sep 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம்
உத்தாளம் (நறுவிலி) (CORDIA MYXA ROXB, CORDIA ANGUSTI FOLIA)

சிறுநறுவிலி , நறுவிலி மரம், நறுவலி, நறுவிளி, நறுவுளி, சீதம் எனும் வெவ்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இம்மரம் இந்தியாவெங்கும் வளர்க்கப்படுகிறது. ஆனால் வங்காளத்தில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. மிகுந்த செழிப்புடன் வளர்ந்து, நிழல் கொடுக்கும் மரமாக விளங்குகிறது. பட்டை சாம்பல் நிறத்துடனும், பல வெடிப்புகள் கொண்டதாகவும் இருக்கும். காய்கள் குலைகளாய் காய்த்துக் தொங்கும். இதன் பழங்கள் வழவழப்பாய் இருக்கும். சிறுநறுவிலி, பெருநறுவிலி என்ற 2 வகை இருந்தாலும் இரண்டின் குணமும் ஒன்றே போல் உள்ளதை அறியலாம்.

இம்மரம் ‘கார்டியா அங்குஸ்டி போலியா’ (CORIDIA ANGUSTI FOLIA) என்னும் அறிவியல் பெயர் கொண்டு ‘கார்டியேசி’ என்னும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்ததாகம். ஜனவரி மார்ச் மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

இம்மரத்தின் வடநாட்டில் உள்ள ஆலயங்களில் தலவிருட்சமாக வைத்து வணங்கப்படுவதாக “தி ஸ்பிரிட் ஆப் பியூட்டிஃபுல் ட்ரீஸ்” என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இதன் இலை, பழம், கொட்டை, பட்டை முதலியவை மருத்துவ பயன்களுக்கு உதவுகின்றன. துவர்ப்பு, சிறுகைப்புச்சுவை கொண்டதாகவும், வெப்பத்தன்மை கொண்டும் விளங்குகிறது.

இலையும், பட்டையும் துவர்ப்புச் சுவையுடனும், பழம் சிறிது இனிப்புச் சுவையுடனும், விளங்குகிறது.

இலை : இது இரைப்பு நோயை நீக்குகிறது. இலையைப் பொடி செய்தாவது அல்லது குடிநீர் செய்தாவது சாப்படிட வேண்டும்.

இலையைப் பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தெரியும் பரு அல்லது கொப்புளங்களுக்குத் தடவி வந்தால் குணமாகும்.

பழம் : பழத்தை ஊறுகாய் செய்து சாப்பிடலாம். இதனை இருமலுக்கு கொடுத்து வந்தால் குணம்பெறும். நெஞ்சில் உள்ள கோழையை அகற்றுவதுடன் ஆண்மையைப் பெருக்குகிறது.

கொட்டை : கொட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்லரணை நோய், பல் ஆடும் தன்மை, ஈறுவீக்கம் இவைகள் குணமாகும்.

பட்டை : பட்டையை இடித்து சாறுபிழிந்து, தேங்காய்ப் பாலுடன் கலக்கிக் குடித்து வந்தால் அதிகமான வயிற்று வலிகூட விலகும்.

வேர் : வேர், எலும்புருக்கி நோயைக் குணமாக்குகிறது.

பிற செய்திகள்
கியூபா, இந்தியா முதலிய நாடுகளில் 12 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. கிராமப்புற மக்கள் இதன் பழங்களைப் பெரிதும் உண்ணுகின்றனர். மருத்துவ பயன்பாடுகளிலும், படகுகள் செய்ய, கிணறு வேலைகளுக்கும், விவசாய கருவிகள் செய்யவும் மரம் பயன்படுகிறது. பல்கலைக் கழக சாலைகள், கிராமப்புறங்கள், பொது இடங்கள், விளையாட்டு அரங்க மைதானங்களில், நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களில் இந்த மரங்கள் அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்குத் தீவனமாவதுடன், காற்றுத் தடுப்பு மரமாகவும் விளங்குகிறது.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தனது 29-வது வயதிலேயே மரணமடைந்த ஜெர்மன் தாவரஇயல் அறிஞர் “வாலேரியஸ் கார்டஸ்” என்பவரின் நினைவாக “கார்டியா” என்ற முதற்பெயர் வைக்கப்பட்டதாக குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

தற்போது இராஜஸ்தான், மேற்கு மலைத் தொடர்ச்சி மலைக்காடுகள் மற்றும் வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் 500 மீட்டர் முதல் 800 மீட்டர் வரை கடல்மட்ட உயரத்தில் வளருகிறது. இம்மரத்தை சுருக்கமாக முகமுக்கி மூக்குச்சளிப்பழ மரம் எனவும் அழைக்கிறார்கள்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

இந்தியாவின் வடநாட்டின் சில பகுதிகளில் உள்ள கோயில்களில் தலவிருட்சமாக நறுவிலி வணங்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குத்தாலத்தில் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சமாக உத்தலா எனவும், நறுவிலி எனவும் அழைக்கப்படும் இந்த விருட்சத்தை வணங்குகின்றனர்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply