Friday, 28 Aug 2009
மாங்கொட்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்
உப்பில் ஊற வைத்து, காய வைத்த மாங்கொட்டைகள்
மாங்கொட்டைகள் - 3 (அ) 4
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு சின்னக் கட்டி
மிளகாய் வற்றல் - 10
மல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 6 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு :
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
மாங்கொட்டைகளை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், மல்லிவிதை இரண்டையும் வறுத்து, வறுபட்டதும் மிளகு, சீரகத்தைச் சேர்த்துக் கிளறி உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, கரைத்த புளி, உப்பு, வெல்லம், அரைத்த மசாலா எல்லாம் சேர்த்துக் கொதிக்க வைத்து, கொதி வந்ததும் மாங்கொட்டைகளைப் போட்டு நன்றாகக் கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
குறிப்பு : மாங்கொட்டையில் செய்யும் பக்குவத்தில் மாங்காய் வற்றலிலும் குழம்பு செய்யலாம்.இதற்கு மாங்காய் ஊறுகாய் செய்யும்போது மீதமாகும் மாங்காய்த் துண்டுகளை உப்பில் ஊற வைத்து வெய்யிலில் காயவைத்து எடுத்து ஜாடிகளில் வைக்கவும். வெய்யில் காலத்தில் இது மாதிரி வற்றல் செய்து வைத்துக் கொண்டு தேவையானபோது மா வற்றல் குழம்பு செய்யலாம்.
Chettinadu Samayal
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































