இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
ஜாகர்த்தா நகரம் பற்றித் தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் ஏற்பட்டபோது நான் உள்ளூர் வழி காட்டிகளைத்தான் அணுகியிருக்க வேண்டும்.
ஆனால் இதைச் செய்ய விரும்பவில்லை. காரணம், அவர்களும் பியூட்டிபுல் இந்தோனேசியன் லேடீஸ் என்று ஆரம்பித்துவிடுவார்களோ என்கிற அச்சம்தான் காரணம்.
ஜாகர்தா பற்றிய தகவல்களைத் தர யாரை அணுகலாம் என்று ஓட்டல் வரவேற்பாளரை அணுகினேன். அவர், “சாரினா டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் என்று டாக்சிக்காரர்களிடம் கேளுங்கள். ரொம்பப் பிரபலம் இங்கு. இதற்கு நேர் எதிரே ஜாகர்தா சுற்றுலாத் தகவல் மையம் இருக்கிறது. அவர்கள் எல்லா விவரங்களையும் தந்து உதவுவார்கள்” என்றார்.
ஓட்டல் வரவேற்பறை மனிதர் சொன்னது சரி. சாரினா ஸ்டோர் என்றதுமே தலையாட்டிவிட்டு, என்னைக் காரில் உட்கார வைத்து, ஒரு நிரந்தர முதலாளிக்குத் தரக்கூடிய மரியாதை தந்து, குனிந்து வணக்கம் சொல்லி, கதவைச் சாத்திவிட்டு வாகனத்தை வலம் வந்து பிறகு தன் இருக்கையில் அமர்ந்து ஒட்ட ஆரம்பித்த விதம், அட டாக்சிக்காரர்கள் தற்காலிக முதலாளிக்கு இப்படிக் கூட மரியாதை தரமுடியுமா என வியந்தேன்.
இந்தோனேசியா அப்படி ஒன்றும் வசதி படைத்த நாடு அல்ல. ஆனால், ஜாகர்தாவின் தெருக்களின் விசாலமும், கடைகளின் பெருக்கமும் அவற்றில் காணப்பட்ட ஆடம்பரங்களும் இது ஏதோ வசதி படைத்த நாடுபோல் தோற்றமளிக்கச் செய்கின்றனவே என்று வியப்படைந்தேன்.
சாரினா ஸ்டோர் வந்ததும் வேகமாக இறங்கி, நான் அமர்ந்திருந்த பக்கம் சுற்றி வந்து கதவைத் திறந்து, தன் கறுப்புப்பூச்சிப் பற்கள் தெரியச் சிரித்து, மீட்டர்படி நான் கொடுத்த காசை ‘ங’ப்போல் வளைந்து பெளயமாயப் பெற்றுக் கொண்டார் அந்த டாக்சி ஓட்டுநர்.
ஜாகர்தா சுற்றுலாத் தகவல் மையத்தில் நல்ல கூட்டம். காத்திருந்துதான் சில தகவல்களைப் பெற முடிந்தது.
கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் சலிப்படையாமல் பதில் சொல்கிற நேர்த்தியை நாம் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு பேர்களைச் சந்திக்கிற இடத்தில் அமர்ந்து கொண்டு உண்மையோ, செயற்கையோ எப்படி இப்படி முகம் மாறாமல் பதில் சொல்ல முடிகிறது என வியந்தேன். ‘சரி சரி எழுந்திரு’ என்கிற அவசரமும் காட்டவில்லை. நாம் திருப்தி அடைந்துவிட்டோமா என்று அக்கறைப்பட்டு அதை உறுதி செய்து கொண்டதும்தான் அடுத்த நபரை அழைக்கிறார்கள். ஜாகர்த்தாவின் உண்மையான பெயர் ஜெயாகாரத்தாம். இதன் பொருள் வெற்றி நகரமாம். அட! ஜெயம் - வெற்றி அதேதான்.
ஆரம்ப காலத்தில் இந்திய மன்னர்களால் ஆளப்பட்டிருப்பதால் வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தின் தாக்கமும் இராமயணக் கதைகளின் தாக்கமும் நன்றாகவே இருக்கிறது.
இந்திய வரலாற்றிற்கும் இந்தோனேசிய வரலாற்றிற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக உணர்கிறேன்.
போர்ச்சுகீசியர்கள் நறுமணப் பொருள்களை வாங்குவதற்காக இங்கு வந்து, மெல்ல உள்ளூர் மக்களைச் சிறுசிறு போர்களில் வீழ்த்தி, தங்களது வியாபார நோக்கிலிருந்து மாறி, நாடு பிடிக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டனர். 1522 முதல் 1527 வரை இந்த வேலையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள். இதன்பிறகு குனூர்சிகாரிதி என்கிற உள்ளூர்ப் பிரிவு மக்கள் போர்ச்சுகீசியரை மிரட்டி ஜாகர்த்தா நகரைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
போர்ச்சுகீசியர்களை விரட்டி, நகரத்தைப் பிடித்ததால்தான் இந்த ‘ஜெயா’கர்தா என்கிற பெயரெல்லாம்.
போர்ச்சுக்கீசியர்களுக்குப் பிறகு டச்சுக்காரர்கள் சற்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் தாத்தாவான பிரிட்டிஷ் படைக்கும் ஏகமாய்ச் சண்டை நடந்திருக்கிறது.
உள்ளூர் மக்களை ஆதரிப்பது போல் நடித்து, அவர்களது போர்வையில் உள்ளே நுழைந்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தைச் சாமர்த்தியமாகக் குறைத்திருக்கின்றன பிரிட்டிஷ் படைகள்.
“வங்கியில் சற்று வேலை இருக்கிறது. வங்கி இங்கு எத்தனை மணி வரைக்கும்?” என்று தகவல் மையத்தில் கேட்டேன்.
“காலை 8 முதல் 4.00 வரைக்கும்தான் வங்கி. மணி 3.30 ஆகிறது. உடனே புறப்படுங்கள்” என்றார்கள்.
“அரை மணி நேரம் இருக்கிறதே இன்னும்” என்றேன்.
“தலையை எண்ணி 3.45க்கெல்லாம் கதவைச் சாத்திவிடுவார்கள்” என்றாள் அந்தத் தகவல் மையப் பெண்மணி.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் வெளிப்பாடாக சனி அரை நாள், ஞாயிறு விடுமுறை எனும் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது. பொதுவாக முஸ்லீம் நாடுகளில் வியாழன் அரை நாள், வெள்ளிதான் விடுமுறை. இந்தோனேஷியா உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு. ஆனால், ஏனோ பிரிட்டிஷாரின் தாக்கம் இங்கு இன்னமும் தொடர்கிறது.
பிரிட்டிஷார் ஆண்ட நாடு என்பதால் எங்கு போனாலும் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சமாளிக்க முடிகிறது.
இங்கு மக்கள் தொகை அதிகம் என்பதால் எங்கு போனாலும் கூட்டம், கியூ நெரிசல்.
ஆனால், நெருக்கடி, அடிதடி இல்லை. அமைதியான பரபரப்பை மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
சாரினா டிப்பார்ட்மென்ட் ஸ்டோர், சற்றே வசதி படைத்தவர்களுக்கானது என நினைக்கிறேன். பார்க்க அப்படித்தான் தோன்றியது.
எனவே, சற்றுத் தொலைவு நடந்து, ஒரு மிகப்பெரிய கடைத்தொகுதிக்குள் நுழைந்தேன்.
ஏகப்பட்ட சிறுசிறு கடைகள். என்னைப்போல் வந்த இடத்து ஏழைகளுக்கு ஏற்ற கடைகள்.
இந்தோனேசியப் பெண்கள் நல்ல உழைப்பாளிகளாகத் தெரிகிறார்கள். பெரும்பாலான கடைகளைப் பெண்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
மலேசிய முஸ்லீம் பெண்களைப் போல், தலைமுடியை மறைக்கும் வகையில் தலையில் துணி சுற்றியிருக்கிறார்கள். பர்தா முறையை அதிகம் காண முடியவில்லை.
எடுத்த எடுப்பில் ஒரு கடைப்பெண்ணிடம் உன்னுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவா எனக் கேட்கலாம் என்று யோசித்தவன், வேண்டாம் முதலில் ஒரு பொருளை வாங்குவோம். அப்படியே பேச்சுக்கொடுத்து போட்டோவுக்கு அனுமதி கேட்போம் என முடிவு செய்தேன்.
வியாபாரத்தை முடித்துக்கொண்டு உங்களுடன் ஒரு படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்கப் போக, அந்தக் கடைக்காரப் பெண் பதிலுக்குச் சொன்னது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































