Thursday, 3 Sep 2009
வரம் வாங்கிவந்த தமிழ்மகன் வலம்புரி ஜான்! -ஆடியோ
வலம்புரி ஜான் தமிழுக்கு வலம்புரி சங்காகத் திகழந்தவர். கலைஞர் கருணாநிதிக்கு அடுத்த, அவருக்கே பிடித்த கம்மக்குரலோன். இவர் மூச்சில் கூட தமிழ் கலந்திருக்கும். எழுத்திலும் பேச்சிலும் தமிழர் உள்ளங்களில் தன்னை நிரந்தரமாக ஒட்டிக்கொண்டவர்.
இவர் நாவில் மட்டும் தமிழன்னை ஆடிய ஆட்டங்கள் மறக்க முடியாதவை. வரம் வாங்கிவந்த தமிழ்மகனான இவர் சிங்கப்பூரில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சிகரங்கள் 2001′ விழாவில் பேசிய பேச்சு இது.
‘தொண்டை ஒத்துழைக்காவிட்டாலும் தமிழுக்கு என் தொண்டை செய்யாமல் இருக்க முடியாது’ என்ற இவருடைய பேச்சு பேச்சல்ல, அது அனைவர் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்துள்ள வீச்சு!
கேட்டுப் பாருங்கள் தெரியும்.
Click + symbol to hear Valampuri John speech

































June 30th, 2010 at 9:26 pm
அருமையான சொற்பொழிவு…
வலம்புரி ஜான் அவர்கள் மறைந்தாலும் அவருடைய பேச்சு
என்றும் நமக்குள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவையாக
நமக்குள் இருக்கும்.
நன்றி.