Friday, 28 Aug 2009
வளமான வாழ்விற்கு உணவே மருந்து (இயற்கை மருத்துவ நூல்) - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,
உணவே மருந்து
ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். வயிறு பசி ஆற மட்டும் உண்டால் போதும் என்ற கணக்கெல்லாம் செய்து கொள்ளாமல், நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வாழ்கிறோம் என்று எண்ணினால், நோய் நொடியற்ற வாழக்கை வாழலாம். நல்ல உணவு முறையைப் பின்பற்றினால், தோல் நோய், கறுத்த சருமம், சொறி, அரிப்பு, உலர் சருமம் ஆகியவற்றிலிருந்த நம்மைக் காத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கலாம்.
இப்போது எதற்கெல்லாமோ ‘ரெடிமேட்’ வந்துவிட்டது. குழந்தைகளின் ‘பிரேக்பாஸ்ட்’ என்ற பெயரில் ரெடிமேட் வகையறாக்கள், குழம்பு பேஸ்ட், புளியோதரை மிக்ஸி, ரெடிமேட் இட்லி, தோசை, உப்புமா மற்றும் இனிப்பு வகையறாக்கள், அவ்வளவு ஏன் வத்தக்குழம்பு கூட ரெடிமேட் பேக்கில் விற்கப்படுகிறது. இவற்றை பதப்படுத்த ரசாயனம் கலக்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் வெறும் ரெடிமேட் உணவு வகைகளையே சாப்பிட்டு உடலை வளர்த்தால் உடல் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க என்ன முயற்சி செய்தாலும் முடியாது. அளவுக்கதிகமான தானியங்கள், பால்பொருட்கள், ஆகியவற்றை உண்டால் உடல் என்னாவது? பழங்களையும், காய்கறிகளையும், முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக சேர்க்காமல் ஒதுக்கினால் அதைவிட தீங்கு வேறு ஏதும் இல்லை என்பதோடு, உடலுக்கு அத்தியாவசிய தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடும்.
பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், மற்றும் அளவான தானிய வகைகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகள், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மகப்பேறு பாதுகாப்பு, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வது போன்ற பல ஆரோக்கியமான வழிவகைகளை பெறமுடியும். நீங்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றினால் போதும்.
தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற தண்ணீர் மிக மிக அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் பூசணிக்காய், பரங்கிக்காய், பாவற்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை, புளி, மோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பார், ரசம் போன்றவற்றில் இவற்றை சேர்ப்பதாலும், அல்லது கூட்டு, பொறியல் செய்தோ சாப்பிடுவது சிறந்த பலனை அளிக்கும்.
அதேபோல் தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கன்னிக்கீரை, கரிசலாங்கன்னிக்கீரை ஆகியவற்றில் கூட்டோ, பொறியலோ செய்து சாப்பிடலாம். அதுபோன்றே தினமும் அருகம்புல் ஜூஸ், தேன் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் தாயகத்தில் தான் கிடைக்கும் என்றாலும் ஒரு சில தமிழ்க் கடைகள், சீனர்களின் கடைகளில் இங்கு கிடைக்கின்றன. இவை கிடைக்காத பட்சத்தில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா துவையல் செய்து சாப்பிடலாம். மதிய நேரங்களில் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, வேக வைத்த பயிறு வகைகள் மற்றும் சோயா பால் மிகவும் உகந்ததாகும்.
இரவு நேரங்களில் படுக்கப் போவதற்கு அரை மணி முன்பாக ஒரு டம்ளர் பாலில் பனற்கற்கண்டு, தேன் சேர்த்து சாப்பிடுவது இரவு நல்ல நித்திரையளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். அதுபோன்றே காலை, மாலை என இருவேளை நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதின் மூலம் சுத்தமான காற்றை சுவாசித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கிக் கொள்வதோடு, இப்பயிற்சிகளை தினமும் அனுசரிப்பது நமது இதயத்திற்கு மிகவும் பலத்தை அளிக்கும்.
அன்றாடம் குளிப்பதற்குக் கூட அதிகமாக சோப்பை பயன்படுத்தாமல் கடலை மாவு, பயத்தம் மாவு, தேய்த்துக் குளித்தல் மற்றும் வாரம் ஒரு தடவை எண்ணெய் குளியலும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
வெய்யில் காலங்களில் பருத்தி ஆடைகளை அணிவதும் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றமானதாகும். இவ்வாறாக உடலை பாதுகாத்துக் கொள்ள இயற்கை உணவை நாம் தினமும் பழக்கப்படுத்திக் கொள்வதோடு கூடுமான வரை மனதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல், பிரார்த்தனை, தியானம், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள், யோகா போன்றவற்றை அனுசரிப்பதாலும் மனதில் எப்போதும் குதூகலமும், அமைதியும் ஏற்பட்டு மகிழ்ச்சியையும் மன நிறைவையும், அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமே இல்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - வாழ்வது ஒரு முறைதான - வாழ்க்கை வாழ்வதற்கே அதற்கு உணவே மருந்தாக இறைவன் அளித்துள்ளான். சிறந்த உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.
(தொடரும்)
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































